ஏஐ முன்னோடிகள்!

 











ஏஐ முன்னோடிகள் 


டைம் இதழில் வெளியான ஏஐ சிறப்பிதழில் இடம்பெற்ற பிரபலமான ஏஐ ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் இவை. 


ஜேம்ஸ் மான்யிகா

துணைத்தலைவர், ஆராய்ச்சி தொழில்நுட்ப சங்கம், கூகுள்


james manyika


google


ஏஐ தொழில்நுட்பத்தை சந்தையில் பிறருடன் போட்டியிடுவதை விட அதை சரியான காரணத்திற்காக பயன்படுத்தவேண்டும் என ஜேம்ஸ் நினைக்கிறார். இதனால்தான், அவர் காலநிலை மாற்றம், ஆரோக்கியம், பொழுதுபோக்கு என பரந்துபட்ட துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை விரிவாக்க முயன்று வருகிறார். வெள்ள அபாயம் பற்றிய ஃப்ளுட் ஹப் என்ற தொழில்நுட்பம் எண்பது நாடுகளில் விரிவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசதி மூலம் வெள்ள அபாயத்தை முன்னரே மக்கள் அறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். 


அதேசமயம் ஏஐ தவறானவர்கள் குறிப்பாக சர்வாதிகார அரசின் கைகளுக்கு சென்றால் ஏற்படும் அபாயம் பற்றியும் பிரசாரம் செய்கிறார். பேசுகிறார், எழுதி வருகிறார். ஆலோசனை அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கிறார். தொழில்நுட்பம் வேகமாக சந்தைக்கு வந்தால் வணிகம் சிறக்கும், ஆனால் ஜேம்ஸ் வேகத்தை விட விவேகம் முக்கியம் என நினைக்கிறார். 


ஃபெய் ஃபெய் லீ

பேராசிரியர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்


Fei fei li

professor,stanford university


ஃபெய் லீ அண்மையில்தான் ஓப்பன்ஹெய்மர் படத்தை தனது குழந்தைகளுடன் பார்த்தார். அதற்குப் பிறகு தொழில்நுட்பம் சார்ந்த பொறுப்பு அதிகரித்துவிட்டதாக உணர்ந்தார். எனவே, பிற குடிமகன்களை விட அறிவியலாளர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார். ஏஐ தொழில்நுட்பங்களில் அரசு முதலீடு செய்வதற்கு ஆதரவு தெரிவிப்பவர், மருத்துவத்துறையில் ஏஐயின் வரவு(முகமறிதல் நுட்பம்) கொஞ்சம் சங்கடப்படுத்தியிருக்கிறது. அதைப்பற்றித்தான் ஆராய்ச்சி செய்து வருகிறார். ஏஐ 4 ஆல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஏஐ ஆராய்ச்சி பற்றிய விஷயங்களை கவனித்து வருகிறார். 


நீராவி எஞ்சின், மின்சாரம் கூட அதன் காலத்தில் உலகை மாற்றிய தொழில்நுட்பம்தான். எனவே ஏஐ பற்றிய பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை. அன்றைய காலத்தில் காலத்தில் அந்த கண்டுபிடிப்புகள் ஆச்சரியப்பட வைத்தன. வேலைவாய்ப்புகள் அதைச் சார்ந்து மாறின. இன்று இதோ நிலை இப்படி மாறி வருகிறது. என்று பேசினார் ஃபெய் லீ. 


கிளமென்ட் டெலாங்க்யூ

இயக்குநர், துணை நிறுவனர், ஹக்கிங் ஃபேஸ் 

clement delangue


hugging face


இவரது வலைத்தளத்தில் ஏஐ ஆராய்ச்சியாளர்கள் தங்களது மாடல்கள், ஐடியாக்கள், டேட்டா செட்களை பகிர்ந்துகொள்ள முடியும். கட்டற்ற தொழி்நுட்பத்தில் உருவான வலைத்தளம் இது. ஆராய்ச்சியாளர்கள் வெளியிடும் ஏஐ மாடல்களுக்கு பாதுகாப்பும், வெளியீட்டையும் செய்து தருகிறது ஹக்கிங் ஃபேஸ் நிறுவனம். சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனம், கிளமென்டின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது டெக் வட்டாரத்தில் நம்பிக்கையை வரவைத்துள்ளது. ஏஐ தொழி்ல்நுட்பங்களை எளிதாக பகிரும் விதத்தில் இயங்கும் நாங்கள், அதிர்ஷ்டசாலிகள்தான் என ஜேம்ஸ் கூறினார். 


மெரிடித் ஒயிட்டேகர்

தலைவர், சிக்னல்


Meridith whitaker

signal

 

பலரும் வாட்ஸ்அப், டெலிகிராம் ஆப்களை எது சிறப்பான என்கிரிப்ஷன் என விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் மேற்சொன்ன இரண்டையும் தவிர்த்துவிட்டு சிக்னல் குறுஞ்செய்தி ஆப் பக்கமே வந்துவிடலாம். முழுக்க தகவல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் நிறுவனம் இது. மெரிடித் ஏஐ மாடல்களுக்கு தேவையான தகவல்களை நிறுவனங்கள் அனுமதியின்றி இணையத்தில் இருந்து திரட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒருவரின் அனுமதியின்றி அவரின் புகைப்படம், சென்று உணவு அருந்திய உணவகம், தங்கிய ஹோட்டல் பற்றிய தகவல்களை சேகரிப்பது தவறு என்று கூறினார். செய்திகளை மட்டுமல்ல வீடியோக்களைக் கூட என்க்ரிப்ஷன் செய்வதற்கான ஆராய்ச்சிகளை சிக்னல் செய்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்களை சிக்னல் ஆப்பும் பிற்காலத்தில் பயன்படுத்தக்கூடும். 


time weekly





 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்