நூறு ஆண்டைக் கடந்துவிட்ட சார்பியல் விதி!

 





Einstein, Face, History, Man, Mimic, People, Physicist


சார்பியல் விதி!

1919 ஆம் ஆண்டு பிரபல இயற்பியலாளர் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சார்பியல் விதிக்கு  நூறு ஆண்டைத் தாண்டிவிட்டது.  1919 ஆம் மே 29 அன்று ஏற்பட்ட சூரிய கிரகணம், ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரியை அறிவியலாளர்  மட்டுமல்ல மக்களுக்கும் புரிய வைத்தது.

சிறப்பு சார்பியல் விதி, பொது சார்பியல் விதி என இருவிதிகள் உண்டு. இங்கு கூறப்படுவது பொது சார்பியல் விதி. இதன் அடிப்படையில்தான் இன்று விண்வெளி ஆய்வுகள் நடைபெற்று வருவதோடு, பல்வேறு தொழில்நுட்ப கருவிகளும் (செயற்கைக்கோள், ஜிபிஎஸ்) செயல்படுகின்றன. இப்போது சார்பியல் விதி எளிய வடிவில்:

எழுபது கி.மீ வேகத்தில் செல்லும் பேருந்தில்  சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கையிலுள்ள பந்தை முன்னோக்கி பத்து கி.மீ. வேகத்தில் எறிகிறீர்கள். பந்தின் வேகம் என்ன என்று உங்களைக் கேட்டால், பத்து கி.மீ. என்று கூறுவீர்கள். பேருந்துக்கு வெளியே நிற்பவர், எண்பது கி.மீ. வேகத்தில் பந்தை எறிந்தீர்கள் என்பார். ஒருவர் இருக்கும் இடம் சார்ந்து பொருளின் வேகம் மாறுபடுகிறது.  வேகம் என்ற இடத்தில் ஒளியைப் பொறுத்துங்கள். இங்கு ஒரே ஒரு வேறுபாடு, ஒளியின் வேகம் மாறாது என்பதுதான். இதுதான் பொது சார்பியல் விதி. 

 சூரியன் போன்ற பெரும் நிறை கொண்ட பொருள், தன் ஈர்ப்புவிசை மூலம் ஒளியை விலக வைக்கிறது என்பது கொள்கையாக  சரிதான். ஆனால்,  நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியன் தன் ஈர்ப்பு விசையால் மாற்றுகிறது என்பதை விளக்குவது நடைமுறையில் கடினம் என்பதை ஐன்ஸ்டீன் புரிந்துகொண்டார். பகலில் சூரியனின் ஒளியில் நட்சத்திரங்கள் கண்களுக்குத் தெரியாது. எனவே,இதற்கான நிரூபணத்தை நீங்களே கண்டுபிடியுங்கள் என்று சக ஆராய்ச்சியாளர்களிடம் கூறிவிட்டு தனது எழுத்தர் பணியில் மூழ்கிவிட்டார்.  

ஜெர்மனியைச் சேர்ந்த வானியலாளர் எர்வின் ஃபினாலே ஃப்ரண்ட்லிச், ஐன்ஸ்டீனின் கருத்துகளை உண்மையென நம்பியதோடு அதனை நிரூபிக்கவும் முயற்சித்தார். இதற்காக நிதிதிரட்டி 1914 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு தன் குழுவினருடன் ஃபினாலே சென்றார். ஆனால் ரஷ்யா காவல்துறை அவர்களை கைது செய்ததால், கிரகணத்தைப் பதிவு செய்யும் அறிவியல் முயற்சிகள் அத்தோடு முடங்கின. 

உலகப்போர் தொடங்கி முழுமூச்சில் நடந்தபோதும், மனம் தளரவில்லை ஐன்ஸ்டீன். அக்காலத்தைப் பயன்படுத்தி தன் தியரியிலுள்ள தவறுகளை களைந்து அதனை நேர்த்தியாக்கி வெளியிட்டார். இந்த பிரதியைப் பெற்ற வானியலாளர்கள் சர். ஆர்தர் எடிங்க்டன் மற்றும் டைசன் ஆகியோர் ஒன்றாக இணைந்து தியரியை ஆராய்ந்து 1919 ஆம் ஆண்டு நவ.9 அன்று இங்கிலாந்திலுள்ள ராயல் சொசைட்டியில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.  அந்த அறிக்கை ஏற்கப்பட்டவுடன் டைம்ஸ் நாளிதழில் அறிவியல் புரட்சி என்ற தலைப்பில் ஐன்ஸ்டீனின் தியரி அச்சானது. சில நாட்களிலேயே அமெரிக்க அதிபருக்கு நிகரான புகழை ஐன்ஸ்டீன் கையெழுத்து பெற்றது. 

அமெரிக்க வானியலாளரான ஜார்ஜ் எல்லரி ஹாலே உள்ளிட்ட சிலர் ஐன்ஸ்டீனின் தியரியை ஏற்க மறுத்தனர். அமெரிக்காவிலுள்ள லிக் ஆய்வுமையம் 1922 ஆம் ஆண்டு நடந்த சூரியகிரணத்தை(ஆஸ்திரேலியா, மெக்சிகோ) பதிவு செய்து சார்பியல் தியரியை நிரூபித்தது. சிரியஸ் (Sirius B) என்ற நட்சத்திரமும் ஐன்ஸ்டீனின் கொள்கைக்கு பக்கபலமாக ஆதாரமாக அமைந்தது. ஐன்ஸ்டீன் தான், வாழ்ந்த காலத்தில் பலரும் கேட்க நினைக்காத கேள்விகளை எழுப்பியதால், மூளையைப் பயன்படுத்துவது பற்றிய கேள்விகளில் அவர் தவறாமல் இடம்பிடித்து வருகிறார். 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்