உலகில் நடக்கும் போர்களுக்கு காரணம்! - நாகரிகங்களின் மோதல்!

Image result for நாகரிகங்களின் பண்பாடு




உலகின் பல்வேறு விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் நாடு அமெரிக்கா. அதற்கு காரணம் என்ன? அவர்களின் பொருளாதார வளர்ச்சி. இதை உருவாக்கியவர்கள் அங்கு பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள் அல்ல. அகதிகளாக பிழைக்க அங்கு சென்றவர்கள் மூலமாக அந்நாடு இன்று வல்லரசாக மாறியுள்ளது. இந்நிலையிலும் அங்குள்ள கிறித்தவம், முஸ்லீம், இந்துகள்  சார்ந்து நாகரிக மோதல் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் குறிப்பிட்ட மத த்தினரின் வழிபாட்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. இது நாடுகளுக்கு இடையிலான போராக இதுவரை மாறவில்லை. ஆனால் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறது இந்நூல். 

எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்பது செயலாக உருவாகி சண்டை வருகிறது. ஆனால் பொதுவாகவே வேறு கலாசாரம் பண்பாடு கொண்டவர்களை பிறர் ஏற்பதில்லை. இந்த வேறுபாடு பிற மதங்களை விட கிறித்தவம், இஸ்லாமில் அதிகம் உள்ளது. இவை இரண்டும் இன்று வரையும் ஒன்றையொன்று அதிகம் எதிர்த்து வருகின்றன. இன்றைய ஈரான் - சவுதி அரேபியா, ரஷ்யா, போஸ்னியா, சீனா - ரஷ்யா, சீனா - ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெறும் பிளவுக்கோட்டுப் போர்களையும் ஆசிரியர் விளக்கியுள்ளார். எப்படி சாதாரண போர்களை விட இவை வன்முறையாக இருக்கிறது, இதன் விளைவுகள், இதனை எப்படி நிறுத்துவது என ஏராளமான நூல்களை படித்து மேற்கோள் காட்டியுள்ளார். பிரமிப்பாக இருக்கிறது. 

உலக அரசியலை ஓரளவேனும் அறிந்தவர்களுக்கு நூல் எளிதாக இருக்கும். பாக்யாவின் குட்டிக்கதையை படித்துவிட்டு இந்த நூலை படிக்க நினைத்தால் கஷ்டம். பல்வேறு நாடுகளில் உள்ள உள்நாட்டுப் போர்களை விரிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக இஸ்லாம் மதம் பற்றிய எழுதியவற்றை அவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம். 


க.பூரணச்சந்திரன் வாசிப்பில் உறுத்தலின்றி படிக்க உதவுகிறார். கடினமான நூல் என்றாலும் மொழிபெயர்ப்பு அம்சமாக படிக்க உதவுகிறது. இந்த ஆண்டிற்கான விகடன் விருது இந்த நூலுக்கு கிடைத்தது விசேஷம். 

நன்றி- கே.என்.சிவராமன், குங்குமம் முதன்மை ஆசிரியர்