தன்னைப் பற்றி உணர உதவும் உளவியல் சிகிச்சை முறை

 










கெஸ்சால்ட் தெரபி என்பது நிகழ்காலத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது. ஒருவர் தனது உணர்ச்சிகளை கையில் கையாளத் தெரிந்துகொண்டாலே எளிதாக பிரச்னைகளிலிருந்து வெளியே வரமுடியும். தனது மனதில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பதே இதில் உணரவேண்டியது. இப்படி உணர்ந்துகொண்டால் ஒருவரால் கவனமாக தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். தன்னைப் புரிந்துகொள்ளலாம். 


உணர்ச்சிகளின் மீதான கவனத்தை ஒருவர் கொண்டிருப்பது, கூறுவதைப்போல எளிதானது அல்ல. கடினமானது. இதை நிகழில் வாழ்தல் என்று கூறுவார்கள். இதை ஒருவர் மெல்ல பழகினால் எளிதாக தனது சூழல், அதில் அவரது அனுபவம் என இரண்டையும் மெல்ல மாற்றிக்கொள்ள முடியும். கெஸ்சால்ட் தெரபியில் என்னால் முடியாது என்று கூறுவதை நான் அதை செய்ய விரும்பவில்லை என மாற்றிச்சொல்ல வைக்கிறார்கள். செயல்பட வைக்கிறார்கள். முதலில் பேசவேண்டும். பிறகு அதுவே செயலாகிறது. அதாவது, நான் என்ற தன்மை மாறுதல் அடைகிறது. விஷயங்களை வாய்ப்பாக பார்க்கும் குணம் கூடுகிறது. குறிப்பிட்ட சூழல் காரணமாக அல்லது அதை காரணம் காட்டி தன்னை பாதிக்கப்பட்டவர்களாக எண்ணினோம் என்றால் அந்த இயல்பு மெல்ல மாறுகிறது. நம்மைப் பற்றிய உண்மையை பிறர் கூறாமல் நாமே ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதை சகித்துக்கொள்ள ஏற்றுக்கொள்ள பழகிவிடுகிறோம் என்பதே உண்மை. இந்த கெஸ்சால்ட் முறை தனிநபர்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறது. ஆனால், பிறருடனான உறவு என்பதைப் பற்றி புறக்கணிக்கிறது என சில உளவியலாளர்கள், ஆய்வாளர்கள் கருதினர். 1970க்குப் பிறகு செல்வாக்கு இழந்தாலும் அடிப்படையான தெரபி முறைகளில் அதற்கு இன்னும் பெரிய மதிப்பு உள்ளது. 


ஃப்ரிட்ஸ் பெரிஸ் 


பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெர்லினில் பிறந்தார். மருத்துவம் படித்தார். படிக்கும்போது உலகப்போர் வந்துவிடவே அங்கு சென்று ராணுவத்தில் வேலை செய்தார். மருத்துவராக சான்றிதழ் பெற்றார். பிறகு, உளவியலாளர் படிப்பை படித்து உளவியலாளராக பணியாற்றத் தொடங்கினர். இவரது மனைவி லாரா போஸ்னரும் உளவியலாளர்தான். இவர்கள் இருவரும் இணைந்து உளவியல் ஆய்வு கழகம் ஒன்றைத் தொடங்கினர். 1940ஆம் ஆண்டு, கணவன், மனைவி என இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றனர். 1960ஆம் ஆண்டு தம்பதிகள் பிரிந்துவிட்டனர். கலிஃபோர்னியாவில் உளவியல் தெரபி பற்றி ஆராய்ச்சிகளை செய்தார். 1969ஆம்ஆண்டு கனடாவில் சிகிச்சை மையம் ஒன்றை தொடங்கினார். அங்கு, பயிற்சி ஒன்றை நடத்தும்போது இதயம் செயலிழந்து இறந்துபோனார். 


1946 ego hunger and aggression


1969 gestalt therapy verbatim


1973 the gestalt approach and eye witness to therapy

பின்டிரெஸ்ட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்