தொழிலதிபரான மனைவி சொத்தை அபகரிக்க திட்டம் போடும் கணவர்!

 












மணி மணி


ஜேடி சக்ரவர்த்தி, பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ்


மணி படத்தின் இரண்டாவது பாகம். இந்த படத்தைப் புரிந்துகொள்ள முதல் பாகத்தை பார்ப்பது நல்லது. இல்லையெனில் முதல் நான்கு நிமிடங்களுக்கு போடும் காட்சிகளைப்பார்த்தால் கூட போதும்தான். 


ஆன்ட்டி ஜெயசுதா நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அவரிடம் போஸ், சக்ரவர்த்தி என இருவர் வேலை செய்கிறார்கள். அங்கு புதிதாக ஒரு பெண் வந்து வேலை கேட்கிறார். சக்கரவர்த்தி அவரின் அழகில் மயங்கி வேலைக்கு பரிந்துரை செய்கிறார். அந்த பெண் வந்தது முதலே சக்ரவர்த்தி மீது பிரியமாக இருக்கிறார். ஜெயசுதாவின் சொத்தை அபகரிக்க அவரது கணவர் சுப்பாராவ் முயல்கிறார். அதற்கு ரவுடி ஒருவரை அணுகுகிறார். அவர்தான் அலாவுதீன். சொத்தில் ஐம்பது சதவீதம் எனக்கு கொடுத்தால், ஜெயசுதாவை கொல்வதாக வாக்கு கொடுக்கிறார். இதற்கிடையில், சக்ரவர்த்தியால் பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வெளியே வருகிறார். இவர், சக்ரவர்த்தியைக் கொல்ல முயல்கிறார். இப்படி பல்வேறுகதைகள் நடக்கின்றன. 


படத்தில் நாயகர்கள் என்று சொன்னால் பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் ஆகியோரைத்தான் சொல்ல வேண்டும். இரண்டுபேரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பிரம்மானந்தம் படம் நெடுக சீரியசான முகபாவனையில் வந்து சிரிக்க வைக்கிறார். அவருக்கென ஒரு தனிப்பாடல் கூட உண்டு. படத்தில் பாடல்கள் பாத்திரங்கள் எந்த இடத்தில் உள்ளார்களோ அங்கேயே பாடும்படி வைத்திருக்கிறார்கள். 


இதெல்லாம் சற்று வித்தியாசமான முயற்சி. தணிகெலா பரணி இரண்டு பாத்திரங்களில் வருகிறார். முதல் பாகத்தில் எப்படியோ தெரியவில்லை. இந்த பாகத்தில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. 


கோமாளிமேடை டீம் 

Written bySiva Nageswara Rao
Produced byRamgopal Varma

கருத்துகள்