எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது! - ரோன் மால்கா, இஸ்ரேலிய தூதர், இந்தியா
ரோன் மால்கா
இஸ்ரேல் தூதர், இந்தியா
இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது. இதனை எப்படி அறிந்தீர்கள்?
எங்களது அமைப்பு மிகவும் வேகமாக தகவல்களை அறியக்கூடியது. அதனால் குண்டுவெடிப்பு நடந்தவுடனே அதிகாரிகளிடமிருந்து எனக்கு தகவல் கிடைத்துவிட்டது. இப்படி நடந்திருப்பதால் நாங்கள் விழிப்புடனும், அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு தயாராகவே இருக்கிறோம். கடந்த சில நாட்களாகவே நாங்கள் பல்வேறு மிரட்டல்களை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறோம். இந்த வெடிகுண்டு மூலம் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் யூகித்துவிட்டோம். எனவே தேவையான முன்தயாரிப்பு நடவடிக்கைகளை எடுத்து விட்டோம்
உங்களுக்கு வந்த மிரட்டல்களை பற்றி சொன்னீர்கள். அதனை விரிவாக சொல்ல முடியுமா?
இவையெல்லாம் இஸ்ரேல் தொடர்புடையதுதான். நாங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் அரசு , லெபனானின் ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளிடமிருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. நாங்கள் எங்கள் எதிரிகளை குறை்த்து மதிப்பிடவில்லை. நாங்கள் இவற்றை தீவிரமாகவே அணுகுவோம்.
எங்களது அதிகாரிகள் உலகம் முழுவதும் உள்ளனர் எங்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தலையும் அதன் விளைவுகளையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
தூதரகம் இருக்கும் பகுதி அதிக பாதுகாப்பு உள்ள இடம்தான். அங்கு எப்படி தாக்குதல் நடைபெற்றிருக்க முடியும்?
நான் இதனை இந்தியா சார்ந்த அதிகாரிகளின் பிழையாக கருதவில்லை. தீவிரவாதிகள் முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு சரியான இலக்கு கிடைக்கவில்லை. நான்ஐ இதில் எந்த பாதுகாப்பு ஓட்டைகளையும் பார்க்கவில்லை. அவர்கள் தங்களது சதி செயலையும் செய்ய முடியவில்லை. மேலும் பிறருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் இந்த விவகாரம் பற்றி இப்போது விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். அங்கு நடந்த விஷயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு, இந்திய பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இதுபற்றி இணைந்து விசாரித்து வருகின்றன. வெடிகுண்டுவின் மிச்ச மீதி பகுதிகளை இணைத்து அதனை ஆராய்ந்து வருகிறோம்.
வெடிகுண்டு வெடித்த இடத்தில் கிடைத்த குறிப்பில் உங்கள் பெயரும், ஈரானில் கொல்லப்பட்ட இரண்டு பேரின் பெயர்களும் இருந்ததாக கூறப்படுகிறதே?
நான் முன்னமே சொன்னேனே? விசாரணை பற்றிய தகவல்களை இப்போது நான் கூறமுடியாது. அப்படி கூறுவது விசாரணையின் போக்கை குலைக்கும். நான் இங்கு கூறுவது ஒன்றே ஒன்றுதான். எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது. எங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவு சிறப்பாகவே உள்ளது. இப்போதுதான் எங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் வெளியுறவு தொடங்கி 25 ஆண்டு நிறைவுபெற்றதை கொண்டாடியுள்ளோம். நாங்கள் தொடர்ச்சியாக இந்த உறவை வளர்த்துச் செல்லவே விரும்புகிறோம்.
நீங்கள் பாதுகாப்பாக யார் மீதும் கைவிரல்களைக் காட்டாமல் பேசிவருகிறீர்கள். குறிப்பாக ஏதாவது அமைப்பு பற்றி குறிப்பிட நினைக்கிறீர்களா?
நமது முன்னே அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் இப்போது விசாரணை நடந்து வருகிறது. இப்போது உடனே யாரையாவது கைகாட்டுவதை விட விசாரணை முடிவில் நமக்கு விஷயம் தெளிவாகிவிடும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுபஜித் ராய்
கருத்துகள்
கருத்துரையிடுக