70 ஆயிரம் எண்களை நினைவுபடுத்தி சொன்ன ராஜ்வீர் மீனா!

 



Professor, Mathematician, Scientists, Teacher


பை எனும் எண்ணின் மதிப்பை வேலூரைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா, 70 ஆயிரம் எண்களை நினைவுபடுத்திச் சொல்லி கின்னஸ் சாதனை செய்தார். 

2015 ஆம் ஆண்டு மார்ச்  21 அன்று இச்சாதனையை இவர் செய்தார். இவருக்கு முன்பாக, சாவோ லூ என்ற சீனர் 67,780 எண்களை மனப்பாடாக கூறியதே சாதனையாக இருந்தது. 

2005 ஆம் ஆண்டு அகிரா ஹராகுசி என்பவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் 1,17,000 பை எண்களை மனப்பாடம் செய்து கூறினார் என்கிறது தி கார்டியன் பத்திரிகை.  இப்படி எண்களை நினைவுபடுத்தி கூறுவதை கணிதத்தில் பைபிலாலஜி (piphilology) என்று குறிப்பிடுகின்றனர். 

பை என்ற எண்ணுக்கான மொழியை கணிதவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு பிலிஸ் (Pilish ) என்று பெயர். 2010 ஆம் ஆண்டு மைக் கீத் என்பவர் இது பற்றி நாட் எ வேக் என்ற நூலை இம்மொழியில் எழுதினார். 

2

ஒரு அறையில் 23 பேர் இருந்தால் அவர்களில் இருவர் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் வாய்ப்பு எவ்வளவு தெரியுமா? 50 சதவீதம். 

ஜீரோ மட்டுமே ரோமானியர்களின் எண்களில் இல்லாத ஒரே எண். இது இரட்டைப்படை எண் கூட. 

உலகில் 3 ஆயிரம் பேரிடம் செய்த ஆய்வில் பலரின் விருப்ப எண்ணாக இருப்பது ஏழு என்ற எண்தான். அடுத்ததாக, பலரும் விரும்பிய எண் 3. 

ஆசியாவில் நான்கு (four) என்ற எண், துரதிர்ஷ்டமான எண்ணாக கருதுகிறார்கள். காரணம், ஜப்பான்(shi), கன்டோனிஸ் (sei), மாண்டரின் (si), கொரிய (sa) மொழிகளில் இதன் பொருள், மரணம் ஆகும். 

சிகாடஸ் எனும் பூச்சி மண்ணுக்கு அடியில் 13 முதல் 17 ஆண்டுகள் வசித்துவிட்டு பின்னரே இணைசேர வெளியே வருகின்றன. இவை பகா எண்களில் தன் வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டுள்ளன. 

3

நான்கு எண்களை எடுத்துக்கொள்ளுங்கள். கீழேயுள்ள விஷயங்களைப் பின்பற்றினால் அதன் விடை 6174 என்றே வரும். 

நான்கு எண்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு எண்களாவது பிற எண்களிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். 

நான்கு எண்களையும் இறங்கு வரிசையில் அமைத்துக் கொள்ளுங்கள். பெரிய எண்களிலிருந்து சிறிய எண்களை கழித்துக்கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் எண்களை கழியுங்கள். 

இறுதியில்  6174 என்பதே விடையாக வரும். இதைத்தான் காப்ரேகர் எண் என்று குறிப்பிடுகின்றனர். 

555 என்ற எண்ணை தாய்லாந்தில் Hahaha என்று பொருளில் புரிந்துகொள்கின்றனர். five என்ற வார்த்தைக்கு Ha என்று பொருள். 

நாற்பது என்ற எண்ணுக்கு ஒரு சிறப்பிருக்கிறது என்ன தெரியுமா? இந்த எண்ணை ஆங்கிலத்தில் Forty என்று  எழுதினால் ஆங்கில எழுத்துவரிசை மாறாது வரும். 

5040 என்ற எண்ணை அறுபது எண்களால் வகுக்க முடியும். 

ரூபிக் க்யூப்பை 43,252,003,274,489,856,000 விதங்களில் கலைத்துப் போட முடியும். அதனை ஒன்று சேர்ப்பது உங்களுக்கான சவால். 

முதல் ஏழு பகா எண்களின் இரட்டைப் படை மதிப்புகளை கூட்டினால் அதன் மொத்த மதிப்பு 666 ஆகும். 

பனிரெண்டு கூட்டல் ஒன்று என்பது பதினொன்று கூட்டல் இரண்டு என்பதன் பிறழ்கிளவி ஆகும். இரண்டின் விடையும் 13 தான். இதனை ஆங்கிலத்தில் எழுதி, எழுத்துக்களை எண்ணிப் பார்த்தாலும், அதில் 13 எழுத்துகள்தான் இருக்கும். 

தற்போது கணிதத்தில் நாம் பயன்படுத்தும் கணித குறியீடுகளை பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு, பார்த்திருக்க முடியாது. காரணம், அன்று சூத்திரங்களைக் கூட எழுத்தால் எழுதினர். 

அனைத்து ஒற்றைப்படை எண்களிலும் 'e'  என்ற எழுத்து உண்டு.

மேத்தமேட்டிக்ஸ்(mathamatics)  என்ற வார்த்தை ஆங்கில நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகம் 'தி டேமிங் ஆப் தி ஸ்ரூ' (The Taming of the Shrew) வில் இடம்பெற்றுள்ளது. 

 









 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்