ஏஐ முன்னோடிகள்!
ஏஐ முன்னோடிகள் டைம் இதழில் வெளியான ஏஐ சிறப்பிதழில் இடம்பெற்ற பிரபலமான ஏஐ ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் இவை. ஜேம்ஸ் மான்யிகா துணைத்தலைவர், ஆராய்ச்சி தொழில்நுட்ப சங்கம், கூகுள் james manyika google ஏஐ தொழில்நுட்பத்தை சந்தையில் பிறருடன் போட்டியிடுவதை விட அதை சரியான காரணத்திற்காக பயன்படுத்தவேண்டும் என ஜேம்ஸ் நினைக்கிறார். இதனால்தான், அவர் காலநிலை மாற்றம், ஆரோக்கியம், பொழுதுபோக்கு என பரந்துபட்ட துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை விரிவாக்க முயன்று வருகிறார். வெள்ள அபாயம் பற்றிய ஃப்ளுட் ஹப் என்ற தொழில்நுட்பம் எண்பது நாடுகளில் விரிவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசதி மூலம் வெள்ள அபாயத்தை முன்னரே மக்கள் அறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். அதேசமயம் ஏஐ தவறானவர்கள் குறிப்பாக சர்வாதிகார அரசின் கைகளுக்கு சென்றால் ஏற்படும் அபாயம் பற்றியும் பிரசாரம் செய்கிறார். பேசுகிறார், எழுதி வருகிறார். ஆலோசனை அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கிறார். தொழில்நுட்பம் வேகமாக சந்தைக்கு வந்தால் வணிகம் சிறக்கும், ஆனால் ஜேம்ஸ் வேகத்தை விட விவேகம் முக்கியம் என நினைக்கிறார்....