கற்பனையால்தான் மனிதகுலம் வளர்ச்சி பெற்றதா?

Where does the colour go when a material fades in the Sun? © Getty Images

மிஸ்டர் ரோனி 

நீரின் கொதிநிலை மாறுமா?

நீரின் கொதிநிலை என்பது அங்குள்ள அழுத்தத்தைப் பொறுத்தது.
கடல்மட்டத்தில் நீங்கள் இருந்தால் அங்கு அழுத்தம் தோராயமாக 1013 ஹெக்டாபாஸ்கலாக இருக்கும். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். அதுவே நீங்கள் இமயமலையில் உட்கார்ந்து இருந்தால் அங்கு நீரின் கொதிநிலை 71 டிகிரி செல்சியஸாக இருக்கும். வேகமாக நீரைக் கொதிக்க வைத்துவிடலாம்.  நீரை கொதிக்கவைக்கும்போது, நீர் மூலக்கூறுகள் அலைவுற்று நீராவியாகின்றன. அந்த நீராவி மூலக்கூறுகளின் அழுத்தம், அச்சூழலின் அழுத்தத்திற்கு  சமமாகுவதே நீரின் கொதிநிலை எனலாம்.

வெயிலில் காய வைக்கப்படும் துணி வெளுத்துப்போவது ஏன்?

ஒரு பொருளின் துணியிலுள்ள நிறத்தை தேக்கி வைக்கும் மூலக்கூறு அமைப்புக்கு குரோமோபோர் என்று பெயர். இதன்மீது ஒளியிலிருந்து வரும் போட்டான்கள் பட்டு உட்கவரப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு பொருளின் வண்ணம் தீர்மானிக்கப்படுகிறது. சிவப்பு வண்ண உடைகளை வேகமாக வெளுத்துப்போகின்றன. காரணம், அவை அதிகளவு ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கின்றன. இதனால் அதன் குரோமோபோர் அமைப்பு சிதைகிறது. இதனால் அதன் நிறம் மங்குகிறது.

மனிதர்களின் வளர்ச்சி கற்பனையால் முன்னேற்றம் பெற்றதா?

இல்லையெனில் நமக்கு ஜே.கே. ரோலிங் எழுத்தால்  ஹாரி பாட்டர் கிடைத்திருக்குமா? பாலைவனத்தில் உணவின்றி சென்று செத்து பிழைத்தேன் என்று ஒருவர் சொல்கிறார். உண்மையோ, பொய்யோ அந்த சூழ்நிலை உடனே உங்கள் முன் வருகிறது. உண்மைதான் அல்லவா?  நாமாக இருந்தால் எப்படி பிழைத்திருப்போம் என ஒரு நொடி யோசிப்பீர்கள். அதுதான் கற்பனை. இந்த சிந்தனையும், கற்பனையும்தான் நம் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்துள்ளன. கற்பனைக்கதைகளால் நேரடியாக வளர்ச்சி பெறவில்லை. ஆனால் அவை நம் தேவைகள் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் தந்தன. லாஜிக் இல்லாத மேஜிக்தான் சில சமயங்களில் சூப்பராக வொர்க்கவுட் ஆகும்.

நன்றி - பிபிசி 















பிரபலமான இடுகைகள்