2030இல் இந்தியா எப்படியிருக்கும்?
இன்றிலிருந்து பத்து ஆண்டுகள் முன்னே போகிறோம். டைம்மெஷினில்தான் ஐயா. அப்போது இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கும்? பார்ப்போம். இப்போது நாம் 2030இல் இருக்கிறோம்.
இந்தியா தன் உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பான் நாட்டை தொட்டிருக்கும். 2020இல் 3.3 ட்ரில்லியன் பொருளாதாரம் எனில் 2030 இல் 7.1 ட்ரில்லியன் ஆகும்.
இந்தியர்களின் வருமானம் குறைந்தபட்சம் இரண்டு மடங்காகி இருக்கும். 2019இல் இந்தியர்களின் தனிநபர் வருமானம் 1.5 லட்சமாகி உள்ளது. 2030இல் இந்த எண்ணிக்கை 3.1 லட்சமாக உயர்ந்திருக்கும்.
2026ஆம் ஆண்டில் அனைத்து இந்தியர்களுக்கும் இணையம் கிடைத்திருக்கும். அரசு தடைசெய்யாவிட்டால் என்ற வார்த்தையைக் கூட சேர்த்துக்கொள்ளலாம். 2019இல் 43 சதவீதமாக உள்ளது இணையப் பயனர் சதவீதம். 2030இல் இதன் எண்ணிக்கை 108 சதவீதமாக உயரும்.
இந்திய மக்கள் தொகை உயரும். இதனை இந்தியாவோடு ஐந்து பஞ்சாப் மாநிலங்கள் ஒன்றாக இணைவது போல என்று குறிப்பிடுகின்றனர். 2019இல் 1.37 பில்லியன் மக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் 1.50 பில்லியனாக உயரும்.
பத்தில் ஒன்பது இந்தியர்கள் படித்திருப்பார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி இப்போது 74 சதவீத இந்தியர்கள் கல்வி கற்றுள்ளனர். 2031இல் 91.2 சதவீதமாக கல்வி கற்றோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.
உங்களின் வாழ்நாள் அதிகரித்திருக்கும். உங்கள் தாத்தா, பாட்டியின் வாழ்நாள் 1947இல் 35 ஆண்டுகள் எனில் அது அப்படியே இருமடங்காக உயரும். 2030இல் 72 ஆண்டுகளாக வாழ்நாள் கூடலாம்.
புலிகள் கணக்கெடுப்புப்படி இந்திய வனங்களில் 4400 புலிகள் வாழ்வதாக செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானங்களில் வட அமெரிக்க மக்கள் தொகையை விட அதிக பயணிகள் பயணம் செய்வார்கள். இதற்கு டிக்கெட் விலை குறைவாக உள்ளதும், விமான நிறுவனங்களின் போட்டியும் முக்கியக்காரணம்.
இரண்டரை கோடி இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பார்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த நாட்டைத் தேர்ந்தெடுத்து வாழச்செல்லலாம். அப்போது இந்தியா என்னாகும் என நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் முன்னேறுவது கஷ்டம்.
மாதம்தோறும் மக்கள் பயன்படுத்தும் இணைய டேட்டா மதிப்பு கூடும். 2018இல் 9.8 ஜிபியாக உள்ளது. 2030இல் 26.2 ஜிபியாக உயரும்.
பத்தில் ஒரு இந்தியர் வருமானவரி கட்டுவார். தற்போது 20 இந்தியர்களில் ஒருவர்தான் வரி கட்டி வருகிறார்.
கொலைக்குற்றங்கள் 1.3 சதவீதமாக குறையும். எப்படி என்கிறீர்களா? சீனாவைப் போலவே முகமறிதல் சோதனையை அனைத்து இடங்களிலும் மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
வெங்காயம் விலை ஏறியது. எகிப்து, துருக்கி வெங்காயங்களின் மூலம் பிரச்னை தீர்ந்தது. இதே வேகத்தில் வெங்காயம் விலை ஏறினால் கிலோ 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும். ஆல்டோ காரின் விலையும், இதுவும் ஒன்றாக இருக்கும்.
நன்றி - டைம்ஸ்