இடுகைகள்

ரஹ்மான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆணவக்கொலையால் மீளமுடியாத கற்பனையில் சிக்கும் மனைவியை மீட்கும் கணவன்! அட்ரங்கி ரே - ஆனந்த் எல் ராய்

படம்
  அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் ஆனந்த் எல் ராய் ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்னி  கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த விசு, தனது மனைவியை மெல்ல விரும்பத் தொடங்குகிறான். ஆனால் அவள் வேறு ஒருவரை விரும்புகிறாள். அதுயார், அந்த காதலை நிறைவேற்ற விசு உதவினானா என்பதுதான் படத்தின் கதை.  பீகார் பையன் வேண்டாம் வேறு யாராவது ஒரு பையனை பிடித்து வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம் என குடும்பமே முடிவு செய்து ரிங்குவை தயார் செய்கிறார்கள். உணவில் மயக்க மருந்து கொடுத்து அவளை கல்யாணத்திற்கு தயார்படுத்துகிறார்கள். அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளையாக மருத்துவ மாணவர் மதுசூதனை பார்க்கிறார்கள். ஆனால் இருட்டில் தவறுதலாக விசு(தனுஷ்) பிடித்துக்கொண்டு வந்து கல்யாணம் செய்விக்கிறார்கள். மணப்பெண்ணுக்கு மயக்க மருந்து என்றால் மாப்பிள்ளைக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கிறார்கள். இதனால அவர் சிரித்துக்கொண்டே வேறுவழியின்றி கல்யாணம் செய்கிறார்.  இன்னொரு விஷயம், மருத்துவ மாணவராக விசு தனது துறைத் தலைவரின் மகளை கல்யாணம் செய்யும் நிலையில் இருக்கிறார். இதற்கான நிச்சயம் ஒருவாரத்தில் நடக்கவிருக்கும்போ

கலைத்துறையில் சாதித்த இந்தியா! இந்தியா 75

படம்
  கலைகளில் சாதனை சாகித்திய அகாதெமி, இந்தியாவில் நூல்களை பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வரும் நிறுவனம். இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை சாகித்திய அகாதெமி ஒன்றிணைக்கிறது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்திருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இளைய எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களை கௌரவித்து வருகிறது. போடோ, டோக்ரி, கொங்கணி போன்ற மொழிகளிலுள்ள இலக்கியப் பொக்கிஷங்களையும் அனைவரும் அறியும்படியாக மொழிபெயர்க்கும் பணியை சாகித்திய அகாதெமி செய்கிறது.  தூர்தர்ஷன் அறிமுகம் இன்று அனைவரும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்க்கவும், இணையத்தில் உள்ள வெப் சீரிஸ்களையும் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தியாவில் தொடக்கத்தில் தூர்தர்ஷன்தான் அனைவருக்கும் ஒரே டிவியாக இருந்தது. 1959ஆம்ஆண்டு தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கி மூடினாலும் கூட தூர்தர்ஷனிடன்  21 சேனல்கள் உள்ளன. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமங்களில் தூர்தர்ஷன் மட்டுமே ஒரே டிவியாக முதலில்

புதிய இசை பிடிக்காமல் போகும் வயது எது? - உளவியல் ஆராய்ச்சி

படம்
மிஸ்டர் ரோனி முப்பது வயதுக்கு மேல் புதிய இசை பிடிக்காமல் போவது ஏன்? நல்ல கேள்வி. எங்கள் அலுவலகத்தில் கூட 53 வயதான சீனியர் ரஹ்மானையும் அனிருத்தையும் திட்டி ராஜ விசுவாசத்தை நிரூபித்து வருகிறார். இதற்கு காரணம், மூளையில் இருக்கிறது. இயல்பாகவே நாம் திருவிழா, சாவு, மயானக் கொள்ளை என பல்வேறு இடங்களிலும் இரண்டு சாமி பாட்டுகளைப் போட்டு பின்னர் அதிரடியாக சினிமா பாட்டுகளுக்கு இறங்கி வந்துவிடுவோம். இதனால் நம் 13 -14 வயதில் குறிப்பிட்ட இசை வகைக்கு செட் ஆகிவிடுவோம். இருபது வயதில் ரஹ்மான்தான்டா லெஜண்டு, ஜிப்ரான்லாம் அவரோட கால் தூசுக்கு சமம்டா என சண்டை இழுக்கும் அளவுக்கு தரை லோக்கலாக மாறிவிடும். இயல்பாகவே இருபதுகளில் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். அதனால் யூட்யூப்பில் வைரலாகும் அனைத்தையும் நாம் கேட்போம். நண்பர்கள் ஹேங்அவுட்டில் கிடைக்கும் நண்பர்களின் பரிந்துரைகளையும் லிங்குகளையும் ஏற்று ரசிப்போம். ஆனால் 30 வயது ஆகும்போது அனைத்தும் மாறிவிடும். அதற்குப் பிறகு, வேலை, குடும்பம் என நச்சு வேலைகள் மூளையெங்கும்  நிறைந்துவிடும்.  அதற்குப் பிறகு நாம் நினைத்தாலும் புதிய விஷயங்களுக்குச் செல்ல ம

சர்வம் தாளமயம்- தோல் உரித்த விரல்கள் மிருதங்கம் இசைக்குமா?

படம்
WORLDHAB சர்வம் தாளமயம் ராஜீவ்மேனன் ஏ.ஆர். ரஹ்மான் கதையே தலைப்பில் சொல்லிவிட்டார்கள். கீழ் சாதியைச்சேர்ந்தவர் இசை கற்க முயல, சமூக ரீதியாக சாதி ரீதியாக என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதே கதை. ஜி.வி.பியிடம் நாம் எதிர்பார்க்க ஒன்றுமில்லை. அவரால் முடிந்ததை செய்து விடுகிறார். விஜய் ரசிகராக வேறு நடித்திருக்கிறார். நாம் என்ன சொல்ல? சொல்ல வந்த கான்செஃப்ட்டை ஓரளவு நேர்த்தியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன். அனைத்து காட்சிகளுக்கும் ஒத்துழைக்கிறது ஏ.ஆரின் இசை. அப்புறமென்ன. மனதில் மழையாய் பொழியும் பாடல்களைக் கேட்டபடி படத்தை பார்க்கவேண்டியதுதான். வேம்பு ஐயரிடம் மிருதங்கம் செய்து கொடுக்கும் பீட்டர், அதை வாசிக்க வாய்ப்பு கேட்கிறார். அவரின் தீவிர ஆர்வத்தை பார்த்து வேம்பு ஐயர் மனமிரங்கி பாடம் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் அதைப் பிடிக்க முதன்மை சீடர் செய்யும் துரோகம், நண்பனின் பழிவாங்கல் ஆகியவை பீட்டரை நடுத்தெருவில் நிறுத்துகிறது. பீட்டர் என்ன செய்தார். பழிவாங்கினாரா, சுயமுன்னேற்ற பாடல்களை இயற்றினாரா, என்பதே கதை. செக்சையும் மோட்டிவேஷனலாக இயக்குநர் மாற