இடுகைகள்

கோபிசந்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலுக்காக, காதலிக்காக எதையும் செய்வான் சார் இந்த காளி! ராராஜூ - கோபிசந்த், அவந்திகா, மீரா ஜாஸ்மின்

படம்
  ரா ராஜூ (2006) தெலுங்கு கோபிசந்த், மீராஜாஸ்மின், அவந்திகா, வேணு மாதவ், எம்எஸ் நாராயணா அதிகம் படிக்காத சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளவர், தான் விரும்பும் பெண்ணின் கல்விக்கு உதவுகிறார். பல்வேறு தடைகளைக் கடந்து அந்த பெண்ணை குடிமைப்பணி அதிகாரியாக்குகிறார். அவர் யார், எதற்கு இப்படி செய்கிறார் என்பதே படத்தின் கதை. வணிகரீதியான பல்வேறு அம்சங்களை படம் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண் போலீசாக வரும் அவந்திகா, அவருக்கான கனவு பாடல்காட்சிகள். அதெல்லாம் விடுங்கள். படத்தில் வலிமையான பாத்திரங்கள். கோபிசந்தின் காளி, மீரா பாத்திரங்கள்தான். கட்டிலில் படுத்து தூங்கும் காளியின் அறிமுக காட்சியே சுவாரசியமாக இருக்கிறது. பொதுவாக இப்படி காட்சி வைப்பவர்கள் நாயகனை அடிதடி ஆள் என மிரட்டலாக யோசிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதை காமெடியாக மாற்றியிருக்கிறார்கள். நல்ல யோசனை சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ஒரே நேரத்தில் பயத்தையும் அன்பையும் ஊராருக்கு கொடுப்பவன். எதிர்மறையான விவரிப்புகளை காளி பாத்திரத்திறகு கொடுக்கும் இயக்குநர், பின்னர்தான் அந்த பாத்திரத்தின் நல்ல விஷயங்களைக் காட்டுகிறார். முன்கோபம் இருந்தாலும

தங்கச்சியின் கையால் உயிரைப் போக்கிக்கொள்ளும் அண்ணனின் அன்லிமிடட் பாசம்! வீரசிம்ம ரெட்டி-என்பிகே (2)

படம்
  வீரசிம்மா ரெட்டி வீர சிம்ம ரெட்டி இயக்கம் கோபிசந்த் மலினேனி இசை தமன் சாய் கண்டசாலா என்பிகே, ஸ்ருதி, ஹனிரோஸ், வரலட்சுமி   அண்ணன் தங்கை பாசத்தின் எக்ஸ்ட்ரீம் வெர்ஷன். இருவருக்கும் பாசத்தால் ஒருவருக்கொருவர் தம் உயிரைக் கூட விடுகிறார்கள். இதனால் ஓ ஹென்றி கதை போல யாருக்கும் சல்லி பைசா பிரயோஜனம் இல்லாமல் போகிறது.   இதனால் பாசமேனும் மனதில் பதிகிறதா என்றால் அதுவும் இல்லை என்பதுதான் வேடிக்கை. முதல் காட்சியில் ஊரின் பெரிய நிலத்தைக் காட்டுகிறார்கள். அங்கு கட்டிலில் அமர்ந்திருக்கிற ஒருவரிடம் கல்யாணப் பத்திரிக்கையை ஒருவர் கொண்டு வந்து கொடுக்கிறார். அதற்கு ஊரின் பெரிய தலையை வரச்சொல்ல சொல்லுகிறார். வந்தால் அங்கு வைத்தே அவரைக் கொல்வதாக சொல்லுகிறார். ஆனால் அதற்கு கட்டிலில் உட்கார்ந்திருக்கிறவர். அது முடியாது. சாத்தியமே இல்லை என்கிறார். இதனால் அவரைக் கொன்று, அவரது பயிர்களை தீ வைத்து எரித்து விடுகிறார். அவர்தான் வில்லன், பிரதாப் ரெட்டி. புலிசர்லா ஊரில் வாழும் வீர சிம்மா ரெட்டி, அந்த ஊரையே வாழ வைக்கிற ஆள். அதேசமயம் நல்லதோ கெட்டதோ இரண்டையும் அந்த ஊர் மக்களுக்கு அவரே செய்கிறார். அவர் ஏற்பாடு

குடும்ப பாசத்தால் வெட்டியாக சுற்றும் நாயகன் காட்டும் வீரம்! ஆறடி புல்லட் - கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ்

படம்
  ஆறடி புல்லட்  இயக்கம் பி கோபால் இசை மணி சர்மா  கோபி சந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், அபிமன்யூசிங் கட்டுமானத் தொழிலை சொந்தமாக தொடங்க நினைக்கும் இளைஞன், கோபி சந்த். ஆனால் அப்பா அவன் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இதனால் அவன் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். அதுவும் கூட அப்பாவின் சிபாரிசில்தான். அங்கு சென்றாலும் கூட தவறாக வேலை செய்பவர்களை வாயால் திட்டி கையால் அடித்து காலால் உதைக்கிறான். இதனால் வேலை போகிறது. என் குடும்பம்தான் எனக்கு முக்கியம் என வந்துவிடுகிறான். இப்படி இருக்கும் சூழலில் விஜயவாடாவில்  உள்ள காசி என்ற ரவுடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் அவனுக்கும் அவன் நேசிக்கும் குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.  படத்தில் காமெடி என்பது பிரம்மானந்தம் வரும்போதுதான். அதுவரை நாயகனே சிறியதாக காமெடி செய்ய முயல்கிறார். அதெல்லாம் பெரிதாக எடுபடவில்லை.  குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் நாயகனின் லட்சியம். அதற்காக சுய தொழில் செய்ய நினைக்கிறான். ஆனால் குடும்பத்திடம் அவனுக்கான பாசம் எப்படி உள்ளது என்பதைக் காட்ட ஆக்சன் காட்சிகள்தான் ஒரே சாட்சி. மற்றபடி வேற

நேரத்தை வீணாக்கிய சாணக்கியத்தனம்! - சாணக்கியா படம் எப்படி?

படம்
சாணக்கியா இயக்கம் - திரு ஒளிப்பதிவு - வெற்றி பழனிசாமி இசை - விஷால் சந்திரசேகர் ஆஹா கோபிசந்த் மட்டும்தான். கூடவே துணைக்கு விஷால் சந்திரசேகர். வேறு யாருமில்லை. ஒளிப்பதிவாளர் சொன்ன வேலையைச் செய்திருக்கிறார். ஐயையோ மற்ற எல்லாமும்தான். மெஹ்ரின் பிர்சாதா, பாட்டுக்கான நாயகியாக மாறிவிட்டார். தன் குடும்பத்தைப் பற்றிப் பேசும் இடம் மட்டும்தான் தேறுகிறது. ஹீரோ எப்போதும் தன் நண்பர்கள் சகிதமாக இருக்கிறார். அவர்களுக்காக சண்டை போடுகிறார். ஓடுகிறார். அடிக்கிறார். ரா தலைவருக்கே கட்டளைகள் பிறப்பிக்கிறார். கதை: நண்பர்களைக் காப்பாற்றும் ரா ஏஜெண்டின் கதை. எப்படி இருக்க வேண்டும் என நினைப்பீர்களோ அப்படியெல்லாம் இல்லை. கதையும் பிரமாண்டம் என்றால் படத்தையும் அப்படித்தானே எடுக்கவேண்டும்? படத்தில் எந்த விஷயமும் அப்படி இல்லை. குத்துப்பாடலில் அறிமுகமாகும ஜரின் கானைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். மெரினை இம்மியளவும் ஏற்க முடியவில்லை. திணிப்பாகவே இருக்கிறது. பின்னே பாட்டு வெச்சாச்சு. அதுக்கு ஒரு பொண்ணு வேண்டாமா என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. அலி, சுனில் ஆகியோரை வீணடித்து இருக்கிறார

சவாலே பன்ச் வசனங்கள்தான் - பாந்தம் படம் எப்படி?

படம்
பாந்தம் (தெலுங்கு) சக்கரவர்த்தி ரெட்டி கதை வசனம்: பாபி கோலி, ரமேஷ் ரெட்டி ஒளிப்பதிவு: பிரசாத் முரல்லா கோபிசுந்தர் உருப்படியான விஷயம் படத்தின் ஒளிப்பதிவுதான். கதாநாயகின் அழகை அம்சமாக காட்டுவதிலிருந்து அதிரடி சண்டைக்காட்சிகளை மிரட்டலாக பதிவு செய்திருக்கிறது. கோபி சுந்தரின் இசை பாடல்களில் பாந்தமாக மனதை தழுவுகிறது. ஐயகோ....... சக்கரவர்த்தி ரெட்டியின் இயக்கமும், ரமேஷ் ரெட்டியின் வசனமும் எப்படா படம் முடியும் என துயர நிலைக்கு தள்ளுகின்றன. ஏண்டா இப்படி அடிக்கிறே என்று வில்லனின் ஆள் கேட்கும் கேள்விக்கு ஐந்து நிமிடம் பன்ச் பேசுகிறார் கோபி சந்த். எங்க பாடி தாங்குமா வாத்யாரே? ஜென்டில்மேன் டைப் கதை. ஆனால் உணர்ச்சிகரமான ஒரு காட்சியைக் கூட சொல்ல முடியவில்லை. மனதை சென்டிமெண்டாக உருக்க, விபத்தில் பலியானவர்கள் அரசு அலுவலகங்களில் படும் பாட்டை சொல்லுகிறார்கள். தனியாகத் தெரிகிறது. மற்றொரு லூசு ஹீரோயின். கொள்ளையடித்து உதவும் ஹீரோவைக் கட்டிப்பிடித்து காதலித்து பாரீனில் பாடல் பாடி ஆடுகிறார். காதல் காட்சி, சோக காட்சி என அனைத்திலும் மெஹ்ரீன் அழகாக இருக்கிறார். அதற்காக இயக்கு