இடுகைகள்

சிம்பன்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தோல்வி அடைந்தாலும் வெற்றியை பெற சிம்பன்சிகள் செய்த முயற்சி!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்,ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர்கள் பழைய உளவியல் கோட்பாடுகள் பற்றி சந்தேகத்தை எழுப்பினார்கள். இவர்கள் புனித தன்மை கொண்ட அறிவியல் முறையிலான நிரூபணம் செய்யப்பட்ட சோதனை முறைகளை மட்டுமே நம்பினார். இதை கெஸ்சால்ட் என்று அழைத்தனர். இந்த முறையை வோல்ஃப்கேங் கோஹ்லர், மேக்ஸ் வெர்தீமர், கர்ட் காஃப்கா ஆகியோர் உருவாக்கி செயல்படுத்தினர். இதற்கும் கெஸ்சால்ட் தெரபிக்கும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இதை கெஸ்சால்ட் சைக்காலஜி என்று குறிப்பிட்டனர். இதில் பார்வைக்கோணம், கற்றல், அறிவாற்றல் ஆகிய அம்சங்கள் முக்கியமானவையாக கருதப்பட்டன.  உளவியலில் குண இயல்புகள் பற்றிய பிரிவை மிகவும் எளிமையானதாக இயற்கையின் கோணத்தில் மாறும் இயல்புடையதாக கருதுகின்றனர் என கோஹ்லர் கருத்து கொண்டிருந்தார். இவர், ஆந்த்ரோபாய்ட் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிறகு, தான் நம்பிய கொள்கைகளை அங்கு சிம்பன்சிகளை வைத்துசோதித்தார். சிம்பன்சிகளை கூண்டில் அடைத்து அதன் முன்னர் உணவை வைத்து அதை அடையும் வழிகளை சிக்கலாக்கிவிட்டார். முதலில் உணவை எளிதாக பெற முடியாமல் சிம்பன்சிகள் திணறின என்பது உண்மைதான். ஆனால் பிறகு நிலைமையை

பறவைகளின் உடலிலுள்ள தற்காப்பு ஆயுதங்கள், சிம்பன்சிகளுக்கும் கொரில்லாக்களுக்குமான போர்! -

படம்
  பறவைகளின் உடலில் தற்காப்பு ஆயுதங்கள் குறைவு உண்மை. பறவைகள் பறக்கவே அதிக ஆற்றலை செலவழிக்கின்றன. கூடுதலாக, அதன் உடலில் ஆயுதங்கள் இருந்தால்,அவற்றுக்கு அது கூடுதல் சுமைதான். எனவே பெரும்பாலான பறவைகளின் உடலில் அதிக ஆயுதங்கள் இருக்காது. அதற்கு பதிலாக உடல் நிறமும், அவை எழுப்பும் ஒலியும் அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கூடுதலாக அலகு, கால்களிலுள்ள விரல் நகங்கள்  பறவைகளுக்கு சண்டையிடும்போது உதவுகிறது.  சிம்பன்சிகளும் கொரில்லாக்களும் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடாது! உண்மையல்ல. 2019ஆம் ஆண்டு, லோவாங்கோ தேசிய பூங்காவில் (Loango national park) வாழ்ந்த 18 சிம்பன்சிகள் திடீரென  5 கொரில்லாக்களைத் தாக்கின. 79 நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலில், 2 கொரில்லா குட்டிகள் கொல்லப்பட்டன.  அதே  ஆண்டில், ஆஸ்னாப்ரூக் பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் பரிணாம மானுடவியல் கழகம் ஆகிய இரு அமைப்புகளும் இதுபற்றிய ஆராய்ச்சியை வெளியிட்டன.  https://edition.cnn.com/2021/07/22/africa/chimpanzee-gorilla-attacks-scn-scli-intl/index.html https://nypost.com/2021/07/22/chimps-are-killing-gorillas-unprovoked-for-the

வினோதரச மஞ்சரி - சிம்பன்சிகள் பற்றிய சுவாரசியங்கள்

படம்
  பறவைகள் தம் அலகை, நாம் கைகளைப் பயன்படுத்துவது போலவே பயன்படுத்துகின்றன. கூடுகளைக்கட்ட, இறக்கைகளை சுத்தம் செய்ய, உணவு தேட என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. மக்காவ் கிளி இனத்தின் அலகு, கொட்டைகளை உடைத்து தின்னும் அளவுக்கு உறுதியானது. மரங்கொத்திகள், தனது அலகினால் மரத்தை கொத்தி துளையிட்டு பூச்சிகளை உண்ணுவதை அறிந்திருப்பீர்கள்.  ஃபிரில் லிசார்ட் (Frill lizard) என்ற பல்லி இனம் உள்ளது. இது, தான் உண்ண  நினைத்துள்ள இரையை அச்சுறுத்த, தன் சவ்வைப் பயன்படுத்துகிறது. தலைக்கு பின்புறம் குடை போல விரியும் மெல்லிய சவ்வு இதற்கு உண்டு.  பிறந்தவுடனே சிம்பன்சி குட்டிகளால் நடக்க முடியாது. ஏறத்தாழ குழந்தைகள் போலத்தான். எனவே, தாய் சிம்பன்சியின் மார்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். சிம்பன்சிகள் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழுவாக வாழ்கின்றன.  சில மாதங்களில் சிம்பன்சி குட்டிகள் நிற்க முயல்கின்றன. இதற்காக மரத்தைப் பிடித்தபடி நிற்கும். அவை கீழே விழாதபடி அதன் பின்பகுதியை தாய்க்குரங்கு பிடித்துக்கொள்ளும்.  சிம்பன்சிகள் பழம், விதைகள், பூக்கள், தேன் ஆகியவற்றை உண்கின்றன. குச்சிகளையும் கற்களையும் விளையாட்டுப் பொருட்களாக சிம்

அறிவியலாளர்களுக்குக் கூட பாலுறவு பற்றி பேச கூச்சமும், தயக்கமும் இருக்கிறது! - பிரான்ஸ் டி வால், மானுடவியலாளர்

படம்
  ஃபிரான்ஸ் டி வால் (Frans de waal) பேராசிரியர், எமோரி பல்கலைக்கழகம், ஜார்ஜியா. பொதுவாக மனிதக்குரங்குகளைப் பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள் பாலுறவு மற்றும் சண்டை சம்பந்தமாகவே இருக்கும். அதன் வாழ்க்கையில் வேறு விஷயங்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதுபற்றிய ஆராய்ச்சியில் தான் பேராசிரியர் ஃபிரான்ஸ் டி வால் ஈடுபட்டிருக்கிறார். போனபோ, சிம்பன்சி ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும்  நிறைய வேறுபாடுகள் இருக்கிறதென கூறுகிறார். பிறர் மீதான கரிசனம், கூட்டு முயற்சி ஆகிய இயல்புகளைக் கொண்டதாக மனித குரங்கு உள்ளது என்று கூறுகிறார். பாலின அடையாளங்கள் பற்றி டிஃப்ரன்ட் வாட் ஏப்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் ஜென்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  கலாசாரம் சார்ந்து பாலின அடையாளங்கள் மாறுவதாக எப்படி கூறுகிறீர்கள். டோனா என்று சிம்பன்சியை உங்கள் கருத்துக்கு ஆதரவாக கூறுகிறீர்கள். இதைப்பற்றி விளக்குங்கள்.  டோனா, ஒரு பெண் சிம்பன்சி. ஆனால் ஆணைப் போன்ற உடல் அமைப்பு. பெரும்பாலான நேரங்களில் ஆண்களோடு சுற்றிக்கொண்டிருப்பாள். பாலின அடிப்படையில் பெண் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் ஆண்போலவே செயல

சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பை கண்டுபிடித்தவர்! - ஜேன் குட்டால்

படம்
  ஜேன் குட்டால் மாணவர்களுக்கான பத்திரிக்கையில் வேலை செய்தாலும் கூட இயற்கை தொடர்பான ஆய்வாளர் ஜேன் குட்டாலை, யார் அவரு, அவ்வளவு ஃபேமஸா என்று கேட்டு விளக்கம் கேட்டு நச்சரிக்கிறார்கள். எனவே அவரைப் பற்றி பேசிவிடலாம்.  ஜேன் குட்டால் இளமையில்.. யாரு சாமி இவர்?  ஜேன் குட்டால் 1934ஆம் ஆண்டு பிறந்தவர். ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி லண்டனில் ஹாம்செட்டில் பிறந்தவரின் பெற்றோர் தொழிலதிபர் - எழுத்தாளர் என வேறுபட்டவர்கள்.  மனிதர்கள் அல்லாத விலங்குகளின் குணநலன்களை ஆராய்ச்சி செய்பவர் ஜேன். மேலும் மானுடவியல் ஆய்விலும் பேரார்வம் கொண்டவர். சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான ஆய்வில் இவரே முன்னோடி. ஜேனின் சிறுவயதில் அவரது அப்பா மார்டிமோர் ஹெர்பர்ட், சிம்பன்சி பொம்மையை வாங்கிக்கொடுத்தார். அதன் பெயர் ஜூபிலி. அந்த பொம்மை ஜேனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த நாள் தொடங்கி சிம்பன்சி பற்றிய ஏராளமான விஷயங்ளை தேடி படிக்க த் தொடங்கினார்.  தனது இருபத்தாறு வயதில் தான்சானியில் உள்ள காம்பே ஸ்ட்ரீம் தேசியப் பூங்காவில் சிம்பன்சி ஆய்வில் மூழ்கினார். அறுபது ஆண்டுகள் இந்த ஆய்வை செய்தார். இதில்தான் சிம்பன்சிகளின் தகவல்தொடர்ப

மனிதர்களின் முன்னோடி விலங்குகளின் பழக்கம், வாழ்க்கைமுறை!

படம்
                              முன்னோர்களின் பழக்கங்கள்… . பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் , தங்களது பழக்கவழக்கங்களை எப்படி பெற்றார்கள் ? இதற்கான விடையை மானுடவியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளின் வழியாக தேடி வருகிறார்கள் . சிம்பன்சி , ஏப் , உராங்குட்டான் , கொரில்லா . போனபோ ஆகிய விலங்குகளின் நம்மின் மரபணுக்களோடும் , பழக்கங்களோடும் ஓரளவு நெருக்கமாயிருக்கின்றன . சாப்பிடுவது , தூங்குவது , குடும்பத்தலைவர் , அதற்கு கீழ் உள்ள அதிகாரப் படிநிலை , குழுக்களின் செயல்பாடு , தினசரி வாழ்க்கை சவால்கள் என பலதையும் இதில் நாம் பார்க்கலாம் . சிம்பன்சி வம்சாவளிப்பிரிவில் நெருங்கிய உயிரினமாக உள்ளது . நாம் இந்த விலங்கின் மரபணுக்களோடு 98 சதவீதம் ஒத்துப்போகிறோம் ., தனது ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையில் குட்டிகளை பராமரிப்பதிலும் பெரும் குழுக்களாக வாழ்வதிலும் திறன் பெற்றவைகளாக உள்ளன . பதிமூன்று வயது தொடங்கி சிம்பன்சிகள் கருத்தரிக்கத் தொடங்குகின்றன . குட்டிகளை இரண்டு வயது வரை கண்ணும் கருத்துமாக தோளில் தூக்கி வைத்து பராமரிக்கின்றன . ஆண் சிம்பன்சிகள் முதிர்ச்சியடைய அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன . இவ

சிம்பன்சிகள் அரசியல்வாதிகளாக முடியுமா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி  தாவரங்கள் இசையைக் கேட்கின்றனவா? 1973ஆம் ஆண்டு வெளியான சீக்ரெட் லைஃப்  ஆப் பிளான்ட்ஸ் நூலில் தாவரங்கள் இசையைக் கேட்கின்றன என்ற தகவல் கூறப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அப்படி கேட்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். தற்போது, தாவரங்கள் ஹிப்ஹாப், ராப் இசையைக் கேட்பதில்லை. ஆனால் பூச்சிகளின் ஓசையை கிரெஸ், ஸ்வீட் பீஸ் ஆகிய தாவரங்கள் கேட்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதிர்வுகளை அறியும் தன்மை தாவரங்களில் இருக்கின்றன. எனவே இசை மூலமாக அதிர்வுகளை தாவரங்கள் சரியாக உள்வாங்கிக்கொள்கின்றன என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. ஈக்கள் பாடுகின்றனவா? பழ ஈக்கள் தம் இணையை ஈர்க்க பாடுகின்றன. இவை மூன்று வித பாடல்களை குரல் மாற்றங்களுடன் பாடுகின்றன. முக்கியமாக பாடுவது, பெண் இணையை ஈர்க்கத்தான். கொசுக்கள் பறக்கும்போது வரும் ஒலி, அதன் இறக்கையை வேகமாக வீசுவதால் ஏற்படுகிறது. மீன்கள் தம் கழிவை எப்படி வெளியேற்றுகின்றன? சிறுநீரில் நைட்ரஜன் பொருட்கள் நிரம்பியிருக்கும். இது நீரில் கரையக்கூடியது. ஏரி, ஆறு போன்ற இடங்களிலுள்ள மீன்களின் கழிவு சற்று திடமாக இருக்கும். ஆனால் கடலில் உள்ள மீன்கள் உப்ப