மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்களின் யுக்தி!
மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்கள்!
வெயில் போல மழையும் அனைத்து தாவரங்களுக்கும் தேவையானது. ஆனால், சிலவகை தாவரங்கள் மழை மூலமாக நோய் ஏற்படும் என்பதை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள சில முன்னேற்பாடுகளை செய்துகொள்கின்றன. அதில் முடிக்கற்றை போன்ற மெல்லிய இழைகளைக் கொண்ட தாவரங்கள் முன்னணியில் உள்ளன. இவை. இழைபோன்ற ட்ரைகோம்ஸ் எனும் அமைப்பைப் பயன்படுத்தி மழையை உணர்கின்றன. இதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுகின்றன என ஜப்பானின் நகோயா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தாவரங்களுக்கும் மனிதர்களுக்கு உள்ளது போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு உள்ளது. மழை மூலமாக பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகிய நுண்ணுயிரிகள் எளிதாக தாவரத்திற்குள் நுழைந்து அதை தாக்க முடியும் என்பதுதான். அரபிடோப்சிஸ் தலியானா (Arabidopsis thaliana) எனும் தாவரத்தை வைத்து, பேராசிரியர் யாசுவோமி டாடா, உதவி பேராசிரியர் மிகா நோமோடோ ஆகியோர் ஆய்வு செய்தனர். இவர்கள் தாவரத்தின் ஆர்என்ஏ வரிசையை சோதித்து, மழைக்கு எதிராக தூண்டப்படும் மரபணுக்களை அடையாளம் காண முயன்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களாக காம்டா (CAMTA) உள்ளது. மழை பெய்யும்போது தாவரத்தின் இலைகளில் கால்சியம் அயனிகள் (Ca2 +) அதிகரிக்கும்போது காம்டா மரபணுக்களின் திறன் குறைகிறது. கால்சியம் அயனிகளோடு, இலைகளில் பச்சை நிறத்தை ஒளிர வைக்கும் GCaMP3 என்ற மரபணுவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ”நாங்கள் செய்த ஆய்வில் ட்ரைகோம்ஸ் எனும் இழைகள், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை கண்டறிந்துள்ளோம்” என்றார் பேராசிரியர் யாசுவோமி டாடா.
Study finds how plants protect themselves from pathogen in rain
HT School 29.4.2022
https://jspp.org/annualmeeting/JTPB2019/organizers.html
https://scitechdaily.com/how-plants-activate-their-immune-system-against-dangerous-pathogens-in-rain/
கருத்துகள்
கருத்துரையிடுக