இடுகைகள்

குணங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உராங்குட்டான் நகைச்சுவை உணர்வுமிக்கது!

படம்
  டாக்டர் பைருட் கால்டிகாஸ் விலங்கியலாளர் பைருட் கால்டிகாஸ், இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் உராங்குட்டான்களை ஆராய்ந்து வருகிறார். பூர்விகம், கனடா. கனடாவிலுள்ள சைமன் ஃபிரேஸர்  பல்கலைக்கழகத்தில் அகழாய்வுத்துறை பேராசிரியராக பணிபுரிகிறார்.   நீங்கள் உராங்குட்டானை முதன்முறையாக எப்போது பார்த்தீர்கள் என நினைவிருக்கிறதா?  பள்ளியில் படிக்கும்போது, டைம் லைஃப் புத்தகத்தைப் படித்தேன். அதில், ஆண் உராங்குட்டான் புகைப்படத்தை முதன்முறையாக பார்த்தேன். மனிதர்களோடு அதிக ஒற்றுமை கொண்ட குரங்கினம்.  அந்த புகைப்படம், இன்றுவரையும் என் மூளையில் மறக்கமுடியாத நினைவாக  உள்ளது.  உராங்குட்டானை 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறீர்கள். அவற்றைப் பற்றி வரையறை செய்யமுடியுமா? வால்ட் டிஸ்னி உருவாக்கிய அனிமேஷன் விலங்குகள் போன்றவை தான்  உராங்குட்டான்கள். மனதில் நகைச்சுவை  உணர்வு நிரம்பியவை. அவற்றின் உணர்ச்சிகளை நீங்கள் கூர்ந்துகவனித்தால், எனது கருத்தைப் புரிந்துகொள்ளலாம்.  பல்கலைக்கழக படிப்பை முடித்தவுடன் உராங்குட்டானைப் பற்றி ஆய்வு செய்ய எப்படி முடிவு செய்தீர்கள்? அப்போது எனக்கு வயது 19. என்னுடைய பேராசிரியர், ஆப்பிரிக்காவி

சைக்கோ கொலைகாரர்களின் குணங்கள்!

படம்
அசுரகுலம் - அதிர்ச்சியடைய வைக்கும் குணங்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுபவர்களின் முக்கியமான பிரச்னை,அவர்களை ஆழமாக கவனித்தால் தெரியும். சில குறிப்பிட்ட விஷயங்களில் அவர்களின் நிறம் தெரியும். அதாவது குணத்தில் நிறம். கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளைக் கொண்டவர்கள் தான் செய்த விஷயங்கள் குறித்து எந்த உணர்ச்சியும் இருக்காது. குற்ற உணர்ச்சி கூட. எதற்கும்  பொறுப்பேற்க மாட்டார்கள். தான் செய்த தவறுக்கும் பிறரையே பொறுபேற்க கட்டாயப்படுத்துவார்க்கள். தன்னைப் பற்றிய கம்பீரமான கருத்தைக் கொண்டிருப்பார்கள். வன்முறையைக் கையிலெடுப்பதில் பிறரை விட மூன்றுமடங்கு தீவிரத்தன்மை கொண்டவர்கள் சைக்கோ கொலைகாரர்கள். பாலியல் வல்லுறவு, பொய் சொல்லுவது ஆகியவற்றிலும் இந்த தீவிரம் பிறரை விட இரண்டு மடங்கு அதிகம் இருக்கும் என்கிறார் விஸ்கான்சின் ஆராய்ச்சியாளர் ஜோசப் நியூமன். பொதுவாக உளவியல் பாதிப்பு கொண்டவர்களின் மூளை செயல்பாடு பிறரை விட மாறுபட்டவை. பதினெட்டு சதவீதம் மூளையின் செயல்பாடுகள் மாறுபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆக்கம்: பொன்னையன் சேகர் நன்றி: சயின்ஸ் ஆஃப் பீப்பிள்

சீரியல் கொலைகாரர்களின் குணம்

சீரியல் கொலைகாரர்களின் குணங்கள் உடனே இது அனைவருக்கும் பொருந்தாது என கூவாதீர்கள். பொதுவாக ஆராய்ச்சி, மற்றும் விசாரணை அடிப்படையில் இதனைக் கூறுகிறோம். சக்திசாலி நான் பொதுவாக தான் செய்த மூர்க்கமான கொலைகள், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சீரியல் கொலைகாரர்களை அடித்துக் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். அது ஒரு சந்தோஷம். தான் ஆற்றல் மிக்கவான இருக்கிறேன் என்பதை நீங்கள் கேள்வி கேட்பது உணர வைக்கிறது. எனவே அவர்கள் அதனை தீவிரமாக விரும்புகிறார்கள். சூழ்ச்சிவாதிகள் வரலாற்றில் இது நடப்பதுண்டு. ராட்சசன் படத்தில் சில க்ளூக்களை வேண்டுமென்றே விட்டுச்செல்வது, மெல்ல கொலையின் தீவிர குளிரை எதிரிகளின் மனதில் செலுத்துவது, தவறான தகவல்களை கசியவிட்டு அலைய வைப்பது என்பதை சீரியல் கொலைகாரர்கள் செய்வார்கள். செய்தார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? அது அவர்களை முக்கியமானவர்களாக மாற்றுகிறது. அந்த விளையாட்டு அவர்களுக்கு பிடித்திருக்கிறது. தற்பெருமை தவறு சீரியல் கொலைகாரர்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாதபடி ஸ்மார்ட்தான். ஆனால் வாய் அத்தனையையும் கெடுக்கும். யெஸ் சனி நாக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்த டிராவர்