மனிதர்கள் உருவாக்கிய வலிமையான அமிலம்! - மிஸ்டர் ரோனி
மிஸ்டர் ரோனி
பேக் டூ பேக் பதில்கள்
டால்பின் கடலுக்கு அடியில் எப்படி தூங்க முடியும். அது அடிக்கடி சுவாசிக்க கடலின் மேற்பரப்பிற்கு வரவேண்டியிருக்குமே?
லாஜிக் கேட்கிறீர்கள். விஷயம் என்னவென்றால், அவை தூங்கும்போது இயல்பாக இருக்கும்போது சுவாசிப்பதைவிட 75 சதவீதம் குறைவாகவே சுவாசிக்கும். இதனால் தூங்கும் போது பாதித்தூக்கத்தில் அவை கடலின் மேற்பரப்புக்கு வரவேண்டிய அவசியமில்லை. அப்படி வந்தாலும் தன் எதிரிகளை கவனித்துக்கொண்டேதான் சுதாரிப்பாக மூச்சு வாங்கும்.
ஹீலியம் பலூன்கள் எவ்வளவு உயரத்திற்கு பறக்கும்?
2005 ஆம் ஆண்டு மும்பையில் ஹீலியம் பலூனில் ஒருவர் 21,027 மீட்டர் உயரத்தில் பறந்து சாதனை செய்தார். அவர் பெயர். விஜய்பட் சிங்கானியா.
பூஞ்சை என்பது என்ன விதமான தாவரவகை?
பூஞ்சை என்பது தாவர வகையில் சேராது. அவை காளான்களில் ஒட்டுண்ணியாக படர்ந்து வளர்கின்றன. காளான்களுக்கு இயல்பில் ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் கிடையாது. அதனை பூஞ்சைகள் நிறைவு செய்து அதனை வளரச்செய்கின்றன. 1969ஆம் ஆண்டு இவை வகைப்படுத்தப்பட்டன.
ஈக்கள் எப்படி சுவர்களில் கிரிப்பாக ஏறுகின்றன?
ஸ்பைடர் மேன் படத்தில் சிலந்தி கடித்து அவருக்கு சக்தி வந்தபின் கைவிரல்களில் நுண்ணிய முடிகள் இருப்பதாக காட்டுவார்கள். பார்த்திருப்பீர்களே. அதேதான் ஈக்களின் கதையிலும். கூடுதலாக கால்களில் குறிப்பிட்ட பசையை அவை சுரந்து சுவற்றில் கிரிப்பாக நின்று பறந்து நம்மை இம்சை செய்கின்றன.
மனிதர்கள் உருவாக்கியதில் மிக வலிமையான அமிலம் எது?
ஃப்ளூரோஆன்டிமோனிக் அமிலம் என்பது மனிதர்கள் உருவாக்கியதில் வலிமையானது. கண்ணாடியைக் கரைக்க கூடிய வலிமை கொண்ட அமிலம் இது. எனவே டெஃப்லான் பாட்டிலில் வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலிமையான அமிலம் ஹைட்ரஜன் ஃப்ளூரைடைக் குறிப்பிடுவார்கள். ஹைட்ரஜன் ப்ளூரைடை பென்டா ப்ளூரைடோடு கலக்கினால் ப்ளூரோஆன்டிமோனிக் அமிலம் ரெடி.
நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்