இடுகைகள்

நவகாளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரிவினை காயங்களை ஆற்ற முயன்ற காந்தி!

படம்
  காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாகிரகத்தின் இந்திய முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார் . ஆனால் வெளிநாட்டில் பெற்ற வெற்றபோல உடனே இங்கு வெற்றி கிடைக்கவில்லை . 1930 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடியபோது மக்கள் ஆங்கிலேயர்களை அடித்து வன்முறையை உருவாக்கிய சம்பவங்கள் நடந்தன . இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் எனவே , அப்படியே நடத்தி சுதந்திரத்தைப் பெறுவோம் என காந்தி நினைக்கவில்லை . போராட்ட அமைப்பைத் தொடங்கி திடீரென இடையில் போராட்டத்தை நிறுத்துவது தனக்கு அவமானம் என காந்தி நினைக்கவில்லை . தான் நினைத்த வடிவில் போராட்டம் நடைபெறவேண்டும் என பிடிவாதமாக இருந்தார் . இதன் விளைவாக சிலமுறை தான் தான் நடத்த்திட்டமிட்ட போராட்டங்களை நோக்கம் நிறைவேறும் முன்னரே நிறுத்தியிருக்கிறார் . பிறரைப் புரிந்துகொண்டு மக்களின் நலன்களை முன்னிறுத்த காந்தி முயன்றார் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் . தோல்வியும் அடைந்திருக்கிறார் . நீதிமன்றத்தில் வாதிட முடியாமல் தனது சக வழக்குரைஞர்களிடம் வழக்காடுவதற்கு கோரியவர்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி பேசினார் . அவர்களையும

நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம்

படம்
  நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம் ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரமடைந்தது. அதற்கு முன்னதாகவே இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை, சமாளிக்க முடியாத ஒன்றாக மாறத் தொடங்கியிருந்தது. இதன்விளைவாக, இந்தியா சுதந்திரமடைந்த நாளின்போது கூட காந்தி கலவரங்களைத் தடுப்பதற்கான பணியில் இருந்தார்.   1946 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் கட்சி, தனிநாடு கோரிக்கைக்காக தொடர்ச்சியாகப் போராடி வந்தது. இந்நோக்கத்தை அரசுக்கு வலியுறுத்த பேரணி நடத்த முடிவானது.  இறுதியாக, ஆகஸ்ட் 16 ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தது முஸ்லீம் லீக் கட்சி.  முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில் நடந்த கட்சிப் பேரணி, திடீரென வன்முறைப் பாதைக்குத் திரும்பியது. இதன் விளைவாக, கோல்கட்டாவில் வாழ்ந்த இந்துக்களின் கடைகளும், வீடுகளும் கொள்ளையிடப்பட்டன. இதற்கடுத்த நாள் இந்து அமைப்புகள், முஸ்லீம்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள், இக்கலவரத்தில் பலியானார்கள்.  கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி என வழிதெரியாமல் ஆங்கில அரசும் திகைத்து நின

காந்தியின் மனதை உலுக்கிய நவகாளி பயணம்! - சாவி

படம்
பிபிசி தமிழ் நவகாளி யா த்திரை  சாவி பதிப்பாசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி தமிழ்டிஜிட்டல் லைப்ரரி நவகாளி யாத்திரை பற்றி இந்து தமிழ்திசையில ஆசைத்தம்பி எழுதியிருந்தார். அப்போதுதான் இதுபற்றி படிக்கவேண்டும் என்று தோன்றியது. அதற்காக தேடியபோது சாவியின் இந்த நூல் தட்டுப்பட்டது.  இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான போராட்டங்கள் அப்போது நடந்து வந்தன. முஸ்லீம் லீக் தொடங்கிய போராட்டங்கள் வன்முறைக்கான தொடக்கமாக இருந்தன. இதனை அப்படியே இந்து மகாசபை போன்ற இந்து அமைப்புகள் பெரிய கலவரமாக மாற்றின. இதன் விளைவாக கராச்சி, கொல்கத்தா, வங்கதேசத்தின் நவகாளி, தர்மாபூர், பீகார் ஆகிய இடங்களில் கடும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனை நீங்கள் கண்ணீரும் கம்பலையுமாக எழுதலாம். அதேசமயம் வார இதழுக்கான நகைச்சுவை கமழவும் எழுதலாம். சாவி, இரண்டாவது ரூட் பிடித்து வாசகர்களின் மனதை வென்றிருக்கிறார். இரண்டு நாட்கள்தான் காந்தியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கல்கி அவரை நவகாளி யாத்திரையைப் பதிவு செய்ய அனுப்புகிறார். சாவி அந்த நிகழ்ச்சியை மிக அழகாக, அங்கதச்சுவையோடு எழுதியுள்ளார். காந்தி, ராஜாஜி உர