விண்வெளி பைலட்டாக விருப்பமா?


மிஸ்டர் ரோனி

விண்வெளி பைலட்டாக என்ன தகுதிகள் தேவை?

கல்யாணப் பத்திரிக்கையில் போடும்படி ஒரு டிகிரி என படிக்க கூடாது. முடிந்தவரை பொறியியல் சார்ந்து படிக்கலாம். கணினி அறிவியல் கூட படித்து வைக்கலாம். புரோகிராம் செய்ய முடியாவிட்டாலும் உதவும்.

பயிற்சி

ஜெட் விமானத்தில் ஆயிரம் மணி நேரங்களை பயிற்சி எடுக்க செலவழித்திருக்க வேண்டும்.

பார்வை

கண்பார்வை கோழி மீது உட்கார்ந்திருக்கும் ஈயைப் பார்க்கும் அளவு தெளிவாக இருக்கவேண்டும். கண்ணாடி அணிபவர்களுக்கான சோதனை உண்டு. அதில்  தேறினால்தான் விண்வெளி வண்டியை ஓட்ட முடியும்.


தலைவனாகவும், குழுவில் ஒருவனாகவும்

தலைப்பில் சொன்னது போல பல்வேறு திறன்களை நீங்கள் நிரூபிக்கவேண்டு. குறிப்பாக குழுவில் இருக்கும் உளறுவாயன்களையும், சைக்கோ சீனியர்களையும் நீங்கள் ஒருங்கிணைத்துத்தான் ஆக வேண்டும். இதில் தேறாவிட்டாலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.