என்னுடைய கதாபாத்திரத்தை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்!




Image result for taapsee pannu

என்னுடைய படத்தை மக்கள் பார்க்கவேண்டும்.

டாப்சி பானு, திரைப்பட நடிகை

நீங்கள் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என முடிவு செய்கிறீர்கள்?

அது எளிதானதுதான். மக்கள் என்னுடைய படத்தைப் பார்க்கவேண்டும் என நினைக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் படத்தைப் பார்க்க தோராயமாக 500 ரூபாயை செலவிடுகிறார்கள். அப்பணம் அவர்களுக்கு திரும்ப கிடைக்காது. நேரத்தையும் பணத்தையும் எனக்காக அவர்கள் செலவிடுவதற்கான நம்பிக்கையை கதாபாத்திரங்கள் தரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

யாருடைய வழிகாட்டுதலும் இன்றி இந்தி திரைப்பட உலகில் நீங்கள் முன்னணிக்கு வந்துள்ளீர்கள். இதனை எப்படி நினைக்கிறீர்கள்?

நான் நடுத்தர வர்க்க குடும்பத்திலிருந்து வந்தவள். அந்த வாழ்க்கையை நான் பார்த்து வந்ததால், அதுபோன்ற கதைகளை என்னால் உயிர்ப்புடன் செய்ய முடிகிறது. மேலும், நான் திரைப்பட ரசிகர்களை நம்புகிறேன். அவர்களின் ஆதரவினால்தான் என்னால் இங்கு வெற்றி பெற முடிந்தது.

பல படங்களில் ஒரே மாதிரி கதாபாத்திரங்களை நடிக்கிறோம் என்று தோன்றியுள்ளதா?

இல்லை. என்னுடைய ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதமாக கதாபாத்திரங்களைக் கொண்டது. இப்போது நடித்து வரும் படம் விளையாட்டை மையமாக கொண்டது. பலவித கருப்பொருட்களை கொண்ட படங்களில்தான் நான் நடித்துவருகிறேன்.

பெண்களை மையமாக கொண்ட படங்கள் இந்தி திரைப்பட உலகில் வெற்றி பெறுவது கடினம் என்று நினைக்கிறீர்களா?

இன்று பெண்களை மையமாக கொண்ட படங்கள் வணிகரீதியில் மகத்தான வெற்றி பெற்று வருகின்றன. முதலில் இது ஆண் மைய கதாபாத்திரங்களின் உலகமாகவே இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. முன்னர் ஆண்டுக்கு இரு பெண் மைய திரைப்படங்கள்தான் திரைக்கு வரும். ஆனால் இன்று மாதம்தோறும் இம்முறையில் மூன்று படங்கள் திரைக்கு வருகின்றன. மாற்றம் மெதுவாக நடந்தாலும் அவை உறுதியாக உள்ளன. 

நன்றி – டெக்கன் கிரானிக்கல் – பிரியங்கா சந்தானி

பிரபலமான இடுகைகள்