பேஸ்புக் வணிக பயன்களுக்காக, மக்களின் தகவல்களை பாதுகாக்க முயற்சிக்காது! - ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ
ஜோஹோ நிறுவனர், இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு பத்ம ஸ்ரீயை வென்றிருக்கிறார். தென்காசியில் 2019ஆம் ஆண்டே கிளம்பி வந்து கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் புரட்சியாளர் இவர். அவரிடம் பேசினோம்.
பத்ம ஸ்ரீ விருது பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது?
இதனை விளக்குவது கடினம். கலவையான உணர்வுகளால் பீடிக்கப்பட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. இதன் காரணமாக விருது என்பது எனக்கு பெரிய விஷயமாக பட்டது. பொதுவாக இந்த விருதுகளை சமூகத்திற்கு சுயநலமின்றி உழைப்பவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் . நான் வணிகம் செய்யும் தொழிலதிபர். எனக்கு கொடுக்கப்பட்டதை, இந்தியாவிற்கு வேறுவழிகளில் திரும்பக் கொடுக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.
வாட்ஸ் அப்பின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாங்கள் இப்போது அரட்டை என்ற மென்பொருளை தயாரித்து வருகிறோம். அது இன்னும் சோதனை முறையில்தான் உள்ளது. இந்தியாவிற்கென செய்திகளை அனுப்புவதற்கு தனி மென்பொருள் தேவை என நினைத்து மென்பொருளை உருவாக்கினோம். இதுபோலவே இன்னும் பல்வேறு பொருட்களை உருவாக்கவேண்டும் என நினைக்கிறேன். பேஸ்புக் தான் கூறியபடி விதிமுறைப்படி நடக்காது என நம்புகிறேன். காரணம், பயனர்களின் தகவல்களை சேகரித்துதான் அது நிறுவனங்களை நடத்தி வருகிறது. எனவே, வாட்ஸ்அப் விவகாரத்திலும் அந்நிறுவனம் அப்படித்தான் நடந்துகொள்ளும்.
அரட்டை பிற செய்திகளை அனுப்பும் சேவையை விட எந்த வித த்தில் வேறுபட்டது?
நாங்கள் பயனர்களின் அந்தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதில் விளம்பரங்கள் கிடையாது என்பதால், பயனர்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். அலுவலகங்கள் தகவல்தொடர்பு கொள்ளும் ஜோஹோ கிளிக் போன்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுவது முக்கிய அம்சம். இன்னும் சில மாதங்களில் அரட்டை ஆப் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
கடந்த ஆண்டு உங்களுக்கு வணிகம் எப்படி இருந்தது?
மார்ச் முதல் ஏப்ரல் மாதங்கள் வரை வணிகத்தில் சரிவு இருந்தது. விரைவில் நாங்கள் அதிலிருந்து மீண்டுவிட்டோம். உலகமெங்கும் தொழில்வளர்ச்சிக்காக அதிகளவு பணம் செலவிடப்பட்டு வருகிறது. அமெரிக்காவை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். அதேசமயம், இப்போதைய நிலையில் எதுவும் மாறலாம் என்பதால் ஊழியர்களை நாங்கள் எச்சரித்துள்ளோம். எந்த சூழ்நிலையும் மாறிவர வாய்ப்புள்ளது.
உங்களுடைய பள்ளி எப்படி நடைபெறுகிறது?
தென்காசியில் உள்ள கிராமத்து குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர். அவர்களுக்காக எனக்கு கிடைக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஏதாவது சொல்லித்தர நினைத்துதான் பள்ளி செட்டப்பை உருவாக்கினோம். ஆனால் நாங்கள் அவர்களுக்கு வீட்டுப்பாடம் எதையும் தரவில்லை. மூன்று குழந்தைகள் வந்து பத்து குழந்தைகளாகி இன்று 120 மாணவர்கள் வந்து விட்டனர். இன்று அதனை பள்ளிக்கான தனித்தன்மை கொண்ட ஆசிரியர்களோடு நடத்தி வருகிறோம். இதில் எனது நண்பர்கள் உதவினர். தற்போது பள்ளியை அப்படியே தொடர்ந்து நடத்துமாறு குழந்தைகள் கேட்கின்றனர். எங்களுக்குத்தான் குழந்தைகளிடமிருந்து கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது
போர்ப்ஸ்
நாந்திகா திரிபாதி
கருத்துகள்
கருத்துரையிடுக