இருபதாம் நூற்றாண்டில் தொடக்க கால புரட்சிக்கவிஞர் கு மோரோ! தேவதைகள் - மொழியாக்கம் மு சிதம்பரம்

 

 

 

 

 


 

 

கு மோரோ கவிதைத்தொகுப்பு
தேவதைகள்
மு சிதம்பரம்
சென்னை தமிழாராய்ச்சி நிறுவனம்

குமோரோ புரட்சி கவிதைகளை எழுதியவர். எனவே கவிதைத்தொகுப்பில் ஜென், சூபி ரக கவிதைகள் இருக்குமென யாரும் வாசிக்கவேண்டாம். அப்படி நினைத்தால் நீங்கள்தான் ஏமாறுவீர்கள். சீன கவிதைகள் பெரும்பாலும் அந்த நாட்டு புராணத்திலிருந்து உருவானவையாக உள்ளதால் அவற்றை நாம் புரிந்துகொண்டு வாசிப்பது கடினமாக உள்ளது. அடுத்து, கவிதைகளை வரிசைப்படுத்தியுள்ள விதமும் சீராக இல்லை. நூலின் தலைப்பான தேவதைகள் கவிதை ஒரு காதல் கவிதை... அதையடுத்து வரும் சில கவிதைகளும் காதல் சார்ந்தவை. அவற்றை முன்னரே வரிசைப்படுத்தினால் அதை சற்று எளிமையாக படித்துவிட்டு பிறகு ஆழமான கவிதைகளுக்கு செல்ல வசதியாக இருந்திருக்கும்.

நூலில் மொத்தம் 34 கவிதைகள் உள்ளன. அவை அனைத்துமே சீன நாட்டிற்கும், தேசப்பற்றுக்கும், புராணங்களைக் கூறுவதற்குமானவை. சில கவிதைகள் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட மாவீரர்களைப் போற்றி எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு இங்கிலாந்தை எதிர்த்து எழுபத்தெட்டு நாட்கள் உண்ணாமல் இருந்து உயிர்நீத்த தளபதி பற்றிய கவிதை.

சீனக்கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிறகு அதில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூலமொழியில் இருந்து தமிழ்மொழிக்கு நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் கவிதைகள் சேதாரமின்றி தரமாக வந்திருக்க வாய்ப்புண்டு. மூன்று ஆத்திகர்கள் கவிதை, இறையுருவை மனிதர்களின் வடிவில் காண்பர்களின் நடைமுறை வாழ்க்கையை சுருக்கமாக சொல்லிச் செல்கிறது. ஒருவகையில் அவல நகைச்சுவை போல தோன்றுகிறது. மூன்று ஆத்திகர்களும் உடலுழைப்பு தொழிலாளர்கள். ஒருவர் கண்ணாடித்துகளை அரைக்கிறார். இன்னொருவர் செருப்பு தைக்கிறார். மற்றொருவர் மீன்வலை பின்னுகிறார்.

இதையடுத்து மின்சார வெளிச்சத்தில் என்றொரு கவிதை வருகிறது. மொத்தம் மூன்று கவிதைகள் மூன்றில் தொடக்கமும் ஒன்றுதான். மின்விளக்கு ஒளிவீசிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனது மனதில் ஏன் இருள்? என்று தொடங்குகிறது. இதைத்தவிர வேறு கவிதைகள் ஈர்ப்பாக இல்லை. இவர் சீன நாட்டு கவிதை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். சீனத்திலுள்ள குவாங்துங் பல்கலைக்கழக கலைப்பிரிவு தலைவராக செயல்பட்டார். இவரது படைப்புகளுக்கு அங்கீகாரமாக சீன அரசு, பெய்ஜிங்கில் உள்ள பூங்கா ஒன்றில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இன்று மூலமொழியைக் கற்று அதில் இருந்து கவிதைகளை மொழிபெயர்க்கிறார்கள் அல்லது மொழியாக்கம் செய்கிறார்கள். அதோடு ஒப்பிடும்போது தேவதைகளின் தரம் பின்தங்கித்தான் உள்ளது.

கோமாளிமேடை டீம்


https://en.wikipedia.org/wiki/Guo_Moruo


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்