கனவில் சைகைமொழி !



chris evans phone GIF
giphy


மிஸ்டர் ரோனி

காது கேட்கும் திறனில்லாதவர்களின் கனவில் சைகைமொழி வருமா?

இதற்கு உறுதியான பதிலைக் கூற முடியாது. காரணம் இதுபற்றி ஆராய்ச்சிகள் மிக குறைவு. 2017ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, 71 வயது முதியவர் தூங்கும்போது இதுபோன்ற சைகைமொழியை உணர்ந்துகொள்ள முயற்சி செய்தது தெரிய வந்தது. காரணம்  அவருக்கு காது கேளாமை பிரச்னை இருந்தது.

2

ஸ்மார்ட் போனை அடிக்கடி செக் செய்து கொண்டே இருக்கிறேன். சாப்பிடும்போதும் படுக்கையறையிலும் கூட இப்பழக்கம் இருக்கிறது என்ன செய்வது?

உங்களுக்கு நீங்களே எல்லை வகுத்துக்கொள்வது நல்லது. சாப்பிடும்போது, படுக்கை அறையில் நான் ஸ்மார்ட் போனை பயன்படுத்த மாட்டேன் என உறுதி மொழி எடுங்கள். அதையும் போனைத் திறந்து நோட்ஸில் எழுதி வைக்காதீர்கள். இந்த நேரங்களில் போனை ஆஃப் செய்து வையுங்கள்.

பதற்றமான நேரங்களில் நகம் கடிப்பது போல போனைப் பார்த்து செக் செய்து கொண்டிருந்தால் அதற்கு நீங்கள் கவுன்சிலிங் செல்ல லாம். அதெல்லாம் வேண்டாங்க என்றால், தன்னார்வலர்களாக மனிதர்களை சந்தியுங்கள். பேசுங்கள். புத்துணர்ச்சியாக இருக்கும். உங்களின் போனை நீங்கள் மறந்துபோவீர்கள்.

நன்றி - பிபிசி