கூட்டத்தில் தனியாக சிந்திக்கும் ஒருவன்! - அன்புள்ள அப்பாவுக்கு...
pixabay |
8
அன்புள்ள
அப்பாவுக்கு, வணக்கம்.
நலமாக
இருக்கிறீர்களா? விபத்தினால் ஏற்பட்ட வலி இன்னும் உங்களுக்கு தொடையில் இருக்கும். நீங்கள்
நலம்பெற பெருமாளை பிரார்த்திக்கிறேன். விபத்து என்பது தற்செயலானது என்பதால் அதில் நமது
கட்டுப்பாடு எதுவும் கிடையாது.
விபத்து
ஏற்படுவதற்கு முன்னர் முதல் அறிகுறி நேரும். நமது கவனம் குலைந்துபோவதுதான், அது. இதற்கு
நமது ஜாதகத்திலுள்ள பிரச்னைகள் முதல் காரணம். அடுத்து, நம்மைப் பார்த்து பொறாமைப்படுபவர்களின்
பாதிப்பும் உண்டு. இந்த விளைவுகளை நமக்கு காட்டுவது நாம் வளர்க்கும் கால்நடைகள், செல்லப்பிராணிகள்தான்.
இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கடுமையைக் குறைக்க குலதெய்வ வழிபாட்டைச் செய்யலாம்.
நான்
சாமி கும்பிடும்போது வணங்குவது மட்டுமே செயலாகவும் எண்ணமாகவும் இருக்கிறது. எந்த வேண்டுதல்களையும்
சரியாக நினைத்து சாமி கும்பிட்டதாக எனக்கு நினைவில்லை. உறவுகள் தமக்கான லாப, நஷ்டக்கணக்குகளை
போட்டுக்கொண்டு வலம் வரும்போது இறைவனை மட்டுமே நம்ப முடியும். அறிவுக்கான சரியான துணையாக
மனைவி அமையாதபோது ஆண் முழுக்க தனிமையிலேயே அனைத்து முடிவுகளையும் எடுக்க நேரிடும்.
எந்தக்கூட்டத்திலும் தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுக்க
நினைத்து சிந்திப்பவன் தனியாகத்தானே இருக்கமுடியும்?
நன்றி
!
ச.அன்பரசு
10.4.2016