இடுகைகள்

தாவரங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மண்ணிலுள்ள நச்சு உலோகங்களை சுத்திகரிக்கும் தாவர இனங்கள்!

படம்
  நச்சு உலோகங்களை உறிஞ்சும் தாவரம்! பெருநகரங்களில் எலெக்ட்ரானிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. ஆனால், கழிவுகளிலிருந்து நிலம், நீரில் தேங்கும் நச்சு உலோகங்களை மறுசுழற்சி செய்வது கடினமானது. இதன் விளைவாக, நிலமும், நீரும் மாசுபடுகிறது. இதற்கு அறிவியலாளர்கள், தனித்துவமான தாவரங்களை வளர்த்து, நச்சு உலோக பாதிப்பை குறைக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.  உலோகங்கள் மாசுபடுத்தியுள்ள மண்ணைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்ட 700க்கும் அதிகமான  தாவரங்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக தாவரவியலாளர் ஆன்டனி வான்டர் என்ட் இதுபற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  அவர், புதிய கடலோனியா தீவிலுள்ள மழைக்காட்டிற்கு சென்றது கூட உலோகத்தை உறிஞ்சுகிற  தாவரங்களைத்  தேடித்தான். அவர் கண்டறிந்த தாவரத்தின் பெயர் பைக்னாண்ட்ரா அக்குமினாட்டா (Pycnandra acuminata).  இதன் தாவர சாற்றில், 25 சதவீத நிக்கலைக் கொண்டிருந்தது.  இப்படி மண்ணிலுள்ள உலோகங்களை உறிஞ்சக்கூடிய தாவர இனங்களுக்கு,  ஹைபர்அக்குமுலேட்டர் (Hyperaccumulator)என்று பெயர்.  எதிர்காலத்தில் உலோகச் சுரங்கங

பறவைகள் இல்லாத உலகை கற்பனை செய்யவே முடியாது! - ஸ்காட் வி எட்வர்ட்ஸ்

படம்
  நேர்காணல் ஸ்காட் வி எட்வர்ட்ஸ் பேராசிரியர், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா. பேராசிரியர் ஸ்காட், பரிணாம உயிரியல் துறையில் பணியாற்றுகிறார். பரிணாம வளர்ச்சியில் பறவைகளின் இயல்பு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பல்லுயிர்த்தன்மையில் பறவைகள் எந்தளவு முக்கியமானவை? அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸ் நகரில் தான் வளர்ந்தேன். பத்து வயதிலிருந்தே, அங்குள்ள நிறைய மரங்கள், அதில் வாழ்ந்து வந்த பறவைகள் மீது ஈடுபாடு உருவானது. 10 ஆயிரம் இனங்களுக்கு மேல் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்வதும் எளிது. பிற விலங்கினங்களை விட பறவைகளின் சூழலியல் மற்றும் அதன் வாழ்க்கை இயல்புகளை அறிவது எளிது.  காலநிலை மாற்றத்தை பறவைகள் எப்படி சமாளிக்கின்றன? தற்போது, பறவைகளுக்கு நிறைய சவால்கள் உள்ளன. அதில் முக்கியமானது, வாழிட இழப்பு. மனிதர்கள் காடுகளை பெருமளவில் அழித்துவிட்டதால், பறவைகள் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. இந்தியாவின் அரணாக உள்ள இமாலயத்தில், சில தனித்துவமான பறவைகள் வாழ்கின்றன. காலநிலை மாற்றத்தால் அவற்றின் வாழிடமும் சுருங்கினால், அவையும் அழிந்துவிடும். வேட்டையாடல், பறவைகளை செல்லப்பறவைகளாக வளர்

தோலில் உருவாகும் மோர்கன் ஸ்பாட்ஸ், ஆவண வகைப்பாட்டியலின் தந்தை! கேம்ப்பெல் டி மோர்கன், கார்ல் லின்னேயஸ்

படம்
  கேம்பெல் டி  மோர்கன் ( Campbell De Morgan  1811-1876) இங்கிலாந்தின் குளோவெல்லி நகரில் பிறந்தார். லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் மருத்துவம் படித்தார். பிறகு, மிடில்செக்ஸ் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்ட மருத்துவப் பள்ளிக்கு பல்வேறு உதவிகளைச் செய்ததோடு, பேராசிரியராக செயல்பட்டார்.  1861ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியில் உறுப்பினரானார்.புற்றுநோய் செல்கள், எப்படி பரவுகிறது என்பதில் ஈடுபட்டார். இதன் மூலமாக, செர்ரி ஆஞ்சியோமா எனும் சிவப்பு நிற தோல் வளர்ச்சி பிரச்னை பற்றி கண்டறிந்தார். மனிதர்களின் தோலில், வட்டமாக சிவப்பு நிறத்தில் சிறு கொப்புளம் போலத்தோன்றும். 30 அல்லது அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கு இப்பிரச்னை ஏற்படுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட இடங்களை கேம்பெல்  டி மோர்கன் ஸ்பாட்ஸ் என்றும் மருத்துவர்கள் அழைக்கின்றனர்.தோலில் உருவான  சிறுகொப்புளம் பெரிதானால் அல்லது உடைந்து ரத்தம் வந்தால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது முக்கியம்.    https://en.wikipedia.org/wiki/Campbell_De_Morgan 2 கார்ல் லினாயஸ் ( Carl Linnaeus  1707 1778) பிறந்தது: ஸ்வீடன், ஸ்டென்புரோஹல

தாவரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்! கிரிஸ்டியன் கான்ராட் ஸ்பிரேங்கல்

படம்
  கிரிஸ்டியன் கான்ராட் ஸ்பிரேங்கல் ( Christian konrad sprengel 1750 -1841) ஜெர்மனியின் பிராண்டன்பர்க் நகரில் பிறந்தார். பெற்றோர், எர்னஸ்ட் விக்டர் ஸ்ப்ரேங்கல், டோரோதியா ஞாடன்ரெய்ச்.  1770ஆம் ஆண்டு ஹாலே பல்கலைக்கழகத்தில் இறையியல், மொழியியல் பாடங்களைப் படித்தார். 1780ஆம் ஆண்டு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். கிடைத்த ஓய்வு நேரத்தில், தாவரவியல் பற்றி படித்துக்கொண்டிருந்தார். தாவரங்களில் நடைபெறும் மகரந்தச்சேர்க்கையை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார். கல்விப்பணி மற்றும் மத ரீதியான செயல்பாடுகளை தாவரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக குறைத்துக்கொண்டார்.  1793ஆம் ஆண்டு கான்ராட் வெளியிட்ட தாவரவியல் நூலில் 461 தாவர இனங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதில் 1000க்கும் மேற்பட்ட பூக்களின் ஓவியங்கள் இருந்தன. 1794ஆம் ஆண்டு பள்ளி நிர்வாகம், கான்ராடை  ஆசிரியர் பணியிலிருந்து நீக்கியது. அறிவியலாளர்கள் கான்ராடின் ஆராய்ச்சியை பெரியளவு அங்கீகரிக்கவில்லை. 1841ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின், கான்ராடின் ஆராய்ச்சியை ஏற்றுக்கொண்டார். பின்னரே அறிவியலாளர்கள் கான்ராடை ஏற்று அங்கீகரித்தனர்.  https://www.encycl

மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்களின் யுக்தி!

படம்
  மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்கள்! வெயில் போல மழையும் அனைத்து தாவரங்களுக்கும் தேவையானது. ஆனால், சிலவகை தாவரங்கள் மழை மூலமாக நோய் ஏற்படும் என்பதை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள சில முன்னேற்பாடுகளை செய்துகொள்கின்றன. அதில் முடிக்கற்றை போன்ற மெல்லிய இழைகளைக் கொண்ட தாவரங்கள் முன்னணியில் உள்ளன. இவை. இழைபோன்ற ட்ரைகோம்ஸ் எனும் அமைப்பைப் பயன்படுத்தி மழையை உணர்கின்றன. இதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுகின்றன என ஜப்பானின் நகோயா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  தாவரங்களுக்கும் மனிதர்களுக்கு உள்ளது போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு உள்ளது. மழை மூலமாக பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகிய நுண்ணுயிரிகள் எளிதாக தாவரத்திற்குள் நுழைந்து அதை தாக்க முடியும் என்பதுதான்.  அரபிடோப்சிஸ் தலியானா (Arabidopsis thaliana) எனும் தாவரத்தை வைத்து, பேராசிரியர் யாசுவோமி டாடா, உதவி பேராசிரியர் மிகா நோமோடோ ஆகியோர் ஆய்வு செய்தனர். இவர்கள் தாவரத்தின் ஆர்என்ஏ வரிசையை சோதித்து, மழைக்கு எதிராக தூண்டப்படும் மரபணுக்களை அடையாளம் காண முயன்றனர்.  நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களாக காம்டா (

காடுகளின் பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும் பழங்குடிகள்!

படம்
  பல்லுயிர்த்தன்மைக்கு பாதுகாப்பு!  உலகில் உள்ள பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகளை அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும், பழங்குடிகளும் பாதுகாத்து வருகின்றனர். ஆர்க்டிக் முதல் தெற்கு பசிபிக் கடல் வரையிலான 80 சதவீத காடுகள் பாதுகாக்கப்படும் நிலையில்தான் உள்ளன.  “ 17 சதவீத காடுகளின் பரப்பை சொந்தமாக கொண்டு அதனை பாதுகாத்து வருபவர்கள் பூர்வகுடியினரான பழங்குடி மக்கள்தான். இவர்கள் அரசுகளை விட சிறப்பாக காடுகளை பாதுகாக்கின்றனர் ” என்றார் உலக காட்டுயிர் நிதியத்தின் முன்னாள் அறிவியலாளரான எரிக் டைனர்ஸ்டெய்ன்.  உலக நாடுகளிலுள்ள அரசுகள், பழங்குடிகள் வாழும் நிலத்தை அவர்களுக்கானதாக கருதுவதில்லை. அப்படி அரசு கருதும்போது அதிலுள்ள பல்லுயிர்த்தன்மையை காப்பது எளிதான பணியாக மாறுகிறது. தொலைநோக்கில் பார்க்கும்போது மலிவான வகையில் அதிக விளைவுகளை, தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் இது. தொடக்ககால சூழல் பாதுகாப்பு மாநாடுகளில் பழங்குடிகளை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் இன்று நிலை மாறி வருகிறது.  கடந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஐயுசிஎன் உலக பாதுகாப்பு மாநாட்டில், பழங்குடி மக்கள் முதன்முறையாக பங்கேற்றனர். 2010 முதல் 2020ஆம் ஆண்டு

பாண்டிச்சேரியின் பசுமை பரப்பை அதிகரிக்கும் கல்லூரி முதல்வர்!

படம்
  வங்கத்தைச் சேர்ந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை அறிந்திருப்பீர்கள். அவரது தந்தைதான் டெபேந்திர நாத் தாகூர். இவர்தான் மரங்களடர்ந்த இடத்தைப் பார்த்து அங்கு கல்வி நிலையம் அமைக்க நினைத்தார். அதன் பெயர்தான், சாந்தி நிகேதன். பாண்டிச்சேரியில் இதேபோல முயற்சி நடைபெற்றுள்ளது. இதனை தாகூர் கல்லூரி முதல்வர் சக்திகாந்த தாஸ் செய்துள்ளார். கல்லூரி வளாகத்தில் உள்ள பயன்படாத நிலம் 15 ஏக்கரில் ஏராளமான மரங்களை நட்டு அதனை வளப்படுத்தியுள்ளார். இப்போது கல்லூரி வகுப்புகளை கூட அங்கு நடத்தி வருகிறார்கள்.  தொடக்கத்தில் அங்கு மரக்கன்றுகளை நட தனது சொந்த பணத்தை செலவு செய்திருக்கிறார் சக்தி. இவர், ஒடிஷா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். இன்று இவரின் முயற்சியை பலரும் செயல்படுத்த, 4 ஆயிரம் மரங்கள் வளர்ந்து சிறு காடாகவே நிற்கிறது.  தொடக்கத்தில் காடுகளை வளர்க்கிறோம் என்று சக்தி இருந்துவிட, உள்ளே புகுந்த மாடுகள் தாவரங்களை மேய்ந்துவிட்டு சென்றன. எனவே இப்போது இதனை பாதுகாக்கவென தனி பாதுகாவலரை ஏற்பாடு செய்துவிட்டனர். புதுச்சேரியில் தற்போது காடுகளின் அளவு 10 சதவீதம்தான். அதனை 20 சதவீதம் ஆக்கவேண்டுமென சக்தி விரும்புகிறார். அதனை தன்

ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன நினைத்தார் என்று அறிய உதவும் நூல்! - நூல் அறிமுகம்

படம்
  சொல்லப்படாத கதை ஹிட்லர் அண்ட் இந்தியா வைபர் புரந்தாரே ரூ.399 வெஸ்ட்லேண்ட் இந்தியாவில் ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன கருத்துக்களை கொண்டிருந்தார் என்பதை அறியாமலேயே அவரை ஆராதித்து கொடி பிடிக்கும் ஆட்கள் அதிகம். ஹிட்லரின் எஸ்எஸ் படையை அடியொற்றியே ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்களை மையமாக வைத்து நூல் எழுதப்பட்டுள்ளது. ஹிட்லர் இந்தியாவை பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் என்ன கருத்துகளை கொண்டிருந்தார் என தெளிவுபடுத்துகிற நூல் இது.  --------------------------------- இந்தியன் பொட்டானிக்கல் ஆர்ட் மார்ட்டின் ரிக்ஸ்  ரூ.1495 ரோல் புக்ஸ்  பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட தாவரங்களை ஆவணப்படுத்துகிற நூல். இதிலுள்ள நிறைய படங்களை வேறு எங்குமே நீங்கள் பார்க்க முடியாது. தற்போது உயிரியல் சார்ந்து இயங்கும் கலைஞர்களின் பல்வேறு படைப்புகளோடு நூல் நிறைவடைகிறது.  -------------------------------------------------------------- வாட்டர்  எலிமெண்ட் ஆப் லைஃப் யுத்திகா அகர்வால், கோபால் கிருஷ்ண அகர்வால் 599, ப்ளூம்ஸ்பரி அரசியலமைப்புச் சட்டப்

சிம்பன்சிகள் அரசியல்வாதிகளாக முடியுமா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி  தாவரங்கள் இசையைக் கேட்கின்றனவா? 1973ஆம் ஆண்டு வெளியான சீக்ரெட் லைஃப்  ஆப் பிளான்ட்ஸ் நூலில் தாவரங்கள் இசையைக் கேட்கின்றன என்ற தகவல் கூறப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அப்படி கேட்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். தற்போது, தாவரங்கள் ஹிப்ஹாப், ராப் இசையைக் கேட்பதில்லை. ஆனால் பூச்சிகளின் ஓசையை கிரெஸ், ஸ்வீட் பீஸ் ஆகிய தாவரங்கள் கேட்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதிர்வுகளை அறியும் தன்மை தாவரங்களில் இருக்கின்றன. எனவே இசை மூலமாக அதிர்வுகளை தாவரங்கள் சரியாக உள்வாங்கிக்கொள்கின்றன என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. ஈக்கள் பாடுகின்றனவா? பழ ஈக்கள் தம் இணையை ஈர்க்க பாடுகின்றன. இவை மூன்று வித பாடல்களை குரல் மாற்றங்களுடன் பாடுகின்றன. முக்கியமாக பாடுவது, பெண் இணையை ஈர்க்கத்தான். கொசுக்கள் பறக்கும்போது வரும் ஒலி, அதன் இறக்கையை வேகமாக வீசுவதால் ஏற்படுகிறது. மீன்கள் தம் கழிவை எப்படி வெளியேற்றுகின்றன? சிறுநீரில் நைட்ரஜன் பொருட்கள் நிரம்பியிருக்கும். இது நீரில் கரையக்கூடியது. ஏரி, ஆறு போன்ற இடங்களிலுள்ள மீன்களின் கழிவு சற்று திடமாக இருக்கும். ஆனால் கடலில் உள்ள மீன்கள் உப்ப

அறிவியல் பிட்ஸ்!

பிட்ஸ் 2030 ஆம் ஆண்டுக்குள் ஐ.நாவின் வறுமை ஒழிப்பைச் சாதிக்க தனிநபருக்கு தலா 140 ரூபாய் தினசரி அரசு வழங்கவேண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பிற ஆசிய நாடுகளுக்கு இத்தொகை ஒரு டாலர் மதிப்பில் உள்ளது. 42 நாடுகளைச் சேர்ந்த 143 மில்லியன் மக்கள் பசி, பட்டினியில் கிடந்து உழல்கின்றனர். ஆஃப்கானிஸ்தான், சூடான், காங்கோ, நைஜீரியா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் உணவு பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளன. 26 நாடுகள் சூழல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பால் 10 மில்லியன் மக்களும், உணவு பாதுகாப்பு பிரச்னையில் 23 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஹாம்ஸையர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அங்கு வாழ்ந்த 14 காட்டு தேனீக்கள் இனம் அழிந்துவிட்டது என கண்டறிந்துள்ளனர். கட்டடங்களில்  பசுமை தாவரங்களை வளர்த்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த போர்லாண்ட் பல்கலைக்கழகம் அறிக்கை அளித்துள்ளது.