தைப்பூசத்தை விடுமுறை நாளாக அறிவிக்க பக்தர்களின் வேண்டுகோள்தான் காரணம்! - முதல்வர் பழனிசாமி

 



Image result for எடப்பாடி பழனிச்சாமி



நேர்காணல்

முதல்வர் பழனிசாமி


நீங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணி அரசியலைப் பின்பற்றுகிறீர்களா?

அதிமுகவின் பொதுசெயலாளராக விளங்கிய அம்மா யாருடனும் ஒப்பிட முடியாதவர். நாங்கள் அவர் வகுத்த நலத்திட்டங்களை அப்படியே தொடர்கிறோம். அவரைப் போல சிறந்த தலைவரை நாங்கள் கண்டதில்லை. எங்கள் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவருக்கும் இந்த உண்மை தெரியும். 


ஜெயலலிதாவை உங்கள் வழிகாட்டி என்று சொல்லுகிறீர்களா?

கண்டிப்பாக. அவரின் தலைமைத்துவ வழிகாட்டலில் நான் நிறைய ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் காரணமாகவே நான் இன்று முதல்வராகி மக்களுக்காக அவரது வழியிலேயே செயல்பட்டு வருகிறேன். அவரது ஆளுமை பிரமாண்டமானது. நான் அவரை எனது வழிகாட்டி என பெருமையுடன் கூறிக்கொள்ளுகிறேன். 

நீங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமருவோம் என்று நினைத்து பார்த்திருக்கிறீர்களா?


நிச்சயமாக இல்லை. ஆனால் அது அதிமுகவில் சாத்தியமாகிற ஒன்றுதான். இங்கு கீழ்நிலையில் உள்ளவராக இருந்தாலும் கூட எம்எல்ஏ, எம்பி, முதல்வர் என்று படிநிலையை எட்டிப்பிடிக்க முடியும். இது மன்னர் பரம்பரை சார்ந்த கட்சி கிடையாது. 

பிற முதல்வர்கள் செய்யாத முயற்சியாக வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை பெற்றுவர முயன்ற முதல் முதல் அமைச்சர் நீங்கள். எதற்கு அந்த முயற்சி?

தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்கள் இருக்க கூடாது என்று நினைத்தேன். அதற்காகவே வெளிநாடுகளுக்கு சென்று தமிழர்களை சந்தித்து அவர்களின் முதலீடுகளைப் பெற்றுவர முயன்றேன். இந்த வகையில் 41 நிறுவனங்கள் முதலீடுகளை தமிழகத்திற்கு அளிக்க முன்வந்துள்ளன. 8,835 கோடி முதலீடு கிடைத்துள்ளதோடு 35 ஆயிரம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளோம். 

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி உங்கள் கருத்து?

முதிர்ச்சியான தலைவர் போல அவர் நடித்து வருகிறார். 

உங்கள் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்களை கொடுத்து வருகிறார்களே?


அவர்களே ஊழல் கறை படிந்தவர்கள்தான் அவர்கள் இப்போது அடுத்தவர்களை கறைபடிந்தவர்கள் என்று சொல்லிவருகிறார்கள். 

அண்மையில் பன்னீர்செல்வம், தன்னைப் பற்றிய விளம்பரங்களை வெளியிட்டதை கவனித்தீர்களா?

எங்கள் கட்சி ஜனநாயகப்பூர்வமானது. அதிலுள்ள உறுப்பினர்கள் யாரும் தங்கள் சாதனைகளை நாளிதழ்களில் வெளியிடலாம். அதை அரசு தடை செய்யமுடியாது. அவர்கள் செய்த சாதனைகளை அவர்கள் வெளியிடுகிறார்கள். தனிப்பட்ட விஷயமாகவே இதனை கருதலாம். 

சிக்கலான தருணங்களில் உங்கள் குடும்பம் உங்களுக்கு துணையாக நின்றிருக்கிறதா?

எனது குடும்பத்தை நான் ஊடக வெளிச்சத்திற்கு கொண்டுவர விரும்பவில்லை. அது தனிப்பட்ட விவகாரம். மக்களுக்கு நன்மைகளை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது. இதில் கடினமான காலம் என்று ஏதுமில்லை. 

கடந்த ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் ஆண்டதில் தமிழகம் மிகச்சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆனால் பாஜக, வளர்ச்சி பெறவில்லை என்று கூறுகிறதே?

இக்கேள்விக்கான பதிலை நீங்கள் பாஜகவிடம்தான் கேட்கவேண்டும். 

பாஜகவின் வேல் யாத்திரையை  தடுத்து நிறுத்தியிருக்கிறீர்களே?

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்தியல் இருக்கும். அதனை அவர்கள் பின்பற்றுவார்கள். ஆனால் நான் தமிழகத்தின் முதல்வராக சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்றுள்ளேன். 

தைப்பூசத்தை பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளீர்கள். பாஜகவின் இந்து பிரசார பயன்களைத் தடுப்பதற்கான முயற்சி என இதனைக் கருதலாமா?

என்னுடைய பெயரே பழனிசாமிதான். முருக பக்தன்தான் நான். தமிழ்நாட்டின் தென்பகுதி, மேற்கு பகுதி பக்தர்கள் தைப்பூசத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தனர். இது நெடுநாளைய கோரிக்கை. அதனை இப்போது நிறைவேற்றியுள்ளோம். சிறுவயதில் எனது தங்கையுடன் நான் பழனி கோவிலுக்கு வெறும் காலுடன் சென்றது இன்னும் நினைவிலிருக்கிறது.

தி வீக்

லஷ்மி சுப்பிரமணியன்










கருத்துகள்