இடுகைகள்

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நக்சலைட்டாக இருந்து கல்லூரி மாணவராக மாறியவனின் கதை! ஜல்சா - பவன் கல்யாணம், இலியானா, பார்வதி மெல்டன்

படம்
  ஜல்சா இயக்கம் திரிவிக்ரம் சீனிவாஸ் இசை பான் இந்தியா ராக்ஸ்டார் டிஎஸ்பி பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு மட்டுமேயான படம். படத்தில் எந்த லாஜிக்கும் கிடையாது. அனைத்துமே மேஜிக்தான். அதைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஒருவர் இந்தப் படத்தைப் பார்க்கமுடியும். பவன் கல்யாண் கல்லூரியில் டிகிரிக்கு மேல் டிகிரியாக படித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு காதலி இருக்கிறார். அவர்தான் கமாலினி முகர்ஜி. அவர் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜின் பெண். இதனால் அவரது காதல், கல்யாணம் வரை செல்வதில்லை. இதனால் தனது காதலி கல்யாணத்திலேயே பந்திக்குப் போய் சாப்பிட்டு வருகிறார். இந்தளவுக்குத்தான் பவன் கல்யாணின் வாழ்க்கை இருக்கிறது. இப்படி இருக்கும் வாழ்க்கை, இரு பெண்களை வல்லுறவு செய்ய முயலும் கேங் ஒன்றை அடித்து துவைக்க மாறுகிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகு இரு பெண்கள் பவனை காதலிக்கிறேன் என்று சொல்லி வருகிறார்கள். அதில் பாக்கியலட்சுமி என்ற பெண்ணை பவன் காதலிக்கிறார். அவருக்கு முன்பே அந்த பெண் அவரை காதலிக்கிறாள். இந்த நேரத்தில் சிறைக்குள் இருந்தபடியே ஒரு ரவுடி நிலங்களை செட்டில் செய்து வருகிறான். அவன் பவனைத் தேடி வருகிறான்

காதலி மீது அவளது அப்பா வைத்துள்ள அதீத பாசத்தை தடுக்க முடியாத காதலனின் கதை - நுவ்வே நுவ்வே - திரிவிக்ரம் சீனிவாஸ்

படம்
  நுவ்வே நுவ்வே  இயக்குநர் திரிவிக்ரம்  தருண், ஸ்ரேயா சரண் அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தில் மகளின் காதலன் சிக்கிக்கொண்டால் என்னவாகும்?  படத்தில் நாயகன் என்பது பிரகாஷ்ராஜ்தான். படம் தொடங்கி இறுதிக்காட்சி வரை உறுதியாக நின்று நடித்திருக்கிறார். இது திரிவிக்ரம் சீனிவாசின் முதல் படம்.  படத்தில் முரணான பாத்திரங்களுக்கு இடையில் வரும் வசனங்கள் கச்சிதமானவை. அச்சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை. கதையைப் பார்ப்போம்.  அஞ்சலி, கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறாள். இவளது அப்பா தொழிலதிபர். அதைத்தாண்டி மகள் மீது பாச வெறி கொண்டவர். மகளுக்கு கொடுக்கும் பரிசு கூட பாசத்தைப் போல ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. மகளுக்கும் அம்மாவை விட அப்பாவே ஆதர்சம். மகளுக்கு, தனது குடும்பத்தினர் ஏன் அவரது மூத்த பையன் பரிசு கொடுக்கும் முன்னரே பரிசு கொடுத்து திகைப்பு ஏற்படுத்துகிறார். இப்படி இருப்பவர், அதீத பாசத்தால் திருமணம் என்று வரும்போது என்ன முடிவு செ்யகிறார் என்பதே கதை.  படத்தின் தொடக்க காட்சியே மது அருந்தியபடி பிரகாஷ் தனது நண்பரிடம் பேசும் காட்சிதான்.  அதில் தனது மகளைப் பற்றி பாசத்தோடு பேசுகிறார். மனம் கனிந்த பேச்சில் ந

குழந்தைகள் இடம் மாறினால் வாழ்க்கை என்னவாகும்? - ஆல வைகுந்தபுரம்லோ

படம்
ஆல வைகுந்தபுரம்லோ இயக்கம் திரிவிக்ரம் ஒளிப்பதிவு - பி.எஸ் வினோத் இசை - எஸ்எஸ் தமன் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வன்மம் இருக்கும். அவர்கள் அதனை சந்தர்ப்பங்களைப் பொறுத்து வெளிப்படுத்துவார்கள். இப்படத்தில் வால்மீகி என்ற கணக்காளர் தன் வன்மத்தை சரியாகப் பயன்படுத்துகிறார். இதனால் அவரது குழந்தை வசதியாகவும், முதலாளி வீட்டுக்குழந்தை இவரது வீட்டில் பல்வேறு வசைகளை கேட்டும் வளருகிறது. இதனால் இவர்களது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஆஹா சுவாரசியமான கதை. அல்லு அர்ஜூன் பின்னி எடுத்துவிட்டார். பெரும்பாலும் நாயகிகள் பாடலுக்கானவர்கள்தான். வால்மீகியாக நடித்துள்ள முரளி சர்மா அசத்தல். வைகுந்த புர நடிகர்களில் தாத்தாவாக வரும் ஏஆர்கே - சச்சின் கேடேட்கர் பிரமாதமாக நடித்திருக்கிறார். இவருக்கு மகிழ்ச்சி, பெருமை, சோகம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது. பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஜெயராம் தன் பார்வையில் தன் மகன் தன்னைப் போல வேகமாக இல்லையே நடித்துவிடுகிறார். தன் மகனை விட்டுக்கொடுக்காத தன்மையில் தபு பின்னுகிறார். வால்மீகியும், ஜெயராமும் கிள