நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி! - இயற்பியல் பிட்ஸ்

 




Bill Nye Fire GIF by NETFLIX




இயற்பியல்  பிட்ஸ்

இயற்பியலில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ அதுகுறித்த ஆச்சரியங்களும் வெளிப்படுகின்றன. அதில் சிலவற்றைப் பார்ப்போம். 

நேர்ப்பாதையில் ஒளிக்கதிர்கள்!

டார்ச் லைட்டிலிருந்து வரும் ஒளி நேராக பாய்ந்து பொருள் மீது படிய, நமக்கு அப்பொருள் கண்ணுக்கு தெரிகிறது. இதன் பொருள், ஒளிக்கற்றைகள் நேராகத்தான் பயணிக்கும் என்பதல்ல. அவை பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். 2010 ஆம் ஆண்டு கணினி முறையில் உருவான ஹாலோகிராம், பல்வேறு வடிவங்களில் வளைந்து நெளிந்து உருவங்களைக் காட்டியது. 

நம்ப முடியாத ஹைட்ரஜன் சக்தி!

ஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கமுடியுமா என ஆராய்ச்சி செய்து வருகிறது அறிவியல் உலகம். இதற்கு முக்கியக் காரணம், சூரியன் ஹைட்ரஜன் ஹீலியத்தை எரித்துதள்ளும் வேகம்தான். ஹைட்ரஜனை 620 மெட்ரிக் டன்களும், ஹீலியத்தை 616 மெட்ரிக் டன்களும் நொடிக்கு எரித்துத்தான் சூரியன் பளீரென ஒளிருகிறது.

மனிதர்களின் கதிர்வீச்சு!

நாம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமல்ல நமது உடலே கதிர்வீச்சுகளை வெளியிடும் தன்மை கொண்டதுதான். மனிதர்களின் உடல்  ஆயிரம் வாட் அளவுக்கு வெப்பத்தை வெளியிடுகிறது. 900 வாட் அளவுக்கு வெப்பத்தையும் ஈர்க்கிறது. நம்முடைய உடலின் வெப்பத்தை ஆற்றலாக்கினால் நூறு வாட்ஸ் பல்பை எரிய வைக்கலாம். 

புவிஈர்ப்பு விசைக்கு எதிராக நீர்!

நாம் பூமியில் நிற்பதற்கு காரணமே, பூமி நம்மீது செலுத்தும் ஈர்ப்புவிசைதான். இதன் விளைவாகத்தான், பாட்டிலிலுள்ள நீரை நம்மால் குடிக்கமுடிகிறது. உண்டியலில் காசு போட்டால், அதில் காசு சரியாக விழுகிறது. ஆனால் நீர் இதற்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது. குறுகிய குழாய்களில் நீரை மேல்நோக்கி அனுப்ப முடியும். இதனை கேப்பில்லரி ஆக்சன் (capillary action) என்கின்றனர். எ.கா. ஸ்ட்ரா மூலம் குளிர்பானம் அருந்துவது.

ச.அன்பரசு


 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்