இடுகைகள்

ஒளரங்கசீப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூமகேதுவுக்கு கிடைக்கும் சாமந்திமாலை சொல்லும் செய்தி! - இடக்கை - எஸ் ராமகிருஷ்ணன்

படம்
            இடக்கை எஸ் ராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம் ப.318 ஒளரங்கசீப்பின் இறுதிக்காலம், அவரது இறப்பு, புதிய பாதுஷா ஷா ஆலம் பதவியேற்பது, மெல்ல இந்தியா பல துண்டுகளாக பிளவுபடுவது, ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக வருவது, ஆட்சியைப் பிடிப்பது என நாவல் பயணித்து நிறைவடைகிறது. உண்மையில் இந்த நூல் அரசர்கள்,சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ள தீ்ண்டத்தகாதவர்கள் அதாவது இடக்கையர்கள் ஆகிய இருவரின் அக புற பிரச்னைகளைப் பேசுகிறது. நூலிலுள்ள முக்கியமான பாத்திரங்கள் என அஜ்யா, தூமகேது, சக்ரதார், படகோட்டி சம்பு, பிஷாடன், மந்திரி முக்தலன், மகாபிரஜா சபை, கவிஞர் ஜமீல் ஆகியோரைக் கூறலாம். இந்த பாத்திரங்கள் அனைவருமே அதிகாரத்தின் அருகே நின்று அதன் சாதக, பாதக விளைவை அடைந்தவர்கள். அதிகாரத்தின் அருகில் நிற்பவர்கள் எவருமே அந்த அதிகாரத்தால் எப்போது வேண்டுமானாலும் பலி கொடுக்கப்படலாம். ஆனால், அதை பலரும் பின்னாளில்தான் உணர்வார்கள். ஆனால் என்ன பயன்? அதிலிருந்து மீள வழி கிடைக்காது. அஜ்யா, ஒளரங்கசீப்பின் பணிப்பெண். காலை அமுக்கிவிடுவதுதான் வேலை. ஆனால் அவர் இறந்தபிறகு, மன்னருக்கு நெருக்கமாக இருந்த காரண...

இந்தியா ஒளரங்கசீப் அழித்த கோவில்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்! - பேராசிரியர் மக்கன்லால்

படம்
பேராசிரியர் மக்கன் லால், டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹெரிடேஸ் ரிசர்ச் அண்ட் மேனேஜ்மென்ட்.    நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதுவதில் ஏன் பிரச்னை எழுகிறது? வரலாறு எப்போதும் எழுதப்பட்டு பிறகு மாற்றி எழுதப்பட்டுத்தான் வந்திருக்கிறது. வரலாற்றை மூன்று விதமான ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள் . ஒன்று, பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், மார்க்சிய ஆய்வாளர்கள், மூன்று தேசியவாத ஆய்வாளர்கள். நேரு, இந்திராகாந்தி காலத்தில் இடதுசாரி ஆய்வாளர்கள் வரலாற்றை மாற்றி எழுதினர். அந்தகாலத்தில் அவர்களுக்கு வரலாற்று அமைப்பில் முக்கியமான பதவி இடங்கள் கிடைத்தன. நிதியுதவியும் செய்தனர். இப்போது நிலை மாறிவிட்டது. இடதுசாரி ஆய்வாளர்கள் இப்போது இல்லை. அவர்களின் ஆதரவாளர்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறது. எனவே வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என கூறி வருகிறார்கள்.  வரலாற்றில் ஒளரங்கசீப்  ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி கோவில்களை அழித்தார் என்று கூறப்படுவது ஏன்? ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் ஆகியோர் வரலாற்றில் மதிக்கப்படும் இடத்தைப் பெறவில்லை. ஆனால் அவர்களைப் பறிற நாம் இன்றும் விவாதம் செய்துகொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் ஒளரங்கசீ...