கடலில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான தங்கப் புதையல்கள்!

 


Woman, Beauty, Girl, Gold, Face, Person, Portrait





கடலில் கொட்டிக்கிடக்கும் தங்கம்!

ஆங்கில சாகச பயண திரைப்படங்களில் பெரும் சுவாரசியம் தருவது  புதையல் தேடும் பகுதிகள்தான்.  நிலத்தில் உள்ள தங்கப் பொக்கிஷங்களை பெருமளவு கண்டுபிடித்துவிட்டோம் ;சரி, ஆனால் கடலில் கிடந்தால் கிடக்கட்டும் என  விட்டுவிட முடியுமா? தோராயமாக கடலில் 45 ஆயிரம் டன்கள்(1 டன் - 907 கி.கி) தங்கம் கடலில் ஆதரவின்றி கிடக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

1872 ஆம் ஆண்டு வேதியியலாளர்  எட்வர்ட் சோன்ஸ்டட்(Edward 

Sonstadt)  கடலில் கொட்டிக்கிடக்கும் தங்கப் புதையல்களைப் பற்றி நம்பகமான தகவல்களை உலகிற்கு சொன்னார். உடனே  ஆய்வாளர்கள், கடல்பயணிகள் ஆகியோருக்கு பொக்கிஷப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடல்நீரிலுள்ள தங்கத்தை கணக்கிட பல்வேறு செயல்முறைகள் உண்டு. 

கடல் நீரில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் உண்டு. அவற்றிலிருந்து தங்கத்தை  தனியே பிரிக்க அதனை ஆவியாக்க வேண்டும். இரண்டாம் வழிமுறை, அதிலுள்ள சோடியம்,  குளோரின் உப்புகளை தனியாக பிரித்தெடுக்கலாம். மூன்றாவது வழிமுறை, தங்கத்தை கரைத்து நீரிலிருந்து தனியாக எடுப்பது. இதற்கு பல்வேறு இயற்கையான கரைப்பான்களை பயன்படுத்தலாம். நான்காவது வழிமுறை, நீரிலிருந்து தங்கத்தின் மூலக்கூறுகளை உறிஞ்சக்கூடிய கார்பன் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். நீரிலிருந்து தங்கத்தை எடுத்தவுடன் அதனை தூய்மைப்படுத்தி பிரிப்பது  முக்கியம். 

திரவத்திலுள்ள தங்கத்தின் அணுக்கள் குறிப்பிட்ட அலைநீளத்தில் ஆற்றலை சேமித்துவைக்கும் இயல்புடையவை. அவற்றை ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி மூலம் கண்டறியலாம். ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் அயனிகளின் அணு நிறையை அறிந்து தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தலாம். 

 கடல்நீரில் மிக குறைவான அளவில் தங்கம் உள்ளது. மேலும் கடல்நீரிலுள்ள தங்கத்தை பிரித்தெடுத்தாலும் அதற்கான செலவுகள் எகிறுவதால்  தங்கத்தை பிரித்தெடுப்பதில் லாபம் கிடைப்பது கடினம்.   

 

  


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்