இடுகைகள்

பாவனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவை எரித்துக்கொன்ற நான்கு நபர்களை பழிவாங்க முயலும் பரதநாட்டிய மாஸ்டர்!

படம்
  செஸ்  திலீப், பாவனா, சலீம்குமார், அசோகன் விஜய் கிருஷ்ணன் பரதநாட்டியம் சொல்லித்தரும் பள்ளி நடத்துகிறார். அவரது அம்மா, அவனுக்கு அதை கற்பித்திருக்கிறார். அம்மா, காவல்துறையில் வேலை செய்யும் ஒருவரை விரும்பி இணைந்து வாழ்கிறார். திருமணம் செய்துகொள்வதில்லை. இது விஜய்க்கு வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் அவன் அம்மா வருத்தப்படுவாள் என எதையும் கூறுவதில்லை. அவனது பள்ளிக்கு பாவனா கல்லூரி மாணவி வருகிறாள். கல்லூரி ஆண்டுவிழாவில் ஆடும் பரதநாட்டிய பயிற்சிக்காக விஜய்யின் உதவியை நாடுகிறாள்.  அங்கு அவனிடம் பயிற்சி செய்து ஆடி கல்லூரியில் முதல் பரிசு வெல்கிறாள். அதோடு அவளுக்கு விஜய்யை பிடித்திருக்கிறது. இருவரும் சாதி, மதம், அந்தஸ்து பார்க்காமல் காதலிக்கிறார்கள். ஆனால் நாயகியின் தாத்தாவுக்கு அதெல்லாம் குறையாக தெரிகிறது. குறிப்பாக, விஜய்யின் அப்பா யாரென்று கேட்க அவனால் உண்மையைக் கூறமுடியவில்லை. இப்படியாக காதலி, கல்யாணம் என இரண்டுமே கனவு போல கலைந்து போகிறது.   படம் காதலைப் பற்றியதல்ல. பழிவாங்குவதைப் பற்றியது. விஜய்யின் அப்பா, மரணப்படுக்கையில் இருக்கும்போது அவனையும், மனைவியையும் அழைத்து எனது சொத்துகள் ஒரே மகனான உ

நக்சலைட் காதலியைக் காப்பாற்றும் போலீஸ் காதலன்!

படம்
  ஹீரோ 2008 - நிதின், பாவனா ஹீரோ நிதின் , பாவனா எலன் மஸ்க் செவ்வாயை காலனியாக்க துடிக்கிறார் அல்லவா ? அங்கு திரையிடப்பட வேண்டிய படம் . படத்தில் அனைத்துமே மிகையாக நம்ப முடியாமல் உள்ளது . இ து வேறு உலகம் ப்ரோ . நிதினின் அப்பா போலீஸ் கமிஷனர் . அவருக்கு தனது மகனை தனது துறையில் வேலையில் சேர்த்துவிடவேண்டுமென நினைக்கிறார் . ஆனால் அதற்கு அவரது மனைவி சரளா எதிராக நிற்கிறார் . மகன் சினிமா ஹீரோ ஆகவேண்டும் என்பது அவரின் ஆசை . மகனுக்கும் அதுதான் லட்சியம் . இந்த நேரத்தில் நியாய உணர்வு கொண்டவர்கள் போலீஸ்காரர்களாக மாறலாம் என மாநில அரசு சட்டம் கொண்டு வருகிறது . நிதினை பயிற்சிக்கு அப்பா அனுப்புகிறார் . மகனும் வேண்டாவெறுப்பாக மூன்று மாதத்தை கடத்த அங்கு வருகிறார் . மூன்று மாத காலத்தில் போலீஸ் அகாடமியில் நடக்கும் காதல் , நட்பு , தேசப்பற்று இதர சமாச்சாரங்கள்தான் கதை . '' என்னை எதுக்காக காதலிக்கிற ? என்னோட கண்ணு , மூக்கு , வாய் , உதடு , கழுத்து பிடிக்குமா ?'’ என காதலி கிருஷ்ணவேணி கேட்க , சட்டென நாயகன் ராதாகிருஷ்ணன் அவளின் நீலநிற இடுப்

தலைமையாசிரியரின் உண்மையான மகனாக மாறும் குற்றவாளியின் மகன்! திலக்கம் - திலீப், காவ்யா மாதவன்

படம்
  திலக்கம் திலீப், காவ்யா மாதவன், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன், கொச்சி ஹனீபா கிராமத்திலுள்ள தலைமை ஆசிரியர். சிறுவயதில் தொலைந்து போன உண்ணி என்ற பெயருடைய மகனை பதினேழு ஆண்டுகளாக தேடுகிறார். நாகப்பட்டினத்தில் கிடைக்கும் ஒருவர், தலைமையாசிரியர்   தனது மகன் என கூறி உண்ணியை வரைந்த விதமாகவே இருக்கிறார். ஆனால் சித்த சுவாதீனம் இல்லை. அவரை கிராமத்திற்கு கூட்டி வந்து சிகிச்சை அளிக்க முயல்கிறார். உண்மையில் அவர் கூட்டி வந்த நபர் உண்ணியா இல்லையா, நினைவு திரும்பியதும் எதனால் அவர் அப்படி ஆனார் என தகவல்களை கூற முடிந்ததா என்பதே கதை. ஆற்றுக் கரையோரம், திலீப், இறந்துபோனவருக்கு பிண்டம் வைக்கிறான். அதை ஆற்றில் கரைத்துவிட்டு எழும்போது படிக்கட்டின் மேலே வயதானவர் இளைஞர் ஒருவரோடு நிற்கிறார். அவனைக் கூர்மையாக பார்த்துக்கொண்டே இருக்கிறார். காட்சிகள் பின்னோக்கி நகர்கின்றன. தலைமையாசிரியருக்கு மகள் ஒருத்தி, மகன் ஒருவன். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. வரதட்சணை பிரச்னை மாப்பிள்ளையோடு இருக்கிறது. அதெல்லாம் தாண்டி அவரது வம்சத்தை மகன் உண்ணி நடத்திக்கொண்டு போவான் என மகனைப் பற்றி நாளிதழில் பதினேழு ஆண்டுகளாக விளம்