குழந்தையின் நினைவுகளில் உள்ள தாயின் உருவம்!

 









1920ஆம் ஆண்டு உளவியலாளர்கள் நினைவு, கற்றல் ஆகியவற்றை பற்றி அறிய நரம்பியல் துறையை நாடினர். எனவே அதுபற்றிய ஆய்வுகளை நடைபெற்றன. இதில் முக்கியமான ஆய்வாளர் கார்ல் லாஸ்லி. இவர்தான் மூளையிலுள்ள செல்கள் பற்றி ஆய்வுசெய்து பிறருக்கான வாசலை திறந்து வைத்தார். அவருக்குப் பிறகு கனடா நாட்டைச் சேர்ந்த உளவியலாளரான டொனால்ட் ஹெப் முக்கியமான பங்களிப்பைச் செய்தார். ஹெப்பியன் கற்றல் அழைக்கப்படும் அவரது முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. 


ஒரு குறிப்பிட்ட செயலை திரும்ப திரும்ப செய்யும்போது மூளையிலுள்ள செல்கள் அணியாக திரண்டு நிற்கின்றன. இதன் விளைவாகவே நினைவுகள் உருவாகின்றன என்று டொனால்ட் கூறினார். தனது கொள்கையை விளக்க தி ஆர்கனிசேஷன் ஆஃப் பிஹேவியர்  என்ற நூலை 1949ஆம் ஆண்டு எழுதினார். ஒரு குழந்தை தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டுள்ளது. அப்போது வீட்டு மாடிப்படிக்கட்டுகளில் யாரோ ஒருவர் ஏறி வருகிறார். அதை குழந்தை கேட்கிறது. அப்படி வருபவர் அந்த குழந்தையை தூக்கினால் யார் தன்னை தூக்குவது என குழந்தை கவனிக்கிறது. தன்னை அள்ளி எடுப்பவர்களின் முகத்தைப் பார்க்கிறது. பிறகு தன்னை தூக்கச் சொல்லி சிணுங்குகிறது. இந்த செயல்கள் எப்படி நடைபெறுகின்றன? காரணம், இதெல்லாம் மூளையில் உள்ள செல்கள் ஓரணியாக திரண்டு நிற்பதால் நடைபெறுகின்றன. 

all gif files downloaded from tenor.com

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்