சுயமுன்னேற்றத்திற்கு உதவும் செயலிகள்!




Entrepreneur, Startup, Start-Up, Man, Planning



 சுயமுன்னேற்றத்திற்கு உதவும்  செயலிகள்

 நவீன கால இளைஞர்கள் தங்களின் சுயமுன்னேற்றம் மற்றும் திறன் வளர்ப்புக்கு பல்வேறு ஸ்மார்ட்போன் செயலிகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 


நவீன காலத்தில் சுயமுன்னேற்றம் மற்றும் திறன் வளர்க்கும் பயிற்சிகளுக்கு நூல்களை மட்டும் யாரும் நம்பியிருக்கவில்லை. பல்வேறு ஸ்மார்ட் போன் ஆப்ஸ்கள் மற்றும் கைகளில் அணிந்துகொள்ளும் சாதனங்கள் என புதுமையாக உள்ளன. 


மொழி கற்றுக்கொள்ள, தினசரி குறிப்பிட்ட தூரம் நடந்துசெல்வதை நினைவுபடுத்த, சந்திப்புகளை ஒழுங்கமைக்க, வாசிக்கும் நூல்களை கணக்கிட என அனைத்திற்கும் தொழில்நுட்பம் கைவசம் தீர்வுகளை வைத்துள்ளது. 


பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மானஸ் சலோய், ஆப்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் பொருட்கள் மூலமாக தன் வாழ்க்கையை வாழ்கிறார். நூல்களைப் படிக்கவும், எழுதவும், தன் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடவும் ஹேபிட் ட்ராக்கர் (Habit tracker) என்ற ஆப்பைப் பயன்படுத்துகிறார். ஹெட்ஸ்பேஸ் (Headspace) ஆப்பை தியானம் செய்யவும், மி ஸ்மார்ட் பேண்டை (Mi Smart band) உடற்பயிற்சிக்காகவும் மானஸ் பயன்படுத்துகிறார். 


ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயக்கமுறைகளில் பயன்படுத்தும்படி 250க்கும் மேற்பட்ட திறனை ஊக்குவிக்கும் ஆப்ஸ்கள்   கிடைக்கின்றன. இந்தியர்கள் இசைச்சேவையை வழங்கும் நிறுவனங்களில் 50 சதவீதம் சுயமுன்னேற்றம் சார்ந்த ஒலிக்கோப்புகளை கேட்டுள்ளனர் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. 


உலகில் ஆரோக்கியம் சார்ந்த டிஜிட்டல் கண்காணிப்பு பொருட்களின் சந்தை 270 கோடி ரூபாய் சந்தையாக  உருவாகியுள்ளது. இந்த ஆப்களின் பயன்பாடு, நம்மைப் பற்றிய நேரடியான உண்மைகளைப் பேசுகின்றன. அதேசமயம் நினைத்த இலக்கை அடையாதபோது இவை மன அழுத்தத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதேசமயம், நமது உடல் பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. 

தகவல்:ET





கருத்துகள்