பௌத்தம் வெறும் தத்துவம்தானா? - கேள்வி பதில்கள்

 









பௌத்தம் என்றால் என்ன?


பௌத்தம் என்றால் விழித்தெழுவது என்று பொருள். பௌத்த மதத்தின் அடிப்படை தத்துவமே, மனிதர்களை விழித்தெழச் செய்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதுதான். தனது 36 வயதில் விழிப்புணர்வு பெற்ற சித்தார்த்த கௌதமர், புத்தர் என அழைக்கப்படுகிறார். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் பின்பற்றும் மதமான பௌத்தம், உருவாகி 2500 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆசியாவில் தோன்றினாலும் இப்போது அமெரிக்கா, ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்றுவருகிறது. 



பௌத்தம் என்பது வெறும் தத்துவம்தானா?


தத்துவம் என்பதற்கு அறிவின் மீதான அன்பு என்று ஆங்கிலச் சொற்களை பிரித்தால் பொருள் வரும். இதுவே பௌத்த மதத்தை சிறப்பாக சுருக்கமாக விளக்குகிறது. அறிவுசார்ந்த புரிதலை ஆழமாக்கி விரிவாக்கி அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருப்பதை பௌத்தம் வலியுறுத்துகிறது. அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாக கொண்ட பௌத்தம், வெறும் தத்துவமல்ல. அது மானுடத்தின் உயர்ந்த தத்துவம். 


புத்தர் என்பவர் யார்?


கி மு 563. இந்தியாவின் வடக்குப்பகுதியில் அரச குடும்ப வாரிசு பிறந்தது. அந்த குழந்தையின் பெயர்தான் சித்தார்த்தன். உலகின் சோகங்கள் தாக்காமல் அந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகியது. சித்தார்த்தர் தனது 29 வயதில் பல்வேறு மதம் சார்ந்த அறிஞர்களிடம் உலக உண்மைகளைக் கற்கத் தொடங்கினார். ஆனாலும், அவரின் மனதிலுள்ள கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. மனிதர்களின் துயரத்திற்கு காரணம் என்ன, அதை எப்படி கடப்பது என்பதுதான் அந்த கேள்வி. மனைவி, பிள்ளைகளை கைவிட்டு துறவறம் மேற்கொண்ட சித்தார்த்தன், ஆறு ஆண்டுகள் பல்வேறு யோகங்களை, பயிற்சியை மேற்கொண்டு இறுதியாக தனது கேள்விகளுக்கு பதிலைக் கண்டுபிடித்தார். அந்த நாள் முதலாக அவரின் பெயர், புத்தர் என்றாகியது. புத்தருக்கு நெருங்கிய முந்தைய நிலைக்கு போதி சத்துவம் என்று பெயர். அதற்குப் பிறகு நாற்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த புத்தர், எண்பது வயதில் உடல் நலிவுற்று இறந்துபோனார். இறக்கும்போது அவர் மகிழ்ச்சியாக அமைதியாகவே இருந்தார். தான் கண்டறிந்த பௌத்த மத கருத்துகளை வட இந்தியா முழுக்க பயணித்து மக்களுக்கு கூறினார். அவர்களை நல்வழிப்படுத்தினார். இதன்மூலம் அவரை வணங்கும், கருத்துகளை பின்பற்றும் பக்தர்கள் உருவாகினர் .


நன்றி!

------------------


BUDDHANET:

Buddhist Information & Education Network 

Web site: www.buddhanet.net            

Email: webmaster@buddhanet.net   

pinterest.com

கருத்துகள்