தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளிடம் உருவாகும் அதீத வெறுப்பு - என்ன காரணம்? எப்படி தீர்ப்பது?

 





ஒரு குழந்தை கைவிடப்பட்டு ஆதரவின்றி தெருவில் நிற்கிறது. அல்லது காப்பகத்தில் வளர்கிறது. அந்த குழந்தைக்கு பெற்றோரின் அன்பு, வழிகாட்டுதல் கிடைத்தால் பெரிய சாதனைகளை படைப்பார்கள் என சிலருக்கு தெரிகிறது. இப்படித்தான் பிள்ளைகளை  தத்தெடுப்பது தொடங்குகிறது. இப்படி தத்து வழங்கப்பட்ட பிள்ளைகள், புதிய வீட்டில் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படுவார்களா, இல்லையா என்பது முக்கியமான கேள்வி. பெரும்பாலும் குழந்தைகளை வெறுக்காமல் இருக்க வளர்ப்பு பெற்றோர் முயல்கிறார்கள். சகித்துக்க்கொள்ள பார்க்கிறார்கள். குழந்தைகளோ வெறுக்கப்பட்டால்தான் அன்பு கிடைக்கும் என புரிந்துகொள்கிறார்கள். இதைபற்றி டொனால்ட் வின்னிகாட் என்ற உளவியலாளர் ஆராய்ச்சி செய்தார். தாய், பிள்ளை என இருவருக்குமான உறவு, குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றை  முக்கிய அம்சங்களாக கருதி ஆய்வு செய்தார். 


இவர் சிக்மண்ட் ஃப்ராய்ட், மெலானியா கிளெய்ன் ஆகியோரின் கொள்கை,ஆய்வு மீது பெரும் பற்றுதல் கொண்டவர். தன்னுணர்வற்ற மனநிலையில் ஒருவர் கொண்டுள்ள எண்ணங்கள், உணர்வுகள் பற்றி ஆய்வுசெய்தார். இரண்டாம் உலகப்போரில் வீடுகளை இழந்த உறவுகளை இழந்த சிறுவர்கள் பற்றி ஆராய்ந்தார். இவர்கள் பலருக்கும் வளர்ப்பு பெற்றோரின் வீடுகளில் தன்னைப் பொறுத்துக்கொள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர். இங்கு தத்துப்பிள்ளைகளுக்கு தன்னுணர்வற்ற மனதில் நம்பிக்கை உருவானாலும் கூட அதனுடன் பயமும் உள்ளது. இறந்த காலத்தில் உடல் ரீதியான தேவைகள் தீர்க்கப்படாமல் அன்பு காட்டப்படாமல் இருந்தால் அது மனதில் ஒரு பாதுகாப்பு தடையை உருவாக்கும். இந்த எதிர்மறையான பாதுகாப்பு தடை, நம்பிக்கையை எதிர்க்கும். இதன் விளைவாக ஏமாற்றம் தவிர்க்கப்படுகிறது. இப்படியொரு எதிர்மறை உணர்ச்சி மனதில் இருந்தால், அது பெற்றோர், பாதுகாவலர்களுக்கு எதிரான கோபமாக உருவாகிறது. இதை சமூகத்திற்கு எதிரான கோபம் என டொனால்ட் கூறுகிறார். 


பிள்ளைகள் பெற்றோரிடம், தன்னைப் பாதுகாக்கும் பாதுகாவலரிடம் வெறுப்பை வெளிப்படுத்தலாம். வேறுவழியில்லை அதுதான் மனதில் நிரம்பி வழிகிறதே. ஆனால் இதை பெற்றோர் தடுக்கவேண்டியதில்லை. வெறுப்பு முழுமையாக வெளிவர உதவ வேண்டும். வரும் வெறுப்பு சகித்துக்கொள்ள வேண்டும். எதற்காக இந்த வெறுப்பு உருவாகிறது? ஆதரவற்ற பிள்ளைகள் அன்புக்காக ஏங்கிக்கொண்டு இருப்பவர்கள். பெற்றோர் இறந்தபிறகு, உறவினர்கள் ஆதரிக்காத போது அவர்கள் ஆதரவிற்காக அன்பிற்காக வெகுகாலம் காத்திருக்கிறார்கள். இப்படி காத்திருக்கும் காலத்தில்தான் சமூகம் மீது கோபம் உருவாகிறது. இதை அவர்கள் தங்களை ஆதரிக்கும் பாசம் காட்டும் பெற்றோர், நட்பு, காதல் என பலவிதமான உறவுகள் கிடைத்தபோதும் அவர்களிடம் காட்டுகிறார்கள். இந்த வெறுப்பை துவேஷத்தை எதிர்கொள்பவர்களுக்கு சற்று கடுமையான சகிப்பு மனதிடம் வேண்டும். இல்லையெனில் அவர்களும் இதற்கு எதிர்வினையை திடமாக வெளிக்காட்டுவார்கள். பிறகு உறவு கெட்டுவிடும். 


இதை தீர்ப்பது என்பதை பற்றி டொனால்ட் கவலைப்படவில்லை. அதை வெளிக்காட்டத்தான் வேண்டும். அதை யாராவது ஒருவர் எதிர்கொள்ளவேண்டும் என்றே கூறுகிறார். ஆய்வாளராக இவரது பல்வேறு கருத்துகள் சக ஆய்வாளர்களை, சமூகத்தை சற்று அதிர்ச்சியுறச்செய்யும். செய்த ஆய்வுகளும் அதில் கண்ட 0.1 சதவீத உண்மையென்றால் கூட அதை வெளிப்படுத்துவது அசாதாரணமான இருக்கும். நேர்த்தியான குடும்பம் என்பது உலகில் கிடையாது. அப்படி இருப்பது என கூறினால் அது போலியானது என்று கருத்து கூறினார். நேர்த்தியான பாசமான என்றெல்லாம் நடிக்கவேண்டியதில்லை என வெளிப்படையாக கூறிய ஆய்வாளர் இவரே. மனதின் பலவீனங்களை, இருட்டை வெளிப்படுத்தினாலும் பிரச்னையில்லை. அது தவறில்லை என்று கருதியவர். 


டொனால்ட் வின்னிகாட்


ஆங்கில மருத்துவர் மற்றும் உளவியலாளர். இவர். இங்கிலாந்தின் பிளைமவுத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரது அம்மாவிற்கு மன அழுத்த பாதிப்பு இருந்தது. இதுவே மருத்துவம் படிப்பதற்கான முக்கியக் காரணம் ஆகியது. குழந்தைகளுக்கான நல மருத்துவராக பயிற்சி பெறத் தொடங்கினார். இருமுறை மணமானது. இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காணச் சென்றபோது உளவியலாளரும் சமூக செயல்பாட்டாளருமான கிளாரே பிரிட்டனைப் பார்த்தார். மணந்துகொண்டார். குழந்தை நல மருத்துவராக நாற்பது ஆண்டுகள் பணியாற்றினார். பிரிட்டிஷ் உளவியல் சங்கத்தின் தலைவராக இருமுறை செயல்பட்டிருக்கிறார். இக்காலங்களில் ஆற்றிய உரைகளும், வெளியிட்ட அறிக்கைகளும் மக்களிடையே பெரும் கவனம் பெற்றன. 


1947 hate in the countertranference


1951 transitional objects and transitional phenomena


1960 the theory of the parent infant relationship


பின்டிரெஸ்ட்






கருத்துகள்