இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாரிசுரிமையை நிரூபிக்க லார்கோ வின்ச் நடத்தும் போர்! - என்பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள்

படம்
சென்னை புத்தகத்திருவிழா 2021 நந்தனம் ஒய்எம்சிஏ  என்பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள் லயன் முத்து காமிக்ஸ் கதை, ஓவியங்கள்  பிலிப் பிரான்க், ஜீன் வான் ஹாமே லார்கோ வின்ச் - லயன் முத்து காமிக்ஸ் லார்கோ வின்ச் கதை தொகுதியில் இது முதலாவது புத்தகம். நெரியோ என்ற பணக்காரர், தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் ஊழலைக் கண்டுபிடிக்கிறார். அதேசமயம் இப்படி நேர்ந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் அவர் முன்னமே யோசித்து வைத்துள்ளார். அந்த முதல் காட்சியில் அவர் பேசுவதே முழுக் கதையையும் படிக்க வைப்பதற்கான உத்வேகத்தையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது.  நெரியோ திருமணம் செய்துகொள்ளாத ஆள். ஆனால் அவருக்கு ஒரு வாரிசு உண்டு. இதனை டபிள்யூ குழும ஆட்கள் ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது. அதேநேரம் இளைஞனை தொழிலில் மூத்த ஆட்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அதேதான் அவரை எப்படியாவது முடித்துவிட்டு நிறுவனத்தை தங்கள் கையில் கொண்டு துடிக்கிறார்கள். சொத்துக்காக நடைபெறும் பெரும் போரே...என் பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள் என்ற இரு  கதைகளும்.  முதல்கதையில் நாயகனின் அறிமுகமும், அவனது இளமைக்காலமும் இயல்பாக கா

கடல் சூழலை ஆராயும் தானியங்கி ஆய்வுப்படகு! - செயில்ட்ரோன்

படம்
  கடலை ஆராயும் செயில்ட்ரோன் ஆய்வுப்படகு! கடல் பகுதியை ஆய்வுக்கருவிகள், சாதனங்கள் மூலம் ஆராய்வது மெல்ல வேகம் பிடிக்க த் தொடங்கியுள்ளது. இதனை ஆராய்வதில் கடல் பாதுகாப்பு, இயற்கைவளம் , வணிகம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. கடல் போக்குவரத்து, அதிலுள்ள வளங்கள், உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்வது என்பது,  நவீன காலத்திலும் சவாலாக உள்ளது. தற்போது அமெரிக்காவில் செயில்ட்ரோன் எனும் தானியங்கி ஆய்வுப்படகு  உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் ஆய்வுகளை செய்யமுடியும் என்று கூறுகிறார்கள். இதில் ஆய்வுக்காக யாரும் பயணிக்க வேண்டியதில்லை.  செயில்ட்ரோன் 72 அடி நீளம் கொண்ட செயில்ட்ரோன், பாய்மரப் படகு போன்ற வடிவிலானது. தானியங்கி முறையில் இயங்க கூடிய செயில்ட்ரோன், தோராயமாக 3,688 மீட்டர் தூரம் கடலை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. காற்று மற்றும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஓராண்டிற்கு இடையறாது கடலில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள சோனார் கருவியிலிருந்து உருவாகும் ஒலி அலைகளால்  7 ஆயிரம் மீட்டர் தூரம் கடலை அளவிடலாம். செயற்கைக்கோளுடன் இணைப்பிலுள்ள செயில்

புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள அறிவியல் கொள்கை! - அறிவியலில் இந்தியா முன்னேறுமா?

படம்
  அறிவியல் துறையில் முன்னேறும் இந்தியா அறிவியல் துறையில் முன்னேறும் இந்தியா! கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பிற்கான கொள்கையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் கூறப்பட்டுள்ளன.  இதற்கு முன்னர் வெளியாகிய அறிவியல் கொள்கைகளை விட ஐந்தாவதாக அரசு உருவாக்கியுள்ள கொள்கை, அடுத்த பத்தாண்டுகளுக்கானது. இதில் முழுநேர ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது, ஆராய்ச்சிகளை நாடு முழுக்க பரவலாக்குவது, சரியான ஆதாரங்களைத் திரட்டுவது, குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்பாடுகளை ஆய்வு செய்வது, தொழில்நுட்பங்களை ஏற்பது, மேம்படுத்துவது, மக்களின் கருத்துகளைப் பெறுவது, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.  மனிதவளத்தை முதலீடாக கொண்டுள்ள இந்தியாவில் புதிய அறிவியல் கொள்கை மூலம் ஆராய்ச்சிகள் அதிகரிக்கும். வரும் பத்தாண்டுகளுக்குள் முதல் மூன்று அறிவியல் நாடுகளில் இந்திய ஒன்றாக இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.  ஆராய்ச்சி தொடர்பான தகவல்கள் சாதாரண மக்களும், தனியார் நிறுவனங்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெறும்படி அறிவியல் சூழ்நிலை மாறும் என புதிய அறிவியல் கொள்கை கூறியுள்ளது. ஒரே நா

கோவாக்ஸின் தயாரித்த உள்நாட்டு சாதனை நிறுவனம்! - பாரத் பயோடெக்கின் கதை

படம்
  கிருஷ்ணா எல்லா உள்நாட்டில் தடுப்பூசியைத் தயாரித்த சாதனை நிறுவனம்!  தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தவரான கிருஷ்ணா எல்லா, தனது பாரத்பயோடெக் நிறுவனம் மூலம் கோவிட்-19க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளார்.  கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை எட்டுமாத போராட்டங்களுக்குப் பிறகு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் வெற்றிகரமாக தயாரித்துள்ளது.  இந்நிறுவனத்தின் கோவாக்ஸின் என்ற தடுப்பூசி மருந்தை அவசரநிலை காரணமாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 1996இல் தொடங்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தில் தற்போது வரை 1,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 140 மருந்துகளின் காப்புரிமைகளை வைத்துள்ள கிருஷ்ணா எல்லா, 120 நாடுகளுக்கு நூறு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்துவருகிறார்.  விவசாய அறிவியலில் பட்டம் பெற்ற கிருஷ்ணா, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சில ஆண்டுகள், சவுத் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளார். பாரத் பயோடெக்கின் ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்தை, உலக நாடுகள் பலவும் வாங்கிப் பயன

கரண் மேனன்- அமெரிக்காவில் உருவாகிவரும் தனிக்குரல் கலைஞர்!

படம்
  கரண் மேனன் இந்தியாவில் அப்போது விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. அதைப்பற்றி உலக நாடுகள் பலவும் உடனடியாக எந்த கருத்தும் சொல்லவில்லை. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக கருத்துகள் உருவாகவில்லை. அப்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர் கரண் மேனன், விவசாயிகள் போராட்டம் பற்றி எளிமையாக வீடியோ ஒன்றை உருவாக்கி பதிவிட்டார். இதன்பிறகே பல்வேறு அமெரிக்க பிரபலங்கள் விஷயத்தை விளங்கிக்கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிடத் தொடங்கினார்.  அதற்கு எதிரான இந்திய பிரபலங்கள் எப்படி சமூகவலைத்தளங்களில் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை நாளிதழ்களில், சமூக வலைத்தளங்களில் அனைவருமே படித்திருப்பீர்கள். நாம் போராட்டம் பற்றி அதிகம் பேசப்போவதில்லை. கரண் மேனன் பற்றித்தான் பேசப்போகிறோம்.  இவரது அப்பா கேரளத்தைச் சேர்ந்தவர். அம்மா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1980களில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தனர். தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.  கரணுக்கு, வெப்சீரிஸ் ஒன்றில் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தபோதுதான், நோய்த்தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் அந்த வாய்ப்பு

ஆன்மா இல்லாத அரக்கனை எதிர்கொள்ளும் டைலன் டாக்கின் போராட்டம்! - இது கொலையுதிர் காலம்

படம்
  டைலன் டாக் சென்னை புத்தகத்திருவிழா 2021 நந்தனம் ஒய்எம்சிஏ டைலன் டாக் துப்பறியும் இது கொலையுதிர்க்காலம் ஆக்கம் - செர்ஜியோ போனெல்லி தயாரிப்பு சன்ஷைன் லைப்ரரி டைலன் டாக் இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. இதில் முதல் காட்சியே டெர்மினேட்டர் படம் போல அதிர வைக்கிறது. முரட்டு மனிதர் அலுவலகம் ஒன்றுக்குள் வந்து ஹண்ட் என்பவரைப் பற்றி கேட்டு அவரை  சந்திக்க அனுமதி கேட்கிறார். அப்பாயின்ட்மெண்ட் இல்லாதவர் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது  என வரவேற்பறைப் பெண் சொல்ல, அந்த மர்ம மனிதர் ஹண்ட் என்று சொல்லியபடி உள்ளே செல்கிறார்.  பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்னரே ஹண்டை வேட்டையாடத் தொடங்கிவிடுகிறார் அவர். இதில் அலுவலகமே ரத்தக்களறியாகிறது. யார் இந்த மனிதர், அவருக்கும் ஹண்ட் என்பவருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதையின் அமானுஷ்ய புள்ளி.  டைலன் டாக் டைலன் டாக்கைப் பொறுத்தவரை கதையில் சண்டைகளை விட நுணுக்கமான மூளை விளையாட்டும், விதியின் காய்நகர்த்தல்களும் , உணர்ச்சிகரமான காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த நூலிலும் புராணகால சம்பவம் ஒன்று ஜெர்மனியிலிருந்து தொடங்கி இங்கிலாந்தில் வாழும் டைலன் டாக

க்யூஆர் கோடு வழியாக கல்வி!- டிஜிட்டல் வழியாக நடைபோடும் மாணவர்கள்

படம்
  இன்று அரசு பாடநூல்களில் க்யூஆர் கோட் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இணையம் இருந்தால் மேற்படி தகவல்களை எளிதாக அறியமுடியும். இது கல்வித்துறையில் பெரிய புரட்சி என்றே சொல்லலாம்.  குயிக் ரெஸ்பான்ஸ் கோடு என்பது, நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரங்களிலேயே தென்படத்தொடங்கிவிட்டது. அதனை ஸ்மார்ட்போன்களில் உள்ள க்யூஆர் ஸ்கேனர் ஆப் மூலம் ஸ்கேன் செய்தால், தொடர்புடைய பொருள் பற்றிய விளக்கம் கிடைக்கும்.  பாடநூல்களில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதி மூலம் மேலும் மேலும் கற்க வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த பாடங்களில் ஆர்வம் உள்ளது என கண்டுபிடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் மத்திய அரசின் சிந்தனையும் கூட. அதற்காகத்தான் மத்திய அரசின் கல்வித்துறை, நந்தன் நீல்கேனியின ஏக் ஸ்டெப் பவுண்டேஷனுடன் கைகோத்துள்ளது. இந்த பவுண்டேஷனின் தீக்சா எனும் ஆப்பில் மாணவர்கள் பாடநூல்களிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யவேண்டும். அதனை வைத்து மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் பாடங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன்மூலம் அவர்களின் ஆர்வங்களை அரசு எளிதாக அறிந்துகொள்ள முடியும்.  2017ஆம் ஆண்டு ஐந்து மாநி

ஐஐடி டூ அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  எஸ்.பவிஷ், படுகர் இனத்தைச் சேர்ந்தவர். ஊட்டியிலுள்ள துனேரி பகுதியைச் சேர்ந்தவர். பவிஷ், ஐஐடி இந்தூரில் இயற்பியல் படித்துவிட்டு, துனேரியிலுள்ள அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். முனைவர் பட்டம் பெறும் முனைப்பில் இருந்தவரை மாற்றியது அவரது நண்பர்கள்.  கிராமத்திலிருந்து ஐஐடி வரை சென்ற ஒருவர் மாணவர்களுக்கு பெரியளவில் ஊக்கமூட்டி உதவ முடியும் என கூறியதால் ஆசிரியராக பணியாற்ற பவிஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பவிஷ், ஐந்தாவது வரை உள்ளூர் பள்ளியில் படித்திருக்கிறார். பின்னர் காக்குச்சி, காரமடை என பள்ளிப்படிப்பு விரிவடைந்தது. பிளஸ் 2 படிப்பு முடிந்தபிறகு கோவைக்கு பஸ் ஏறியவருக்கு, பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.  கணினி பொறியியல் பட்டம் பெற்றவர் முதுகலைப் பட்டம் பெற ஐஐடி இந்தூருக்கு சென்றுபடித்தார். ”நான் முனைவர் படிப்பிற்கான தயாரிப்பில் இருந்தபோதுதான் எனது நண்பர்கள் கிராமத்து மாணவர்கள் பற்றி கூறினார்கள். அவர்களுக்கு பாடம் பற்றி உதவினால் நன்றாக இருக்கும் என்றார்கள். எனவே, நான் தன்னார்வமாக அவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்”’ என்றார

பேஸ்புக் வணிக பயன்களுக்காக, மக்களின் தகவல்களை பாதுகாக்க முயற்சிக்காது! - ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ

படம்
  ஜோஹோ நிறுவனர், இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு பத்ம ஸ்ரீயை வென்றிருக்கிறார். தென்காசியில் 2019ஆம் ஆண்டே கிளம்பி வந்து கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் புரட்சியாளர் இவர். அவரிடம் பேசினோம்.  பத்ம ஸ்ரீ விருது பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது? இதனை விளக்குவது கடினம். கலவையான உணர்வுகளால் பீடிக்கப்பட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. இதன் காரணமாக விருது என்பது எனக்கு பெரிய விஷயமாக பட்டது. பொதுவாக இந்த விருதுகளை சமூகத்திற்கு சுயநலமின்றி உழைப்பவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் . நான் வணிகம் செய்யும் தொழிலதிபர். எனக்கு கொடுக்கப்பட்டதை, இந்தியாவிற்கு வேறுவழிகளில் திரும்பக் கொடுக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.  வாட்ஸ் அப்பின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் இப்போது அரட்டை என்ற மென்பொருளை தயாரித்து வருகிறோம். அது இன்னும் சோதனை முறையில்தான் உள்ளது. இந்தியாவிற்கென செய்திகளை அனுப்புவதற்கு தனி மென்பொருள் தேவை என நினைத்து மென்பொருளை உருவாக்கினோம். இதுபோலவே இன்னும் பல்வேறு பொருட்களை உருவாக்கவேண்டும் என நினைக்கிறேன். பேஸ்புக் தான் கூறியபடி

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை! - அசுதோஷ் சர்மா

படம்
  அசுதோஷ் சர்மா, செயலர் - அறிவியல் தொழில்நுட்பம் வரைபடத்துறையை தாராளமயமாக்கியிருக்கிறீர்களே? பல்லாண்டுகளாக இத்துறை சீர்திருத்தங்கள் செய்யப்படாமல் இருந்தது. தற்போது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இத்துறையில் தாராளமயமாக்கும் திட்டம் செயலாக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ஏன்? நாங்கள் எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. மிகவும் துல்லியமான படங்களை பெற கட்டுப்பாடுகள் இருந்தன. இந்திய நிறுவனங்கள் இப்படி படங்களைப் பெற்று பயன்படுத்த உரிமங்களைப் பெறவேண்டும். இப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புவியியல் சார்ந்த பல்வேறு தகவல்களை நிறுவனங்கள் பெற்று பயன்படுத்த முடியும்.  இதன்மூலம் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை அவுட்சோர்ஸ் முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? உறுதியாக. இதற்கு இந்திய நிறுவனங்கள் ஆப்களை தயாரிக்கவேண்டும். அதன் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்ததாக இருப்பது அவசியம்.  மத்திய அரசு சட்டம் இயற்றினாலும் கூட நி

செய்தி இலவசமல்ல!

படம்
  அண்மையில் ஆஸ்திரேலியா, உள்நாட்டிலுள்ள செய்தி நிறுவனங்களைக் காப்பாற்ற புதிய சட்டங்களை உருவாக்கியது. இது அங்கு செய்திகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்து கோடிகளில் வியாபாரம் செய்த கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. உடனே அவர்கள் நாங்கள் எங்கள் சேவையை வேறு நாடுகளுக்கு மாற்றிக்கொள்கிறோம் என மிரட்டல் விடுத்தனர். ஆனால் அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.  இதனால் கூகுளும், ஃபேஸ்புக்கும் ஆஸ்திரேலியாவில் தங்களது சேவைகளை முதன்முறையாக பணம் கொடுத்து பெறவிருக்கின்றனர். கூகுள், பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெற்று அதற்கேற்ப தகவல்களை அவருக்கு அனுப்பி வியாபாரம் செய்துவருகின்றனர். விளம்பர வருவாய் கோடிக்கணக்கில் இருந்தாலும் அதனை உருவாக்குபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் புகார் கொடுத்ததால் ஆஸ்திரேலிய அரசு சட்டங்களை மாற்றி அவர்களை காப்பாற்ற முனைந்துள்ளது.  மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசின் முடிவை ஏற்றுள்ளது. இந்த நிறுவனம் பிங் எனும் சர்ச் எஞ்சினையும், லிங்க்டு இன் தளத்தையும் நடத்தி வருகிறது. பிற நிறுவனங்கள் இதனை வரவேற்கவில்

ஹெட்போனில் வெளிப்புற இரைச்சல் குறைக்கப்படுவது எப்படி?

படம்
  இன்று உலகச் சந்தையில் விற்கப்படும் அனைத்து ஹெட்போன்களிலும் வெளிப்புற இரைச்சலைக் குறைக்கும் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. வெளிப்புற இரைச்சலை காதில் அணியும் ஹெட்போன் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது? இதற்கு  தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்துகின்றன. ஹெட்போனில் இணைக்கப்பட்டுள்ள சிறிய மைக்ரோபோன் , வெளிப்புற இரைச்சலின் அளவை கணக்கிட்டு, அதனை மைக்ரோபுரோசசருக்கு அனுப்புகிறது. இரைச்சலின் அளவு அளவிடப்பட்டு அதற்கு ஏற்ப ஒலி அலைகளை மைக்ரோபுரோசசர் உருவாக்குகிறது. ஒருவர் பாடல் கேட்கும்போது, வெளிப்புற இரைச்சல் அளவுக்கு நிகரான ஒலி அலைகள் காதில் ஸ்பீக்கர் மூலம் உருவாக்கப்படுகின்றன. இதனால் பாடல் கேட்பவருக்கு வெளிப்புற இரைச்சல் இடையூறு செய்யாது.   ஸ்பீக்கர் (speaker) புதிதாக உருவாக்கப்பட்ட ஒலி அலைகளை காதில் ஒலிபரப்புகிறது.  சுற்றுப்புற ஒலி (ambient sound waves) ஒலி அலையின் உயரம், அதன் ஒலி அளவைக் குறிக்கிறது. அலைநீளம் சுருதியை தீர்மானிக்கிறது.  புதிய ஒலி அலை (New sound waves) வெளிப்புற இரைச்சலுக்கு பொருத்தமாக ஒலி அலைகள் உருவாக்கப்பட்டு தலைகீழ் வடிவில் ஒலிபரப்பப்படுகின்றன  இரைச்சலைக் கட்டுப்

கரையான்புற்று எப்படி உருவாகிறது?

படம்
  கரையான்கள் மரம், செடிகளில் வெளிப்புற ஓட்டிலுள்ள செல்லுலோஸை (cellulose) உண்ணும் பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. எறும்பு, குளவிகள் ஏன் கரப்பான்பூச்சிகளுக்கும் நெருங்கிய உறவுகொண்டவை. உலகம் முழுவதும் 2,750 கரையான் பூச்சி இனங்கள் உள்ளன.  காடுகளில் இறந்துபோன மரங்களை அரித்து தின்று மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. அதேவேளையில் கட்டுமானங்களிலுள்ள  மரப்பொருட்களையும் விட்டுவைப்பதில்லை. இதன் காரணமாக கட்டிடங்கள் பலவீனமடைகின்றன.  கரையான்கள் ஆப்பிரிக்காவின் சாவன்னா, பசிபிக் கடல் பகுதிகள், பருவமழைக்காடுகளில் புற்றைக் கட்டி வாழ்கின்றன. மரங்களை அரித்து நார்ச்சத்து பொருளான செல்லுலோஸை அதிகளவு உண்டாலும் அதனை எளிதில் செரிக்க ஒருவித பாக்டீரியாவை உடலில் கொண்டுள்ளன. கரையான் புற்றுகள் (termitarium) உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதில் 2 லட்சம் கரையான்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.    கட்டுமானப் பொருட்கள் கரையான்கள், தூய்மையான மண் மற்றும் தம் கழிவுகளைக் கொண்டு புற்றுகளை எழுப்புகின்றன. இவை விரைவில் காய்ந்துவிடுவதால் உறுதியாக இருக்கும்.  இடம்  உயர்ந்த மலைப்பகுதி, மரங்களின் அடிப்பகுதி, நிலத்த

தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்!

படம்
  தற்போது,  இந்திய அரசின் நிர்வாகத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட  பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள்,  தனியார் நிறுவனங்களிடம் விற்கப்படலாம் அல்லது மூடப்படலாம் எனும் நிலையிலுள்ளன. மத்திய அரசு, நிதி ஆயோக் அமைப்பின்  அறிக்கைப்படி பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 12 ஆக குறைக்கவிருக்கிறது. மொத்தமாக மூன்று அல்லது நான்கு பொது நிறுவனங்களை மட்டுமே அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கவிருக்கிறது.  அரசிடமுள்ள பொது ஆதார நிறுவனங்களாக எரிபொருள் (பெட்ரோல், நிலக்கரி), மின்சாரம், விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, காப்பீடு, வங்கி, கனிமம் ஆகியவற்றைக் கூறலாம். இத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசு தன்னுடைய முதலீட்டை விலக்கிக் கொள்ளவிருக்கிறது. மேலும் இந்நிறுவனங்களை தனியாருக்கு விற்க  திட்டமிட்டுள்ளது. இப்படி விற்பதன் மூலம் தனியார் துறையினரின்  வழியாக அந்நிய முதலீடும் இந்தியாவுக்கு கிடைக்கும்.  பொது நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பதன் மூலம் அரசுக்கு அதிகளவு வருமானம் கிடைக்கும். இதன் மூலம் கோவிட் -19 கால பொருள

உலகமயமாக்கலால் காணாமல் போகும் தாய்மொழி! - தேசியமயமாக்கலால் எழும் ஆபத்து

படம்
  1952ஆம் ஆண்டு  பாகிஸ்தானின் கிழக்குப்பகுதியில் உள்ள மக்கள் உருது மொழியைத் திணிப்பதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். அதுதான் தாய்மொழிகள் தினமாக பிப்ரவரி 21ஆம் தேதியைக் கொண்டாடுவதற்கு காரணம்.  பிற நாடுகளில் தாய்மொழிகளைப் பயில்வதற்கான ஆர்வம் குறைந்துவருகிறது.  ஜெர்மனியில் உள்ள  ஹெய்டல் பல்கலைக்கழகத்தில் கூட வங்காள மொழியைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை பத்தைக் கடக்கவில்லை. வங்காள மொழி, தமிழ், இந்தி, உருது  உள்ளிட்ட மொழிகளைக் கூட  படிக்க பல்வேறு வெளிநாடுகளில் மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற வங்காளமொழி இலக்கியங்களுக்கு  மெல்ல மவுசு குறைந்துவருகிறது. மேற்குவங்காளத்தில் 53 சதவீத இந்தி பேசும் மக்கள் உள்ளனர். அங்குள்ள கடைகளில் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் இயல்பாகவே வங்காள மொழியின் பயன்பாடு மெல்லக் குறைந்து வருகிறது.  வங்காளிகள் எங்கு சென்றாலும் மொழியை கைவிடுகிறவர்களில்லை. இங்கிலாந்தில் கூட வானொலி, பத்திரிகை என சிறப்பாக தொடங்கி இயங்கி வருகிறார்கள். மேலும் இங்கு புத்தகத் திருவிழாவும் கூட நடைபெற்று வருகிறது. ஆனாலும் கூட பயன்பாடு என்று

பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வல்லுறவு குற்றங்கள்!

படம்
  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2020 ஆம் ஆண்டில் குறைந்துள்ளதாக அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம்  ஆண்டில் நடைபெற்ற வல்லுறவு, குழந்தைகள் மீதான தாக்குதல், பெண்கள் மீதான வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளன. ஆனாலும் கூட தலைநகரில் குற்றங்கள் பெரியளவு மாற்றங்களை சந்திக்கவில்லை.  1,699 வல்லுறவுகள், 2,199 பாலியல் தொடர்பான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 65 என நடைபெற்றுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019இல் 109 வழக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி காவல்துறை ஒட்டுமொத்தமாக பெண்கள் மீதான குற்றவழக்குகள் குறைந்துள்ளன என பெருமையாக அறிவித்துவிட்டது. தினசரி நடைபெறும் குற்றச்சம்பவங்களில் டெல்லியே முன்னாடி நிற்கிறது. ஐந்து மணிநேரங்களுக்கு ஒரு வல்லுறவு, 19 மணிநேரங்களுக்கு ஒரு கொலை, 15 நிமிடங்களுக்கு ஒரு கார் திருட்டு என நடைபெற்றுவருவது அதிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள நகரில் என்பது நிச்சயம் பெருமைக்குரியது அல்ல. குற்றங்களில் கார், ஆட்டோ திருட்டு சேர்ந்திருப்பதோடு, செயின் பறிப்பும் ஒவ்வொரு மணிநேரத்திலும் புதிதாக இணைந்துள்ளது.  பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் குறைந

உலக மக்களை அதிகம் பாதிக்கும் பூஞ்சை பாதிப்பு! கேண்டிடா ஆரிஸ்

படம்
  அதிகரிக்கும் பூஞ்சைத்தொற்று! வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு நிகராக பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த்தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஸ்டெபைலோகாகஸ் ஆரியஸ் (Staphylocaccus aures), குளோஸ்டிரிடியம் டிஃபிசிலே (clostridium difficille) ஆகிய பூஞ்சைகள் ஆன்டிபயாடிக் மருந்துகளை செயல்படாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக நிமோனியா, கொனோரியா, செப்சிஸ், காசநோய் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. இப்போது உலகில் ஏற்படும் 90 சதவீத நோய்த்தொற்றுக்கு காரணமாக கேண்டிடா ஆரிஸ் (Candida auris) எனும் பூஞ்சையே காரணமாக உள்ளது. இதைத் தடுக்கும் மருந்துகளுக்கு எதிரான ஆற்றலை மெல்ல வளர்த்துவருகிறது இந்த நுண்ணுயிரி.  கேண்டிடா ஆரிஸ் இப்பூஞ்சை வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் காற்று மூலம் பரவுகிறது. பயிர்கள் வளருவதற்கு, மதுபானங்கள் தயாரிப்பிற்கு என பூஞ்சைகள் பயன்பட்டுவந்தன. கி.பி.500க்குப் பிறகு பூஞ்சைகளின் தாக்குதல் மனிதர்களின் மீது தொடங்கியது. இதற்கான மருத்துவ சிகிச்சை 1950ஆம் ஆண்டு  கண்டறியப்பட்டது. அசோல்ஸ் என்ற மருந்து கண்டறியப்பட்டது. இதை சாப்பிடும்போது ஏற்படும் பக்கவிளைவுகள் பின்னாளில் குறைந்தன. தற்போது நம்மிடம் பூஞ்ச

மாடுகளை வதைக்கின்றனவா பால் பண்ணைகள்? - வலுப்படும் எதிர்ப்புகள்

படம்
  உலகம் முழுவதும் உள்ள பால் பண்ணைகளுக்கு எதிராக பல்வேறு விலங்கு நல அமைப்புகள் போராடி வருகின்றன.  உலகநாடுகளில் இயங்கி வரும் பால் பண்ணைகள் மூலம்தான் பதப்படுத்தப்பட்ட பால், ஐஸ்க்ரீம், யோகர்ட், வெண்ணெய், நெய், சீஸ், பனீர் ஆகிய பால் பொருட்கள் கிடைக்கின்றன. மிதமிஞ்சிய பாலை பால் பௌடராக மாற்றி உலகச்சந்தையில் பல்வேறு நாடுகளும் விற்பனை செய்து வருகின்றன.  பால் பண்ணைகளில் உற்பத்தி குறையாமலிருக்க பசுக்கள் செயற்கை முறையில் சினையூட்டம் பெற்று கன்றுகளை ஈனுகின்றன. பசுக்களின் பராமரிப்பு, இயற்கையான முறை அல்லாமல் செயற்கையான சினையூட்டப்படுவது, கிடாரிக்கன்றுகளை வைத்துக்கொண்டு கிடாய்களை இறைச்சிக்கு விற்றுவிடுவது ஆகியவற்றுக்கு எதிராக விலங்குநல ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.  அமெரிக்காவில் பால்துறை சந்தை தோராயமாக 60 ஆயிரம் கோடிக்கும் அதிகம். அங்கு  மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையும் பெரியது. இருபது ஆண்டுகாலம் வாழும் பசு, ஐந்து ஆண்டுகளிலேயே பால் வளத்தை இழந்து, இறைச்சிக்காக விற்கப்பட்டுவிடுகின்றன. பால் வளமின்றி வளர்ப்பது விவசாயிகளுக்கு சுமை என்று கூறப்படுகிறது. ’’இங்கு பெறப்படும் பால் என்பது வன்முறையின

முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி!- முதலையால் ஒற்றைக்கையை இழந்தும் குறையாத அன்பு!

படம்
                  முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி ! சத்தீஸ்கர் மாநிலத்தில் கோட்மி சோனார் எனும் குளத்தில் உள்ள மக்கர் வகை முதலைகளை பாதுகாக்கும் பணியை 2006 ஆம் ஆண்டிலிருந்து செய்துவருகிறார் . சீத்தாராம் தாஸ் என்பதுதான் அவரின் பெயர் . ஆனால் கிராமத்தினர் ஒற்றைக்கை இல்லாத அவரின் பணிகளைப் பார்த்து பாபாஜி என்று அழைக்கின்றனர் . துன்பம் செய்தவருக்கும் நன்மை நினைத்து நல்லது செய்யவேண்டும் என்று சொல்வார்கள் . திருக்குறளிலும் கூட இப்படி சொல்லப்படுவதுண்டு . உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்தால் அவரை நாம் சந்திக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் ? பாபாஜியும் அப்படித்தான் . 2006 ஆம் ஆண்டு குளத்திலுள்ள முதலை முட்டைகளை காப்பாற்ற முயன்றார் . இதில் கோபமுற்ற பெண் முதலை அவரது இடதுகையை கடித்துவிட்டது . முற்றாக சேதமடைந்த கையை அகற்ற வேண்டியதாகிவிட்டது . அப்படி ஒரு கொடுமை நடந்தபோதும் பாபாஜிக்கு முதலைகள் மீது கருணை குறையவில்லை . இப்போதும் அவர் காப்பாற்ற நினைத்த மூன்று முதலைகளை வந்து பார்த்துவிட்டு செல்கிறார் . தினசரி மூன்று முறை அதனை அழைக்கிறார் . அவையும் யார் அழைப்பது என எட்டிப்பார்த்துவிட்டு அவரை அட

இளம் செயல்பாட்டாளர்களை சட்டங்கள் மூலம் அச்சுறுத்தும் மத்திய அரசு!

படம்
                இளம் செயல்பாட்டாளர்களைத் தடுக்கிறதா இந்தியா? பிரைடே பார் ப்யூச்சர் எனும் கிரேட்டா துன்பெர்க் தொடங்கிய சூழல் அமைப்பை இந்தியாவில் பெங்களூருவில் தொடங்கியவர் , திஸா ரவி . தற்போது டூல்கிட் விவகாரத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இவரை கைது செய்வதற்கான டெல்லி போலீசார் பெட்ரோல் , டீசல் விலையையும் பொருட்படுத்தாமல் பெங்களூருவுக்கே சென்று திஸாவை கைது செய்துள்ளனர் . அப்படியேன்ன தவறை அவர் செய்தார் ? விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டூல்கிட் எனும் போராட்ட முறைகளில் சில மாறுதல்களை செய்தார் . வாட்ஸ் அப்பில் அதனை பகிர்ந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு . போராடுவதற்கு என்ன பிரச்னை ? அதைக்கூட புதிய இந்தியா ஒருவருக்கு அனுமதி தராதா என்ற கேள்வி இக்கைது மூலம் எழுந்துள்ளது . இதன்மூலம் மத்திய அரசின் உளவுத்துறை வெளிப்படையாக சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பெரியளவு பாதிப்பை ஏற்படுத்துள்ளளது . மக்களுக்காக போராடினால் உங்களுக்கும் இந்த நிலைமைதான் என்பதால் திஸா ரவியுடன் தொடர்புடைய நண்பர்கள் அனைவருமே பீதியில் ஆழ்ந்துள்ளனர் . ஜோத்பூரைச் சேர்ந்தவர் கிரி

மறைந்து விளையாடும் விளையாட்டில் உயிர் தப்ப ஓடும் மணப்பெண்! - ரெடி ஆர் நாட் 2019

படம்
  ரெடி ஆர் நாட்  Directors :  Matt Bettinelli-Olpin ,  Tyler Gillett Screenplay :  Guy Busick , Ryan Murphy படம் வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் கொண்ட படம். பெரிய மாளிகை போன்ற வீடு. அங்கு ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு ஆகிறது. அந்த வீட்டைச் சேர்ந்த இளைஞனை மணம் செய்துகொள்ளும் பெண், ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்து வந்தவள். அவளின் காதலன் பெரும் பணக்காரன். அந்த குடும்பத்தின் வீட்டுக்கு வெளியே உள்ள இடத்தில் மணவிழா நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு பிறகு அவளை குடும்பத்தினர் அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து விளையாட்டு ஒன்றை விளையாடுகின்றனர். கொடூரமான அந்த விளையாட்டு பற்றி தெரியாமல் மணப்பெண் அதில் சிக்கி எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதை.  சாத்தானை வழிபடும் குடும்பம். மணவிழாவை எப்படி விளையாட்டு போல மாற்றி மனிதர்களை வேட்டையாடி கொல்கிறார்கள் என்பதை ரத்தம் நமது முகத்தில் தெறிக்கும்படி எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் வேகத்தில் நமது அறைக்கே வேறு யாரும் வந்தால் கூட அருகிலிருக்கும் பொருளை எடுத்து பிளந்துவிடலாமா என யோசிக்க வைக்கும் அளவு வன்முறையை படத்தின் காட்சிகளில் கொண்டு வந்துவி

மக்களுக்காக போராடி அன்பை வென்ற மேற்குவங்க பெண்மணி! - மம்தா பானர்ஜி

படம்
  தீதி மம்தா பானர்ஜி சுடாபா பால் பெங்குவின் வெளியீடு மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி முதல்வரான முதல் பெண் முதல்வர் மம்தா பானர்ஜி. இவரது வாழ்க்கை சிறுவயதில் எப்படி இருந்தது என்பதை எளிமையான முறையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த நூல் மம்தாவின் புகழ்பாடும் வகையைப் பின்பற்றவில்லை. மம்தா எழுதிய நூல், வேறு நூல்கள் பல்வேறு நூல்களைப் படித்து பல்வேறு தகவல்களை கோர்வையாக கொடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் எப்படி அதிலிருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி காங்கிரஸ், இடதுசாரி கட்சியை எதிர்க்கட்சி இருக்கைக்கு தள்ளினார் என்பதோடு, மம்தா முதல்வர் இருக்கையில் இருந்தபோது செய்த தவறுகளையும் கூறியுள்ளார்.  மம்தா பானர்ஜியை மக்களுக்கான தலைவர் என எளிதாக கூறலாம். அனைத்து போராட்டங்களிலும் மக்களின் மீது காவலர்களின் தடி படும் முன்னர் இவரது உடலில் பட்டுவிடும். அந்தளவு மக்களுக்காக ஏராளமான போராட்டங்களை செய்துள்ளார். இதன் காரணமாக தலையில் அடிபட்டு அதன் விளைவாக  மம்தாவின் குணநலன்களே மாறிவிட்டன என்றும் கூறப்படுகிறது.  மம்தா பா