குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!

 



Disease, Medicine, Health, Medication, Pain, Tablet



குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!


 குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு செயல்முறையில், உணவு ஒவ்வாமைக்கான விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. 


நவீன கால குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளான வேர்க்கடலை, முட்டை , பால் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒவ்வாமைக்கு முக்கிய காரணம் உணவுதான். ஆயினும், குழந்தைகளின் பள்ளி, அவர்களின் வீடு, நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் கூட ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 


உணவு மூலமாக ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு பொதுவானது. ஆனால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ஆபத்து. கடந்த ஆண்டு, உணவு விடுதியில் பாதுகாப்பான உணவு என்று நம்பிச் சாப்பிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த இருவர் ஒவ்வாமை பாதிப்பில் இறந்தனர். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி பெறாத நிலையில் என்னாகும்? இங்கிலாந்து அரசு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு திட உணவுகளை குறிப்பிட்ட வயது வந்தபிறகுதான் சாப்பிட வழங்கவேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 


தற்போது இங்கிலாந்தில் ஒவ்வாமை பாதிப்பு 7 சதவீதமாக உள்ளது. அங்கு கடந்த இருபது ஆண்டுகளில் ஆறுமடங்கு அதிகமாக ஒவ்வாமை நோயாளிகள் அதிகரித்துள்ளனர். வளரும் நாடுகளில் கூட குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்கும் காலத்தை குறைக்க திட உணவுகளை அவர்களுக்கு பழக்குகின்றனர். இது வளர்ச்சி பெறாத அவர்களின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கிறது. இதன் விளைவாக காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.


 இதைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் 2001ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், பிறந்த குழந்தைக்கு அதன் தாய் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பாலை உணவாக அளிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஒவ்வாமை பற்றி 2015ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். பிறந்து பதினொரு மாதங்கள் ஆன குழந்தைகள், ஐந்து வயதான குழந்தைகள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இவர்களுக்கு வேர்க்கடலை உணவுகளைக் கொடுத்து சோதித்ததில் பதினொரு மாத குழந்தைகளுக்கு 3 சதவீதமும், ஐந்து வயதான குழந்தைகளுக்கு 17 சதவீதமும் ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக வேர்க்கடலை, பாதாம், நல்லெண்ணெய் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

தகவல்:NS 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்