காதல் படங்களை பார்த்துவிட்டீர்களா? - காதலர் தின ஸ்பெஷல்
pixabay |
காதல் திரைப்படங்கள் – இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள்
காதலர் தினம் வந்துவிட்டது. இந்த நேரத்தில் காதலர், காதலி
இருவரம் காதலைச் சொல்ல பரிசுகளைத் தேடிக்கொண்டு இருப்பார்கள். நாம் நம் பங்குக்கு இந்த
வாரம் பார்க்கவேண்டிய காதல் படங்களை மட்டும வரிசைப்படுத்துவோமே!
இன் தி மூட் ஃபார் லவ் - 2000
காதல் இரு வேறுபட்ட பாலினத்தவர்களுக்குள்தான் வரவேண்டுமா
என கேட்டு திகைப்பை ஏற்படுத்திய படம். 1960ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடப்பதாக படம் காட்சிபடுத்தப்பட்டது.
சாய்ரட் -2016
சினிமாவின் எவர்க்ரீன் கதை. பணக்கார காதலி. ஏழையான தாழ்த்தப்பட்ட
சாதியைச் சேர்ந்த காதலன். என்னாகும்? அதேதான். வாழ நினைக்கிறார்கள். ஆனால் சாதி சமூகம்
அவர்களுக்கு குழந்தை இருக்கிறது. அது அனாதையாகிவிடும் என்று கூட தயங்காமல் திருமணத்
தம்பதிகளை வெட்டி சாய்க்கிறது. இதையும் நீங்கள் பார்க்கலாம். பலரும் காதல், கல்யாணத்தோடு
படத்தை முடிப்பார்கள். ஆனால் உண்மையான வாழ்க்கை அதற்குப் பிறகே தொடங்குகிறது.
ப்ரோக்பேக் மவுண்டைன் – 2005
இரண்டு கௌபாய்களுக்குள் ஏற்படும் காதல் உணர்வைப் பேசிய வகையில்
கவனிக்க வைத்த படம். தனிமையாக அமைந்துள்ள மலைப்பகுதியில் தமக்குள் உள்ள காதலை அடையாளம்
கண்டுபிடிக்கின்றனர். காதல் என்பதை மறுவரையறை செய்யும் விவாதத்தை மேற்குலகில் ஏற்படுத்தியது.
டைட்டானிக் – 1997
இந்த படத்தை காதலர்கள் மட்டுமல்ல ஊரு உலகே பார்த்துவிட்டு
அவதார் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறது. இந்த நேரத்தில் இந்தப்படத்தை பார்த்துவிட்டீர்களா
என்றால் நன்றாக இருக்காது. கடல் பரப்பில் நடக்கும் காதல், கப்பலின் பிரமாண்டம், புதுப்பணக்காரத்தன
செருக்கு படம் வேற லெவலில் இருக்கும். கப்பல் நொறுங்குவதுதான் உலகிலுள்ள அனைவருக்கும்
தெரிந்த விஷயம். அதில் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை நெகிழ்ச்சியாக சொல்லியிருப்பார்
ஜேம்ஸ் கேமரூன்
தேவ்தாஸ் – 1995
தேவதாஸ் – பார்வதி கதையை இலக்கியமாகவே படித்திருப்பீர்கள்.
காதல் தோல்வியால் குடித்து, பரத்தையர்களின் நடனத்தை பார்த்து அப்படியே நோய்வாய்ப்பட்டு
இறப்பார் கதாநாயகர். நம்பவே முடியாத குற்றவுணர்வை ஏற்படுத்தும் காதல் படம். நிறைய காதலர்கள்
இந்த படத்தை பார்க்க விரும்புவது கடினமே.
சம்மர் ஆஃப் 42 -1971
இளைஞர் ஒருவர் வயதான பெண் ஒருவரை காதலிப்பதுதான் கதை. இன்றும்
செமையாக காசு கல்லா கட்டும் கதை. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நினைத்துக்கொண்டு
படத்தை பாருங்கள். மகிழ்ச்சியாக இருக்கும்.
ஏக் துஜே கேலியே 1981
தென்னிந்தியா ஆட்களை மராத்தி ஆட்கள் நிறையப்பேர் கல்யாணம்
செய்துகொள்ள இந்தப்படம் உதவியது. காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாமல் போக காதலன், காதலி
தற்கொலை செய்துகொள்வதுதான் படத்தின் கதை. தந்தை எரிக்கும் காதல் கடித த்தை அப்படியே
டீயில் கலக்கி குடிக்கும் எக்ஸ்ட்ரீம் இசத்தில் படம் காதல் பித்தை வட இந்தியாவில் பரப்பியது.
க்யாமத் சே க்யாமத் தக் -1968
இந்தியாவில் ரோமியோ ஜூலியட் கதையை எடுத்தால் எப்படி இருக்கும்
என கதை எழுதி ஹிட் அடித்தார்கள். அமீர்கான், ஜூஹி சாவ்லா நடித்திருந்தார்கள்.
மேரேஜ் ஸ்டோரி 2019
ஸ்கார்லெட் ஜோகன்சன் – ஆடம் ட்ரைவர் நடித்த நெட்ஃபிளிக்ஸ்
படம். காதல், உண்மை , நேர்மை, குடும்பம் என்பதைத் தாண்டி வேறு விஷயங்களும் காதல் உறவுக்கு
தேவை என்பதை மறைமுகமாக உணர்த்தும் படம் இது.