கேனில் அடைக்கப்பட்ட உணவு கெட்டதா? - உண்மையா - உடான்ஸா

 











உண்மையா, உடான்ஸா?


கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை விட அவ்வப்போது சந்தையில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி சாப்பிடுவதே சிறப்பு. 


உண்மை

அதெல்லாம் காசு கொட்டிக்கிடப்பவர்களுக்கு சரி. சாதாரண ஏழை மக்களுக்கு சரிபடாது. கேனில் உள்ள பழங்கள், காய்கறிகளை குறைந்த விலைக்கு சூப்பர் மார்க்கெட்டில் வாங்கலாம். சந்தையில் விற்கும் பழங்கள், காய்கறிகளின் விலை மாறிக்கொண்டே இருக்கும். அதை அந்தந்த நேரத்தில் வாங்குவது அனைவருக்கும் முடியாது. சத்துகள் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. புதிதாக பறித்து விற்கப்படும் காய்கறி, பழங்களைப் போவே கேனில் அடைக்கப்பட்ட பழங்களும் இருக்கும். சத்துகள் பெரிதாக இழக்கப்படாது. அதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படு்ம் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சோதித்துக்கொண்டு சாப்பிட்டால் நல்லது. 


கொழுப்பு என்றாலே கெட்டதுதான்.


உண்மை


1940ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு அதிகமான உணவுகளை எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு ஆபத்து. கொழுப்பு குறைவான உணவுமுறை இதய நோய்களை குறைக்கும் என ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். 1980ஆம் ஆண்டு கொழுப்பு குறைவான உணவுமுறை மக்கள் அனைவருக்குமே நல்லது. இதயநோய், உடல் பருமன் ஆகியவற்றுக்கு  கொழுப்பு குறைந்த உணவுமுறை நன்மை தருகிறதா என்று அறிவியல் பூர்வமாக ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஆய்வாளர்கள் இந்த வாதத்தை அழுத்தமாக முன்வைத்தனர். எதற்காக என்று தெரியவில்லை.  உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்ய கொழுப்பு அவசியம். இந்த கொழுப்புதான் கரைந்து உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இன்று கொழுப்பு என்றாலே அலர்ஜி ஆவதால் நிறுவனங்கள் கொழுப்பு இல்லை, கலோரி இல்லை, சர்க்கரை இல்லை என விளம்பரம் கொடுத்து குடிபானங்களை விற்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறியதற்கு மாறாக வேறு ஏராளமான வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். இது மக்களின் உடலை கடுமையாக பாதிக்கிறது. பருப்புகள், மீன், சமையல் எண்ணெய், பழங்களை சாப்பிடுவதோடு உபற்பயிற்சி சிறிது செய்தாலே கொழுப்பு பிரச்னை பற்றி கவலைப்படவேண்டியதில்லை. 


கலோரி உடலில் சேர்ந்தால் உடனே வெளியே செல்லவேண்டும். அப்போதுதான் உடல் எடை குறையும். 


கலோரி விவகாரத்தில் பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்க்கவேண்டும். சோடா, சாக்லெட், பிஸ்கெட்டுகள், இனிப்புகள் ஆகியவற்றில் கலோரிகள் அதிகம் உண்டு. இவற்றை சாப்பிட்டவுடன் உடலில்சேர்ந்து குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ், அமினோ அமிலங்களாக மாறுகிறது. இவற்றை கல்லீரல் கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. இதனால் மேற்சொன்ன உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை கூடும். இதைத் தவிர்க்க எண்ணிக்கையை விட தரமாக உள்ள உணவுகளை சாப்பிட முயல வேண்டும். 


இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடக்கூடாது. 


அப்படியெல்லாம் இல்லை. சாப்பிட்டால் ரத்தசர்க்கரை கட்டுப்பாட்டில்தான் இருக்கும். நோய் இல்லாதவர்கள் நீலபெர்ரி, திராட்சை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிட்டால் இரண்டாம் நிலை நீரிழிவு பிரச்னை உருவாகாது. பழங்களில் வைட்டமின், மினரல், ஆன்டி ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துகள் உள்ளன. 


பசுவின் பாலை விட தாவரங்களிலிருந்து பெறும் பாலே ஆரோக்கியமானது.


நாட்டில் புல் பூண்டுகளை தின்னும் ஜீவகாருண்ய நேசர்கள் கூட்டம் அதிகமாகிவருகிறது. அவர்கள் இப்படி வளவளவென பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. பசுவின் பாலில் உள்ள புரத அளவு ஒரு குவளைக்கு எட்டு கிராம் எனில் ஓட்ஸ் அல்லது பாதாம் பாலில் உள்ள புரத அளவு நான்கு கிராமுக்கு உள்ளடங்கியதுதான். தாவர பாலையும் அப்படியே அரைத்து கரைத்து சூப்பர் மார்க்கெட்டில் கொண்டு வந்து வைத்துவிடுகிறார்களா என்ன? அதில் நிறைய வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். கூடவே சோடியம், சர்க்கரை எல்லாம் உண்டு. பசுவின் பாலை செரிமானம் செய்வது கடினமாக இருக்கிறதா, அலர்ஜி பிரச்னை உண்டா அப்படியென்றால் பாலை தாவரப்பாலாக பருகலாம். மற்றபடி ஆரோக்கியம் என்பதற்கு தாவரப்பாலை உதாரணமாக காட்ட முடியாது. 




ரீடர்ஸ் டைஜெஸ்ட்

tenor.com

கருத்துகள்