குடும்பமே மனிதர்களின் ஆளுமைகளை உருவாக்குகிறது! - வர்ஜினியா சாடிர்

 








ஒரு குடும்பம் சமூகத்திற்கு என்ன செய்கிறது? அங்குதான் சமூகத்தை முன்னே கொண்டு செல்ல, பின்னே கொண்டு செல்வதற்கான பல்வேறு மனிதர்கள் உருவாகி வருகிறார்கள். அமெரிக்க உளவியலாளர் வர்ஜினியா சாடிர் என்பவர், ஒருவரின் ஆளுமை உருவாகி வளர அவரின் குடும்பமே முக்கியக்காரணம் என்று கூறினார். ஒருவரின் ஆளுமை நல்லவிதமாக அல்லது கெட்டவிதமாக வளருவதற்கு குடும்ப சூழலே முக்கியமானதாக உள்ளது. 


ஆரோக்கியமான குடும்பத்தில் அன்பு காட்டுவது வெளிப்படையானதாக நடைபெறும். அதில் மறைக்க ஏதுமில்லை. நல்ல முறையில் உறவினை வளர்ப்பது ஒருவரின் உளவியலை மேம்படுத்தி பக்குவப்படுத்துகிறது. 


குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களோடு பேசி பழகி அன்பு காட்டி, எதிர்வினை அளிப்பதன் வழியாக சமூகத்தோடு உரையாடுவதற்கான சூழல் உருவாகிறது. மனச்சோர்வு இருக்கும்போது கூட முன்னர் நாம் செய்த பல்வேறு குடும்ப பாத்திரங்கள்தான் மனதிற்கு ஆறுதல் தந்து உதவுகிறது. நம்மை கட்டமைக்கிறது. எனவே குடும்பமே மனிதர்களை கட்டமைத்து வெளியே அனுப்பும் தயாரிப்பு சாலையாக உள்ளது. குடும்பத்தில் உள்ள சில பாத்திரங்களை வர்ஜினியா விவரிக்கிறார். எப்போதும் குறைகளைக் கூறிக்கொண்டே இருப்பவர், புத்திசாலியாக ஆலோசனைகளை கூறினாலும் பாசமே இல்லாதவர், நேர்மையாக குடு்ம்பத்தில் உள்ளவர்கள் பலரிடமும் தொடர்புகொள்பவர், மன்னிப்பு கேட்பவர், விஷயங்களை மாற்றி பேசிக்கொண்டு இருப்பவர் ஆகியவை முக்கியமான குடும்ப பாத்திரங்கள். இவர்களைப் பார்த்தால் பன் டிவியில் வரும் லூசுத்தனமான சலிப்பூட்டும் தொடர் பாத்திரங்கள் போலவே இருக்கும். ஆனால் இவர்கள் மூலமே பெரும்பாலான குடும்பங்கள் இயங்குகின்றன. அன்பும், ஏற்றுக்கொள்ளுதலும் இருந்தாலே குடும்பத்தில் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என வர்ஜினியா கூறினார். 


வர்ஜினியா, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் பிறந்தார். பிறந்து சில ஆண்டுகளில் நோய் ஒன்றின் காரணமாக இரண்டு ஆண்டுகள் தற்காலிகமாக காது கேட்காமல் போய்விட்டது. அந்த காலத்திலும் பிறர் பேசுவது என்ன என்பதைக் கவனித்தார். அதிலிருந்து மனிதர்களின் இயல்பை கண்டுபிடித்தார். வர்ஜினியாவின் அப்பா குடிநோயாளி. எனவே பிறரை பாதுகாப்பது, பராமரிப்பது, கருணையை உதவியை வேண்டுவது ஆகியவற்றை சிறுவயதில் இருந்தே அறிந்திருந்தார். 


ஆசிரியராக பயிற்சி பெற்று வேலைசெய்தாலும் குழந்தைகளின் தன்னம்பிக்கை பற்றிய அக்கறை கூடியது இதனால் சமூகப்பணி சார்ந்த பட்டப்படிப்பு ஒன்றை படித்தார். குடும்ப சிகிச்சை முறை என்பதை உருவாக்கினார். இன்றும் பல்வேறு நாடுகளில் வர்ஜினியாவின குடும்ப சிகிச்சை முறை செயல்பாட்டில் உள்ளது. 


முக்கிய படைப்புகள்


1964 conjoint family therapy


1972 people making


tenor.com






கருத்துகள்