டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளை அறிந்து உலகிற்கு சொன்னவர்! - ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின்

 


















ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின் (1920-1958)

இங்கிலாந்தின், லண்டன் நகரில் பிறந்தார். பெற்றோர் எல்லிஸ் ஆர்தர் ஃபிராங்கிளின், முரியல் ஃபிரான்சஸ் வாலே.பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் படிப்பில் ஆர்வம் காட்டினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்காம் கல்லூரியில், இயற்கை அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர், 1941ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றவர்,  பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று எக்ஸ்ரே கதிர்கள்(xray diffraction) பற்றி படித்து வல்லுநரானார். 

1951ஆம் ஆண்டு லண்டனில் கிங் கல்லூரியில் இருந்த ஆராய்ச்சிக் குழுவோடு இணைந்து எக்ஸ்ரேவைப் பயன்படுத்தி டிஎன்ஏவை 3டி வடிவத்தில் உருவாக்க முயன்றார். இதற்கு ரோஸாவின் மாணவர் எடுத்த போட்டோகிராப் 51 முக்கியமான ஆதாரமாக உள்ளது. 1953ஆம் ஆண்டு புகையிலை மொசைக் வைரஸின் ஆர்என்ஏ அமைப்பை பற்றி ஆராயத் தொடங்கினார். இந்த செயல்பாடுதான், வைரஸ்களைப் பற்றிய அமைப்பு பற்றி அறிவதற்கு உதவியது. டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளைப் பற்றி அறிவதற்கு ரோஸாலிண்ட் செய்த ஆராய்ச்சிகள் உதவின.

https://en.wikipedia.org/wiki/Rosalind_Franklin


கருத்துகள்