தனியார் வழங்கும் கல்வி உதவுமா?
தனியார் வழங்கும் கல்வி உதவுமா?
கல்வித்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது.
அண்மையில் இந்திய நிதியமைச்சர் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இதில் அந்நிய முதலீடு, குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களாக கூறினார். ஆனால் கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், தனியார் நிறுவனங்கள் கல்வித்துறையில் முதலீடு செய்ய மேலும் விதிகளை மாற்றவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.
அமெரிக்காவிலுள்ள ஹார்ட்வர்டு பல்கலைக்கழகம் 4 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளை இந்தியக் கல்வித்துறையில் செய்ய முன்வந்திருக்கிறது. ஆனால் கல்வி நிறுவனங்கள் நிதியை ஏற்கவோ, கையாளவோ தற்போதைய அரசு விதிகள் அனுமதிக்கவில்லை. இதைத்தான் மாற்றவேண்டும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இத்துறையில் ஏற்படவிருக்கும் வளர்ச்சிதான்.
”இன்றுள்ள வளர்ச்சியோடு ஒப்பிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறை 80 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக மாறியிருக்கும்” என்றார் கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நாராயணன் ராமசாமி.
இந்தியாவில் ஆராய்ச்சிகள் நடைபெற அதிகளவு நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்ய முன்வரும்போது இத்துறையில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் அரசின் கட்டுப்பாட்டில் அதன் சொத்துக்களாக உள்ளன. அமெரிக்காவில் தனியார் கல்வி நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால் இந்தியாவில் இவை இரண்டும் ஒன்றிணைந்தது போன்ற செயல்பாடுகளைப் பார்க்கலாம்.
வெளிநாடு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை பங்களிப்பாளர்களாக கருதுவது கல்வித்துறையை மேம்படுத்தும். வர்த்தக நோக்கம் கொண்ட கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் அரசின் கண்காணிப்பு அவற்றை விதிமுறைகளை மீறாமல் இயங்க வைக்கும்.
பட்டப்படிப்புகளை இணையம் வழியாக படிக்கும் அறிவிப்பை அரசு வழங்கியுள்ளதை பல்வேறு கல்வி அமைப்புகளும் வரவேற்றுள்ளன. இது, இத்துறையில் கல்விச்சேவையை வழங்கிவரும் இணையக் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி பெற உதவும். அரசின் நோக்கம், இணையம் மூலம் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்பதே. அரசின் முன்னோடி அறிவிப்புகள் மூலம் கல்வித்துறை வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.
தகவல்:BS
கருத்துகள்
கருத்துரையிடுக