விவசாயிகளுக்கு வழங்கும் ஊக்கச்சலுகைகளை பரந்த அளவில் பார்க்கவேண்டும்! - என்.கே.சிங், நிதி கமிஷன்
நிதி கமிஷன் தலைவர்
என்.கே. சிங்
உங்களது அறிக்கை வெளிவந்துள்ளது. மாநிலங்களிடமிருந்து என்ன புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?
இது டெஸ்ட் மேட்ச் போல. ஒருநாள் போட்டியைப் போல உடனடியாக எந்த பதிலும் கிடைத்துவிடாது. நாங்கள் கொடுத்துள்ள அறிக்கை ஐந்து ஆண்டுகளுக்கானது. நாங்கள் மாநில, மத்திய அரசுளின் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. சில மாநில முதல்வர்கள் எனக்கு போன் செய்து தங்களது கோரிக்கையை முன்வைத்து அதனை நிறைவேற்றியதற்கு நன்றி சொல்லியுள்ளார்கள். நாங்கள் தேவை, திறன் ஆகிய அம்சங்களை முன்வைத்து சிறப்பாக செயல்பட முயன்று வருகிறோம். இதில் மக்கள்தொகை, தனிநபர் வருமானம், பணக்கொள்கை ஆகியவை முக்கியமானவை. அரசிடமும், மக்களிடமும் நம்பிக்கை பெற்றால்தான் நிதி கமிஷன் இன்னும் நீடித்து செயல்பட்டுவருகிறது.
அரசு மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளை எப்படி நிறைவேற்றுகிறீர்கள்?
மத்திய அரசு அனைத்து விஷயங்களையும் தேசிய அளவிலான பார்வையில் பார்க்கும். அதற்கான நிதி ஒதுக்குதலையும் அப்படியே பார்க்கும். மாநில அரசுகள் திட்டங்களில் தங்களுடைய பங்கு அதிகரீக்கவேண்டும் என நினைக்கின்றன. நாங்கள் இந்த கோரிக்கைகளை பரீசிலித்து முடிவுகளை அறிவிக்கிறோம். தொப்பியிலிருந்து முயல்களை எடுப்பது போல இங்கு எந்த செயல்பாடுகளும் நடைபெறுவதில்லை.
பட்ஜெட்டில் செஸ் வரி அறிவிக்கப்படுகிறது. இதனால் மாநிலங்களின் வரி வருமானம் பறிபோகிறது என்று புகார்கள் கூறப்படுகிறதே?
ஐந்து ஆண்டுகளுக்கான நிதி திட்டமிடலில் 134 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. இதில் மாநிலங்களின் பங்கு என்பது 41 சதவீதம் வருகிறது. அதாவது 40 லட்சம் கோடி. இதில் பல்வேறு மானியங்களும் உள்ளன. முன்னாள் நிதிகமிஷன் தலைவர் இப்படி பெறப்படும் 41 சதவீத நிதி முறையே சரிதான் என்று கூறியுள்ளார்.
நீங்கள் மாதிரி நிலப்பயன்பாடு, நீர் வசதி, ஏற்றுமதி ஆகியவற்றுக்கு உதவும்படி மத்திய அரசு பல்வேறு ஊக்கத்தொகைகளை அளிக்குமாறு கூறியிருக்கிறீர்கள். ஆனால் இப்போது பல்வேறு விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறதே?
நான் கூறியது 2021ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகள்தான். நீண்டகால நோக்கில் விவசாயத்துறையில் வருமானத்தை பெறவும், உற்பத்தியை ஊக்குவிக்கவும் நான் கூறிய முறை உதவலாம். நான் கூறிய விஷயங்களை தாராளமான முறையில் பார்க்கவேண்டும். பல்வேறு பயிர்களை பயிரிடுவது, நீரை சிக்கனமாக பயன்படுத்துவது ஆகியவற்றை இந்த முறையில்தான் நான் கூறினேன்.
டைம்ஸ் ஆப் இந்தியா
சித்தார்த்தா
கருத்துகள்
கருத்துரையிடுக