ஐஐடி டூ அரசுப்பள்ளி ஆசிரியர்!

 





எஸ்.பவிஷ், படுகர் இனத்தைச் சேர்ந்தவர். ஊட்டியிலுள்ள துனேரி பகுதியைச் சேர்ந்தவர். பவிஷ், ஐஐடி இந்தூரில் இயற்பியல் படித்துவிட்டு, துனேரியிலுள்ள அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். முனைவர் பட்டம் பெறும் முனைப்பில் இருந்தவரை மாற்றியது அவரது நண்பர்கள். 

கிராமத்திலிருந்து ஐஐடி வரை சென்ற ஒருவர் மாணவர்களுக்கு பெரியளவில் ஊக்கமூட்டி உதவ முடியும் என கூறியதால் ஆசிரியராக பணியாற்ற பவிஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பவிஷ், ஐந்தாவது வரை உள்ளூர் பள்ளியில் படித்திருக்கிறார். பின்னர் காக்குச்சி, காரமடை என பள்ளிப்படிப்பு விரிவடைந்தது. பிளஸ் 2 படிப்பு முடிந்தபிறகு கோவைக்கு பஸ் ஏறியவருக்கு, பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. 

கணினி பொறியியல் பட்டம் பெற்றவர் முதுகலைப் பட்டம் பெற ஐஐடி இந்தூருக்கு சென்றுபடித்தார். ”நான் முனைவர் படிப்பிற்கான தயாரிப்பில் இருந்தபோதுதான் எனது நண்பர்கள் கிராமத்து மாணவர்கள் பற்றி கூறினார்கள். அவர்களுக்கு பாடம் பற்றி உதவினால் நன்றாக இருக்கும் என்றார்கள். எனவே, நான் தன்னார்வமாக அவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்”’ என்றார் பவிஷ். 

எங்கள் பள்ளி மாணவர்களுக்கு பவிஷ் சிறப்பான உத்வேகத்தை தந்துவருகிறார். அரசுப்பள்ளியில் படித்தாலும் உயர்ந்த கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் ஊக்கமுடன் படிக்க வாய்ப்புள்ளது என்றார் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார்.





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்