சீனப்பெயர் உள்ள பழங்களின் பெயர்களைச் சொல்லுங்கள்! - விஜய் ரூபானி, குஜராத் முதல்வர்
நேர்காணல்
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி
2016ஆம் ஆண்டு குஜராத் முதல்வரானபோது, அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கே விஜய் ரூபானி தொடர்ச்சியாக இருக்கையில் இருப்பாரா என்று தெரிவில்லை. ஆனால் அமித் ஷாவின் அருளாசியைப் பெற்றவரை இதுவரை யாரும் அசைக்க முடியவில்லை. கோவிட்- 19 பிரச்னையை படுமோசமாக கையாண்ட முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளவரிடம் பேசினோம்
அடுத்துவரவிருக்கும் தேர்தலில் ஜெயிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரண்டையும் சமாளிக்க திட்டங்களுடன் உள்ளோம். காங்கிரஸ் கட்சி மாநில, மாவட்ட அளவில் என எதிலும் வெல்லுவதற்கான திறனின்றி உள்ளது. குஜராத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடனை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இதற்கு வட்டி கிடையாது. 1.6 லட்சம் பேருக்கு நாங்கள் வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். மோடியில் ராமர்கோவில் கட்டும் திட்டம், இன்னும் பல்வேறு திட்டங்கள் காரணமாக மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். எங்கள் மாநிலத்தில் வேலையின்மை அளவு 3.4 சதவீதமாக உள்ளது.
குஜராத்தில் உங்கள் கட்சி 25 ஆண்டுகளாக ஆண்டு வருகிறது. எதிர்ப்புகள் வரவில்லையா?
இல்லவே இல்லை. நாங்கள் மக்களுக்கான வளர்ச்சியை கொடுக்கிறோம். அகமதாபாத் மெட்ரோ, சாலை வசதிகள், பாலங்கள் என பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். இந்தவகையில் 125 பாலங்களை கட்டியுள்ளோம். இதெல்லாம் எங்கள் சாதனை எனவே மக்கள் வளர்ச்சிக்கான அரசு என எங்களுக்கு வாக்களிக்கிறார்கள்.
தேர்தலில் என்ன விஷயங்களை முன்வைத்து பேசுவீர்கள்?
வளர்ச்சிதான். எங்கள் பாஜக கட்சியை தவிர வேறு கட்சிகள் எதுவும் வளர்ச்சியை மக்களுக்கு வழங்கமுடியாது என்பதைத்தான் நாங்கள் பேசப்போகிறோம்.
பல்வேறு சிறுகட்சிகள் இம்முறை குஜராத்தில் போட்டியிடவிருக்கின்றனவே?
எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் குஜராத்தில் இரண்டு கட்சிகள்தான் உள்ளன. பாஜக ஆட்சியில் இருக்கும். காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும். நீங்கள் சொல்லும் பிற சிறு கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கியைத்தான் பாதிக்கும். எங்களுக்கு உறுதியான வாக்குவங்கி உள்ளது.
டிராகன் பழத்திற்கு கமலம் என பெயர் சூட்டினீர்கள். அதுபோலவே பிற பழங்களுக்கு பெயர்சூட்டும் எண்ணம் உள்ளதா?
ஊடகங்கள் எதற்கு இந்த பெயர் வைத்து சம்பவத்தை எடுத்து பேசுகின்றன என்று எனக்கு புரியவில்லை. அந்த பழம் சீனாவின் கலாசாரத்தைச் சேர்ந்தது. எனவே அதன் பெயரை மாற்றி நமது கலாசாரத்திற்கு ஏற்ப கமலம் என பெயர்வைத்தேன். அதன் தோற்றம் தாமரை போலவே இருந்தது முக்கியமான காரணம். வேறு பழங்களுக்கு சீனப்பெயர்கள் இருந்தால் சொல்லுங்கள். அதனையும் மாற்றிவிடலாம்..
வீக்
ந ந்தினி ஓசா
கருத்துகள்
கருத்துரையிடுக