உளவியலாளர் வாட்சன் செய்த கொடூரமான ஆல்பெர்ட் பி சோதனை!

 









இருபதாம் நூற்றாண்டின்போது, பல்வேறு உளவியலாளர்கள். மனத்தை புரிந்துகொள்ள முயன்றனர். அதன்படி ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை வழியாக பல்வேறு சோதனைகளை செய்து வந்தனர். 

குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட சூழ்நிலை வழியாக மனத்தை அறிய முயற்சி செய்தனர். இதன் மறைமுகமான அர்த்தம், அவர்கள் செய்த பல்வேறு சோதனைகள் வேலைக்கு ஆகவில்லை என்பதேயாகும். 

ஜான் வாட்சன், தோர்ன்டைக் என்ற ஆய்வாளரைப் போலவே குண இயல்புகளை தீவிரமாக ஆராய்ந்தார். கூறிய கருத்துகளும் சர்ச்சைக்குரியவைதான் இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு கொண்ட உளவியலாளராக செயல்பட்டார். இதன் காரணமாக இவரை குண இயல்புகள் சார்ந்த ஆராய்ச்சிகளின் தந்தை என பிறர் புகழ்ந்தனர். அழைத்தனர். 1913ஆம் ஆண்ட சைக்காலஜி ஏஸ் தி பிஹேவியரிஸ்ட் வியூஸ் இட் என்ற தலைப்பில் வாட்சன் உரையாற்றினார். இந்த உரைதான் குண இயல்பு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியமான செயல் அறிக்கை என்று கருதப்பட்டது. இதில், அறிவியல் முறையிலான உளவியல் என்பது மனநிலைகளுக்கான ஆராய்ச்சியை விட முன்முடிவுகள், குணத்தை கட்டுப்படுத்தும் இயல்பு ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். 


பால்டிமோரிலுள்ள ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் வாட்சன் ஆராய்ச்சிகளை செய்துவந்தார். எலி, குரங்குகளை வைத்து விலங்குகளின் குண இயல்புகளை ஆராய்ந்தார். மனிதர்கள் மூன்று வித அடிப்படை இயல்புகளை கொண்டிருப்பதாக கருதினார். பயம், சீற்றம், அன்பு ஆகியவையே மூன்று இயல்புகள். ஒருவரை செயல்களைச் செய்ய தூண்டுதல் செய்ய மேற்சொன்ன மூன்று விஷயங்களே காரணமாகின்றன என வாட்சன் கருதினார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த சோதனை முறை அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்று கொடூரமானதாக கருதப்படுகிறது. ஆல்பெர்ட் பி என்ற சோதனையில் ஒன்பது மாத குழந்தையை தனது உதவியாளர் ரோசாலி ரெய்னர் மூலம் ஈடுபடுத்தினார். அந்த குழந்தையிடம் ஒரு விலங்கை இரைச்சலோடு அறிமுகப்படுத்தி, குழந்தை மனதில் பயம் உருவாகிறதா என சோதித்தார். பல்வேறு விலங்குகளை இதேபோல காட்டினார். குழந்தையின் மனதில் உருவாகும் பயம் எத்தனை நாட்கள் இருக்கிறது, குறைகிறதா, முழுக்க நீங்குகிறதா என்று பார்த்தார். 

இதன் அடுத்தகட்டம் இன்னும் வேறுமாதிரி இருந்தது. உணர்ச்சிகள் இல்லாத குழந்தையிடம் நாய், வெள்ளை எலி, குரங்கு, முகமூடி, நெருப்பில் எரியும் காகிதம் ஆகியவற்றைக் காட்டி சோதித்தார். இதன்மூலம் குழந்தையிடம் பயம் உருவாகிறதா என சோதித்தார். ஆனால் குழந்தை வாட்சன் காட்டிய விலங்குகள், பொருட்கள் ஆகியவற்றைப் பார்த்தபோதும், சிலவற்றை தொட்டபோதும் கூட பயத்தைக் காட்டவில்லை. 

ஒரு இரும்புத்துண்டை சுத்தியலால் ஆல்பெர்ட் எதிர்பாராதபோது அடித்து அதிர செய்தார். அந்த இரைச்சலில் குழந்தை பயந்து கண்ணீர் சிந்தியது. வாட்சன், குழந்தையை ஹிப்னாட்டிசம் செய்து விலங்குகள் மீது பயம் கொண்டிருப்பதாக நம்ப வைத்தார். எலியை ஆல்பெர்ட் உட்கார்ந்திருந்த படுக்கை மீது வைத்தார். அதை குழந்தை தொட முயலும்பது இரும்புத்துண்டை சுத்தியலால் அடிக்க செய்தார். இப்படி செய்த சில முறைகளில் எலியை அறைக்குள் பார்த்தாலே ஆல்பெர்ட் பயப்படத் தொடங்கினான். இப்படிப்பட்ட சூழல்களில் சுத்தியலால் கூட அடிக்கும் தேவை இருக்கவில்லை. 


வாட்சன் செய்த சோதனை பாவ்லோவ் நாய்களின் மீது செய்த சோதனைகளை நிரூபிப்பது போலவே இருந்தது. எலியை வைத்து அதை தொடும்போது இரைச்சல் எழுப்பப்பட்டது. இதன் மூலம் எலியை பார்க்கும் குழந்தை மனதில் இரைச்சலின் வழியாக உருவாகும் அதிர்ச்சி, பயமாக மாறியது. இந்த பயம் உடனே மறைவதாக இல்லை. அதுதான இதில் முக்கியம். வெள்ளை நிற எலியைப் பார்த்தாலே இரைச்சல் ஏதுமில்லாமல் உருவான பயம், அதைப்போன்ற நிறமுடைய பிற விலங்குகளுக்கும் அப்படியே பரவியது. இதன் மூலம் மனிதர்களின் குண இயல்புகளை குறிப்பிட்ட இயல்பில் வடிவமைக்க முடியும் என்பதை வாட்சன் நிரூபித்தார். பின்னாளில் ஆல்பெர்டை அவரின் தாய் சோதனையில் இருந்து விடுவித்து எடுத்துச் சென்றுவிட்டார். இதைக்கூட வாட்சன், இப்படி தாய் நடந்துகொண்டது குழந்தை மீதுள்ள பயம் பதற்றம் என்று கருத்து சொன்னார். 


லிட்டில் ஆல்பெர்ட் சோதனை வெளி உலகிற்கு தெரிய வந்தபோது வாட்சனின் ஆய்வாளர் வேலை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. தனது ஆய்வு வேலைகளோடு, உதவியாளர் ரோசாலி ரெய்னர் உடன் காதல் உறவும் கொண்டிருந்தார். இதெல்லாம் அவரது ஆய்வு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர போதுமானதாக இருந்தது. பேராசிரியராக பார்த்த வேலையை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டார். உதவியாளருடன் கொண்டிருந்த காதல் உறவும் கூட ஊழல் என விமர்சிக்கப்பட்டது.  

வாட்சன் தனது வேலை போனதற்காக கண்ணீர் விட்டு கவலைப்படவில்லை. ஆய்வுகளை நிறைவு செய்யாமல் போகிறோமே என்றுதான் நினைத்து வருந்தினார். பின்னாளில் விளம்பரத்துறையில் இணைந்து காசு பார்த்தார். பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றார். வாட்சன் மீதான சர்ச்சைகளை விளம்பரமாக வைத்து ஏராளமான நூல்களை எழுதி புகழ்பெற்றார். உளவியலில் முக்கியமான பல்வேறு நூல்களை எழுதினார். 


1924ஆம் ஆண்டு பிஹேவியரிசம் என்ற நூலை எழுதினார். அதில், ஆல்பெர்டை வைத்து சோதனைகளை செய்து அறிந்த உண்மைகளை பிறருக்கும் செய்துகாட்ட முடியும். ஒருவரை வளர்ப்பு மூலம் மருத்துவர், வழக்குரைஞர், மருத்துவர், இசைக்கலைஞர், பிச்சைக்காரர், திருடர் என யாராக வேண்டுமானாலும் ஒருவரை பழக்க முடியும். சந்தேகம் இருந்தால் ஆரோக்கியமான குழந்தைகளை என்னிடம் கொடுங்கள் என்று சொன்னார். மக்கள் வாட்சன் சொல்வதைக் கேட்டனர். வெகுஜன ஊடகங்களில் அவரின் கருத்து பிரபலமானது. இதனால் குழந்தை பராமரிப்பு நூல்களை எழுதி புகழ்பெற்றார். 1920-30 காலகட்டங்களில் இப்படிப்பட்ட ஏராளமான நூல்களை எழுதி தள்ளி சம்பாதித்தார். பெற்றோரை பிள்ளைகள் சிறுவயதில் சார்ந்திருப்பதை பாசமாக வாட்சன் கருதவில்லை. அதுவொரு கட்டாயம் காரணமாக உருவாகும் உறவு என்று கூறினார். இதைக்கூறுவதற்கு அவரது சிறுவயது பாசமே இல்லாத வாழ்க்கை காரணமாக அமைந்தது. வாட்சன் சொன்னதை அன்றைய காலத்தில் பல லட்சம் மக்கள் நம்பினார்கள் செயல்படுத்தினார்கள். 


உளவியலாளர் வாட்சன் சொன்னதை அவர் மனைவி, பேரன்ட்ஸ் மேகஸின் என்பதில்  கட்டுரை எழுதி அதில் இருந்த தவறுகளை வெளிப்படையாக கூறினார். அடுத்து அவரின் பேத்தியும் நடிகையுமான மரியேட் ஹார்ட்லி, பிரேக்கிங் தி சைலன்ஸ் என்ற நூலில் குழந்தை வளர்ப்பு சோதனைகளின் பாதிப்பு பற்றி விரிவாக எழுதி விளக்கினார். பின்னாளில் பல்வேறு உளவியலாளர்கள் வாட்சனின் சோதனைகளை அடிப்படையாக எடுத்துக்கொண்டு குழந்தைகளை வளர்ப்பதற்கான கருத்துகளை கூறினார்கள். இதில் பி எஃப் ஸ்கின்னர் கூறிய உளவியல் கருத்துகள் முக்கியமானவை. 


வாட்சன் தெற்கு கரோலினாவில் பிறந்தவர். வறுமையான குடும்ப பின்னணி. அப்பா குடிநோயாளி. இரவில் எப்போதும் பெண்களின் அண்மையைத் தேடி சென்றுகொண்டிருந்தார். வாட்சனுக்கு பதிமூன்று வயதாகும்போது அவரின் அப்பா, குடும்பத்தை விட்டு தனியாக சென்றுவிட்டா். அம்மா தீவிரமான இறை பக்தராக இருந்தார். மகன் வாட்சன் குடு்ம்ப பிரச்னைகளால் வன்முறை குணம் கொண்ட பையனாக இருந்தார். படிப்பில் கெட்டியாக இருந்தார். பதினாறு வயதில் பர்மன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். சிகாகோ பல்கலையில் முனைவர் படிப்பை முடித்து உதவி பேராசிரியராக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையில் வேலைக்கு சேர்ந்தார். முதல் உலகப்போரில் ராணுவத்தில் பங்கேற்றார். பிறகு வந்து தனது ஆய்வுகளை செய்தார். பிறகுதான் ஆய்வு உதவியாளரான ரோசாலியுடன் காதல் உறவு கொண்டார். இதனால் பேராசிரியர் வேலை பறிபோனது. விளம்பர துறையில் வேலை செய்து நூல்களை எழுதி நன்றாகத்தான் வாழ்ந்தார். ஆனால், மனைவி ரோசாலி, முப்பத்து ஏழு வயதில் இறந்துபோனபிறகு, துறவி போல மாறிவாழ்ந்தார். 


முக்கியமான படைப்புகள் 


1913 psychology as the behaviorist views it

1920 conditional emotional reactions

1924 behaviorism


pixabay























கருத்துகள்