இடுகைகள்

திரைப்படங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனோ வைரசை முன்னரே கணித்த அமெரிக்க எழுத்தாளர்!

படம்
pixabay பொதுவாக எழுத்தாளர்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லுவதுண்டு. காரணம், அவர்கள் கற்பனையாக யோசித்த விஷயங்கள் திடீரென நிஜத்தில் நடக்கத்தொடங்கும். இதுபோல உலகம் முழுக்க நடப்பது உண்டு. அண்மையில் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவிவருகிறது. இதன் பாதிப்பை அமெரிக்க எழுத்தாளர் டீன் கூட்ஸ் 1981இல் தான் எழுதிய ஐஸ் ஆஃப் டார்க்னெஸ் என்ற நாவலில் குறிப்பிட்டுள்ளார். இதில் கொலைகார வைரஸின் பெயர் வூஹான் 400. இப்போது உலகம் முழுக்க பரவி வரும் வைரஸ் முதன்முதலில் பரவியது வூஹான் நகரத்திலிருந்துதான் என்பது நினைவுக்கு வருகிறதா? இந்நேரத்தில் மனதில் திகிலும் உடலில் நடுக்கம் இருந்தாலும் நீங்கள் வாசிக்கவேண்டிய இத்தகைய திகில் நாவல்களை சொல்லவேண்டியது எங்கள் கடமை. தி இலியட், ஹோமர் ஹோமர் எழுதிய கிரேக்க கவிதை. இது பிளேக் நோயால் அழிந்த மக்களின் துயர் பற்றி பேசுகிறது. அப்போலோவை கிரேக்க மக்கள் அவமரியாதை செய்ய அவர் கொடுக்கும் சாபத்தால் ஒன்பது நாட்களில் ஏராளமானவர்கள் இறக்கிறார்கள். இத்துயரத்தை இந்த நூல் பேசுகிறது.  தி கோப்ரா ஈவன்ட் – ரிச்சர்ட் பிரிஸ்டன் 1998 நியூயார்க் நகரில் கோப

காதல் படங்களை பார்த்துவிட்டீர்களா? - காதலர் தின ஸ்பெஷல்

படம்
pixabay காதல் திரைப்படங்கள் – இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள் காதலர் தினம் வந்துவிட்டது. இந்த நேரத்தில் காதலர், காதலி இருவரம் காதலைச் சொல்ல பரிசுகளைத் தேடிக்கொண்டு இருப்பார்கள். நாம் நம் பங்குக்கு இந்த வாரம் பார்க்கவேண்டிய காதல் படங்களை மட்டும வரிசைப்படுத்துவோமே! இன் தி மூட் ஃபார் லவ்   - 2000 காதல் இரு வேறுபட்ட பாலினத்தவர்களுக்குள்தான் வரவேண்டுமா என கேட்டு திகைப்பை ஏற்படுத்திய படம். 1960ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடப்பதாக படம் காட்சிபடுத்தப்பட்டது. சாய்ரட் -2016 சினிமாவின் எவர்க்ரீன் கதை. பணக்கார காதலி. ஏழையான தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலன். என்னாகும்? அதேதான். வாழ நினைக்கிறார்கள். ஆனால் சாதி சமூகம் அவர்களுக்கு குழந்தை இருக்கிறது. அது அனாதையாகிவிடும் என்று கூட தயங்காமல் திருமணத் தம்பதிகளை வெட்டி சாய்க்கிறது. இதையும் நீங்கள் பார்க்கலாம். பலரும் காதல், கல்யாணத்தோடு படத்தை முடிப்பார்கள். ஆனால் உண்மையான வாழ்க்கை அதற்குப் பிறகே தொடங்குகிறது. ப்ரோக்பேக் மவுண்டைன் – 2005 இரண்டு கௌபாய்களுக்குள் ஏற்படும் காதல் உணர்வைப் பேசிய வகையில் கவனிக்க வைத

நான்காம் காட்சி - லாய்ட்டர் லூன்

நான்காம் காட்சி :     சத்தம் எழுப்பாத குக்கூ                                                               கரட்டுப்புலி குக்கூவின் கதை பார்வையற்ற ஆண், பெண் இருவரின் காதல் சேர்ந்ததா இல்லையா என மனம் பதற வைக்கும் திரில் ராமெடி கதை. நகரத்தில் பாதிப்பேர் பார்த்த பார்வையற்றோரின் வாழ்வை எதுக்கு பாஸ்! சோகமாக காட்டிக்கிட்டு என ராஜூ முருகன் முடிவெடுத்து எல்லாப்பயவளுக்கும் புது சொக்காய் எல்லாம் போட்டுவிட்டு பளாபளா என்று கேமராவில் ஓளி ஓவியம் வரைய முயன்றிருக்கிறார். ஆனால் என்ன பண்ணுவது? ரொம்ப அவசரத்துல வரைஞ்சதால பாதி கிறுக்கலா போயிருச்சி.      அழகாக இருக்கும் காட்சிகளிலெல்லாம் ஆழமில்லாது போய்விடுகிறது. காவல்துறை பற்றிய சித்தரிப்பு இயக்குநரின் மனக்கசப்பை சொல்கிறதோ! ஒரு நிருபரின் பாணி படத்திலும் வந்து சோதிக்கிறது.      எளிய மனிதர்கள் விகடன் சாரதிதம்பி, குருமாவேலன் எழுதும் அரசியல் பேசுகிறார்கள். விகடனை உள்ளே கொண்டுவந்துவிட்டார்கள். நிச்சயம் அதற்கென்றே மார்க் அதிகம் போட்டுவிடுவார்கள் அப்பத்திரிக்கையில்.      எங்கேயோ பார்த்த திரைப்பட சம்பவங்களை நினைவுபடுத்துகிறது பல காட்சிகள். இய

பார்வையாளனுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு இயக்குநர்

பார்வையாளனுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு இயக்குநர்                   எஸ். கலீல்ராஜா                தொகுப்பு: லாய்டர் லூன் நிபந்தனைகள் என்ன?     குறைந்த பட்ஜெட்டில் வார்னர் பிரதர்ஸ்க்காக நோலன் எடுத்துக்கொடுத்த ரீமேக் படமாக இன்சோம்னியா 100 மில்லியன் டாலர் வசூல் குவிக்க, அப்போதுதான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் நோலன்.     அப்போது கதைக்கு ஹாலிவுட்டில் ஏகத்துக்கும் பஞ்சம். ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், பேட்மேன் போன்ற படங்களை தூசுதட்டி காலத்திற்கு ஏற்ப ரீபூட் செய்ய தொடங்கின தயாரிப்பு நிறுவனங்கள். ஏற்கனவே அறிமுகமான கதாபாத்திரங்கள் என்பதால் வித்தியாசமான கதை சொல்லும் முறை வார்னருக்கு தேவைப்பட்டது. பலமும், பலவீனமும் கொண்ட நாயகன், அவனது புதுமையான கார் மற்றும் பயன்படுத்தும் தொழில்நுட்பம், அவனை விட அதிக பலம் கொண்ட வில்லன் என பேட்மேனை புதிய கோணத்தில் நோலன் சொன்னவிதம் வார்னர் பிரதர்ஸ் க்கு பிடித்துவிட்டது. ‘டிஜிட்டல் கேமராவில் படம் எடுக்க மாட்டேன்’ , கிராபிக்ஸ் பயன்படுத்த மாட்டேன். முடிந்தவரை அனைத்தையும்  செட் போடவேண்டும். எடிட்டிங்கும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். நான் நினைத்

இந்தியப்பிரிவினையைப்பற்றிய திரைப்படங்கள் வரலாற்று ரீதியில் ஒரு பட்டியல்

இந்தியப்பிரிவினையைப்பற்றிய திரைப்படங்கள் வரலாற்று ரீதியில் ஒரு பட்டியல் 1.   சின்னமூல், வங்கமொழி 1951, இந்தியா இயக்குநர்: நிமாய்கோஷ் 2.   கர்த்தார் சிங், உருது, பஞ்சாபி, 1954, பாகிஸ்தான் இயக்குநர்: சைபுதின் சைப் 3.   சுபர்ண ரேகா, வங்கமொழி, 1962, இந்தியா இயக்குநர்: ரித்விக் கட்டக் 4.   கரம் ஹவா, உருது, இந்தி, 1973, இந்தியா இயக்குநர்: எம்.எஸ் சத்யூ 5.   தமஸ், இந்தி, 1986, இந்தியா இயக்குநர்: கோவிந்த் நிஹ்லானி 6.   வஸ்துஹாரா, மலையாளம், வங்கமொழி, 1990, இந்தியா இயக்குநர்: அரவிந்தன் 7.   மம்மோ, உருது, இந்தி, 1994, கனடா இயக்குநர்: ஷியாம் பெனகல் 8.   எர்த், உருது, இந்தி, 1994, கனடா இயக்குநர்: தீபா மேத்தா 9.   டிரெய்ன் டு பாகிஸ்தான், உருது, இந்தி, 1997, இங்கிலாந்து இயக்குநர்: பமேலா ரூக்ஸ் 10.            ஜின்னா, உருது, ஆங்கிலம், 1998, பாகிஸ்தான் இயக்குநர்: ஜமில் தால்வி 11.            கர்வான், இந்தி, 1999, இந்தியா இயக்குநர்: பங்கஜ் புடாலியா 12.            ஹேராம், தமிழ் 2000, இந்தியா இயக்குநர்: கமலஹாசன் 13.            சித்ரா நாதிர் பரே, வங்கமொழி, 2002, பங்களாதேஷ் இயக்குநர்: தன்வ