இடுகைகள்

இடதுசாரி வீரர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஎம்எஸ் (1909-1998)

படம்
இஎம்எஸ் (1909-1998) கேரளாவின் மலப்புரத்தில் பிறந்த மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியை தென்னிந்தியாவில் பெயர் தெரிய வைத்த மனிதர், எலம்குலம் மணக்கால் சங்கரன் நம்பூதிரிபாடு. கேரளாவின் முதல் முதலமைச்சராக பதவியேற்ற ஆளுமை.  பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு, விஷ்ணுதாதா அந்தர்ஜனம் தம்பதிக்கு நான்காவது மகனாக பிறந்தவர்  கல்வி கற்றது திருச்சியில். இந்து அடிப்படைவாதி என காந்தியை விமர்சித்த இஎம்எஸ், தன் இளமையிலேயே ரிக்வேதத்தை கரைத்து குடித்து மூளையின் நியூரான்களில் ஏற்றிக்கொண்ட படிப்பாளி. கிலாபத் இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றில் அர்ப்பணிப்போடு கலந்துகொண்டவருக்கு பிடித்த இதழ்,  மாத்ருபூமி. 1921 ஆம் ஆண்டு மாப்ளா கலக நிகழ்வுகள் ஏற்பட்டபோது இஎம்எஸ்ஸின் வீடு அப்பகுதியை ஒட்டியிருந்ததால் அங்கிருந்து வெளியேறும் சூழல் உருவானது. சட்டமறுப்பு இயக்கத்தை விட கிலாபத் இயக்கம் கேரளாவில் முன்னிலை பெற்றதற்கு காரணம், முஸ்லீம்கள் எண்ணிக்கைதான். இதனால் அவர்களுக்கு எதிரான எண்ணம் உயர்ஜாதி இந்துகளிடம் உருவானது. பின்னர் இது கலவரமாக வெடித்தது. தான் இறக்கும்வரை முஸ்லீம்களின் மாப்ளா கலகம் இந்து நிலவுடையாள

பசவ புன்னையா(1914-1992)

படம்
பசவபுன்னையா(1914-1992) சுந்தரய்யா போலவே பசவ புன்னையாவும் நிலங்களை வைத்திருந்த செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். குண்டூரில் சட்டமறுப்பு இயக்க போராட்டத்தில பங்கேற்றவருக்கு பகத்சிங் ஆதர்ச ஆளுமை. ஆந்திரா கிறிஸ்துவ கல்லூரியில் படித்த பசவ புன்னையா, அங்கு சந்தித்த தோழர்களான ராஜேஷ்வர் ராவ், நாகிரெட்டி, ஹனுமந்த ராவ், சுந்தரய்யா, என்.ஜி.ரங்கா, அஜய் கோஷ், எஸ்.ஏ. டாங்கே, பி.சி ஜோசி ஆகியோரின் நட்பினால் கம்யூனிசத்தின் அடிப்படைகளை கற்று லெனின், சோசலிசம் என படிப்படியாக முன்னேறினார். 1935-1952,1953 காலகட்டங்களில் நடந்த விவசாய போராட்டம் முதல் மொழிவாரி மாநில போராட்டம் வரையில் தீவிரமாக பங்கேற்ற பசவபுன்னையா, மக்களை கடவுள் மறுப்பாளர்களாக மாற்ற நினைக்கவில்லை. கர்மா, சித்தாந்தம் ஆகியவற்றில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவர் காங்கிரஸ்காரர்களுடனும் வேறுபாடு காட்டாமல் நட்பு பாராட்டிய மனிதர். மொழிவாரி மாநிலங்களை பிரிப்பதை ஏற்றுக்கொண்ட புன்னையா மதரீதியான பிரிவினை தன் ஆயுள் இறுதிவரை ஏற்கவில்லை. முஸலீம் லீக் கட்சியை தீவிரமாக எதிர்த்தவர் பாகிஸ்தான் கோரிக்கையை  கடுமையாக ஆட்சேபித்தார். 1947 ஆம் ஆண்