வினோதரச மஞ்சரி - ரேடியோ தகவல்தொடர்பு, கனிமங்களின் வகைகள்













ரேடியோ தகவல் தொடர்பு

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தகவல்தொடர்பு மெதுவாக நடைபெற்று வந்தது. பிறகுதான் ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டன. மின்காந்த அலைகளில் ரேடியோ அலையும் ஒன்று.இதன்மூலம் தொலைவிலுள்ள ஒருவருக்கு எளிதாக தகவல் அனுப்பி, பதிலைப் பெறமுடியும். இதற்கு உதவுவதுதான் டிரான்ஸ்சீவர் (Transceiver).இதில் உள்ள ஆன்டெனா மூலம் சிக்னல்களைப் பெற்று பதில் அனுப்ப முடியும். டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரீசிவர் என இரு பணிகளையும் தனது பெயருக்கு ஏற்ப டிரான்ஸ்சீவர் கருவி செய்கிறது. 

மலையேறும் வீரர்கள், டிரான்ஸ்சீவரைப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் மலையேற்றக் குழுவில் யாராவது விபத்து காரணமாக காணாமல் போனாலும், கருவியில் உள்ள சிக்னல் மூலம் எளிதாக கண்டுபிடிக்க மீட்க முடியும். போக்குவரத்திற்கு பயன்படும் காருக்கான ஸ்மார்ட் கீ, ரேடியோ அலை மூலமே இயங்குகிறது. இதன்மூலம் காரின் கதவுகளை திறப்பது, மூடுவது, காரின் இஞ்சினை ஆன் செய்வது ஆகியவற்றை செய்யலாம். 


2

போர்னைட் (Bornite)

இயற்கையில் கிடைக்கும் வண்ணமயமான கனிமங்களில் இதுவும் ஒன்று. போர்னைட், செம்பு மற்றும் இரும்பு கொண்ட சல்பைட் வடிவம். இதற்கு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த  கனிமவியலாளர் இக்னாஸ் வான் போர்ன் (Ignaz Von Born)என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. செம்பை பெறுவதற்கான முக்கியமான தாது, போர்னைட். சிவப்பு, பழுப்பு, வெண்கல, கருநீலம், நீலம்,  என பல்வேறு நிறங்களைக் கொண்ட கனிமம் இது. இதனால் இதற்கு மயில்தாது என்று பெயர். க்யூபிக், ஒழுங்கற்ற வடிவம் கொண்ட தாதுவாக போர்னைட் தாதுவைப் பெறலாம். சால்காபிரைட், பைரைட், மார்காசைட், குவார்ட்ஸ் ஆகியவற்றுடனும் இணைந்து கிடைக்கிறது. 

சால்கோசைட் (Chalcocite)

செம்பைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை, சால்கோஸ் (chalcos). செம்பை பெறுவதற்கான முக்கியமான தாதுக்களில் சால்கோசைட்டும் ஒன்று. வெளிச்சத்தில் இதனைப் பார்க்கும் போது மங்கலான கரும்பழுப்பு நிறத்தில் தெரியும். தொடக்கத்தில் சால்கோசைட்டிற்கு, சால்கோசைன்  (Chalcosine) என்று பெயரிட்டு அழைத்தனர். 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் அதிகமான சூழலில் தான் சால்கோசைட் தாது உருவாகிறது. போர்னைட், கோவலைட், ஸ்பாலரைட், கலேனா, சால்கோபைரைட், கால்சைட், குவார்ட்ஸ் ஆகிய தாதுக்களோடு இணைந்து கிடைக்கிறது. தொன்மைக் காலத்திலிருந்து இங்கிலாந்தின் கார்ன்வால் சுரங்கத்திலிருந்து சால்கோசைட் தாது அதிகளவு பெறப்பட்டு வருகிறது. 

கோவெலைட் (Covellite)

இத்தாலியைச் சேர்ந்த கனிமவியலாளர் நிக்கோலா கோவெலி (Niccolo Covelli), இந்த காப்பர் சல்பைடைக் கண்டறிந்தார். இதனால், 1832ஆம் ஆண்டு இவரது பெயர், இதற்கு சூட்டப்பட்டது.  இந்த தாது, நீலம் அல்லது இண்டிகோ, சிவப்பு, கருநீலம் என கலவையான  நிறத்தில் உள்ளது. சில சமயங்களில் போர்னைட், சால்கோசைட், சால்கோபைரைட் ஆகியவற்றோடு இணைந்து கிடைக்கிறது. காப்பர்  சல்பைடுகளின் மேற்பூச்சாகவும் உள்ளது. இதனை கனிமவியலாளர் நிக்கோலோ, வேஸூவியஸ் எனும் எரிமலையில்  கண்டறிந்தார். அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாகாணத்திலுள்ள செம்பு சுரங்கங்களில் கோவெலைட் தாது அதிகளவு பெறப்படுகிறது. 


கருத்துகள்