புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள அறிவியல் கொள்கை! - அறிவியலில் இந்தியா முன்னேறுமா?

 




Ananda Vikatan - 11 November 2020 - UNLOCK அறிவியல் 2.O - புதிய தொடர் 1 : |  UNLOCK Science 2.O
அறிவியல் துறையில் முன்னேறும் இந்தியா




அறிவியல் துறையில் முன்னேறும் இந்தியா!



கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பிற்கான கொள்கையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. 


இதற்கு முன்னர் வெளியாகிய அறிவியல் கொள்கைகளை விட ஐந்தாவதாக அரசு உருவாக்கியுள்ள கொள்கை, அடுத்த பத்தாண்டுகளுக்கானது. இதில் முழுநேர ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது, ஆராய்ச்சிகளை நாடு முழுக்க பரவலாக்குவது, சரியான ஆதாரங்களைத் திரட்டுவது, குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்பாடுகளை ஆய்வு செய்வது, தொழில்நுட்பங்களை ஏற்பது, மேம்படுத்துவது, மக்களின் கருத்துகளைப் பெறுவது, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 


மனிதவளத்தை முதலீடாக கொண்டுள்ள இந்தியாவில் புதிய அறிவியல் கொள்கை மூலம் ஆராய்ச்சிகள் அதிகரிக்கும். வரும் பத்தாண்டுகளுக்குள் முதல் மூன்று அறிவியல் நாடுகளில் இந்திய ஒன்றாக இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.  ஆராய்ச்சி தொடர்பான தகவல்கள் சாதாரண மக்களும், தனியார் நிறுவனங்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெறும்படி அறிவியல் சூழ்நிலை மாறும் என புதிய அறிவியல் கொள்கை கூறியுள்ளது. ஒரே நாடு ஒரே சந்தா எனும் திட்டத்தின் அடிப்படையில் பத்திரிகை, வார, மாத இதழ்கள் வாங்கப்படவிருக்கின்றன.


 தற்போது அரசு தோராயமாக பத்திரிகைகளை வாங்குவதற்கு ஆண்டிற்கு 1500 கோடி ரூபாயை செலவழிக்கிறது. ஆனால் 3.5 லட்சம் ஆராய்ச்சியாளர்களில் ஒரு பங்கினர் மட்டுமே பத்திரிகைகளை பெற்று படிக்கும் சூழல் உள்ளது. ஆராய்ச்சி நிலையங்கள் முக்கியமான ஆய்விதழ்களை வாங்குவதற்கு நிறைய செலவழித்தாலும் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை. கிராமங்களிலுள்ள பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பத்திரிகைகள் கிடைப்பதில்லை. இதற்காகவே அரசு பத்திரிகைகளை புதிய முறையில் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பத்திரிகைகளை படிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 


கணிதம், இயற்கை அறிவியல், வானியலில் பெண்களின் பங்கேற்பு இந்தியாவில் குறைவாக உள்ளது. இளங்கலை (53%), முதுகலை (55%), முனைவர் (44%) என படிப்பில் பெண்களின் பங்களிப்பு உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஆராய்ச்சித் துறையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சிக் குழுக்களில் பெண்களின் பங்கேற்பு 30 சதவீதம் இருக்கவேண்டுமென புதிய அறிவியல் கொள்கை வலியுறுத்தியுள்ளது. 


பிற வளர்ந்த நாடுகளை விட அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கும் நிதியில் இந்தியா 1.5 முதல் 3சதவீதம் வரை பின்தங்கியுள்ளது. ஆராய்ச்சியின் நிதி தேவைக்காக அறிவியல் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு நிதி ஆணையம், மேம்பாட்டு வங்கி ஆகியவை அமைக்கப்படும் என்றும் புதிய கொள்கையில் கூறப்பட்டுள்ளது. இவை தேசிய, மாநில அளவில் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அறிவியல் துறையில் இந்தியா வலுவான இடத்தைப் பெறும் என்பது உறுதி. 


தகவல்

IE


New Investment in science

Dr. akhilesh Gupta

indian express

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்