பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வல்லுறவு குற்றங்கள்!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2020 ஆம் ஆண்டில் குறைந்துள்ளதாக அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற வல்லுறவு, குழந்தைகள் மீதான தாக்குதல், பெண்கள் மீதான வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளன. ஆனாலும் கூட தலைநகரில் குற்றங்கள் பெரியளவு மாற்றங்களை சந்திக்கவில்லை.
1,699 வல்லுறவுகள், 2,199 பாலியல் தொடர்பான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 65 என நடைபெற்றுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019இல் 109 வழக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி காவல்துறை ஒட்டுமொத்தமாக பெண்கள் மீதான குற்றவழக்குகள் குறைந்துள்ளன என பெருமையாக அறிவித்துவிட்டது. தினசரி நடைபெறும் குற்றச்சம்பவங்களில் டெல்லியே முன்னாடி நிற்கிறது. ஐந்து மணிநேரங்களுக்கு ஒரு வல்லுறவு, 19 மணிநேரங்களுக்கு ஒரு கொலை, 15 நிமிடங்களுக்கு ஒரு கார் திருட்டு என நடைபெற்றுவருவது அதிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள நகரில் என்பது நிச்சயம் பெருமைக்குரியது அல்ல. குற்றங்களில் கார், ஆட்டோ திருட்டு சேர்ந்திருப்பதோடு, செயின் பறிப்பும் ஒவ்வொரு மணிநேரத்திலும் புதிதாக இணைந்துள்ளது.
பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் குறைந்திருப்பதாக அரசு கூறுவது எந்த அடிப்படையில்? அவர்கள் காவல் நிலையத்தில் புகார்களை கொடுத்தார்களா, இல்லையா என்பதைப் பொறுத்துதான் இது அமைகிறது. அரசு பல்வேறு ஆப்களை கொடுத்து குற்றங்களை அரசிடம் சொல்லுமாறு ஏற்பாடுகளைச் செய்தாலும், இன்னும் பெண்களுக்கு சரியான ஏற்புடைய நகரமாக டெல்லி இன்னும் மாறவில்லை என்பதே உண்மை.
டெல்லி நகரில் பெண்கள் மீது நடத்தப்படும் வல்லுறவுகளில் பெரும்பாலானவை திருமணத்திற்காக மறுப்பு, ஒன்றாக சேர்ந்து வாழும் லிவ் இன் பாணிகளால் ஏற்படுகிறது என காவல்துறை பதில் சொல்லுகிறது.
தகவல்
இந்துஸ்தான் டைம்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக